அதிரையில் கட்டண கால்பந்தாட்டம்.
குல் முகம்மது நினைவாக அதிரை இளைஞர்கள் நடத்தும் கட்டண கால்பந்தாட்டம் நமதூர் ஐ.டி.ஐ அருகில் கடற்கரை தெரு விளையாட்டு மைதானத்தில் 20 நாட்களுக்கும் மேலாக மிகச்சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.
நேற்று நடைப்பெற்ற 21 வது நாள் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும் எர்னாகுளம் (கேரளா) அணியும் விளையாடியது. இதில் கேரள அணி திண்டுக்கல் அணிக்கு எதிராக 7 கோல் அடித்து வெற்றிப்பெற்றது. இதற்கு முன் 6 கோல்களே அதிகபட்சமாக இந்த விளையாட்டு மைதானத்தில் அடிக்கப்பட்டு இருந்தன, இதை நேற்று கேரளா அணி முறியடித்தது. திண்டுக்கல் அணியினரால் இறுதிவரை ஒரு கோல் கூட போட முடியவில்லை. 7 க்கு 0(பூஜ்யம்) என்ற கோல் கணக்கில் எர்னாகுளம்(கேரளா) அணி வெற்றியை சுவைத்தது.
நுழைவு கட்டணங்கள் :
தரை - ரூ. 10
கேலரி - ரூ. 15
சேர் - ரூ. 20
நுழைவு கட்டணங்கள் மேலே உள்ளபடி வசூலிக்கப்படுகின்றன.
மைதானத்தையொட்டி உங்கள் கண்களுக்கு தென்படுவது புதிதாக கட்டப்பட்டு வரும் கடற்கரை தெரு பள்ளிவாசலின் மனோரா மற்றும் பள்ளியின் மேல் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள பெரிய டூம்.
-Abdul Barakath.
