அதிரை எக்ஸ்பிரஸின் சுதந்திர தினச் செய்தி
அன்பிற்கு இனிய அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களே,
அமைதியான, மதக்கலவரங்கலில்லா, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சகோதரத்துடன் (அவர்கள் யாராக இருப்பினும் சரியே; இந்தியனாக இருந்தால் மட்டும் போதும்) இறுதியில் நாம் உலகைவிட்டு செல்லும் பொழுது எதை எடுத்துச் செல்லப்போகிறோம் என்ற உயர்ந்த மனப்பான்மையுடன் வாழக்கூடிய, தீண்டாமை என்னும் கொடுந்தீயை அழித்து; மாசு படிந்துள்ள இந்த மனித உள்ளங்களில் உள்ள தூசுக்களை சுத்தம் செய்து, பார்வைக்குறைவான நம் அகக்கண்களுக்கு, இறைவன் நமக்களித்த அருட்கொடையாம் பகுத்தறிவு என்னும் கண்ணாடி அணிந்து தெளிவான உலகை காணப் புறப்படுவோம் ஓரணியில் ஆங்கிலேய ஏகாதிபத்யத்திடமிருந்து தன் குருதிகளை விலையாகக் கொடுத்து நம் முன்னோர்கள் பெற்றுத்தந்த இவ்விலை மதிப்பில்லா சுதந்திரம் என்னும் பொக்கிஷத்தை வானில் வட்டமிடும் கழுகுகளிடமிருந்து தன் பிஞ்சு குஞ்சுகளை தன் மிருதுவான இறக்கைகளுக்குள் பாதுகாக்கும் கோழிகளைப்போல் நாம் நம் இந்திய நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்போம்; சபதமேற்போம் இந்த பொன்னான தருனத்தில் உலகில் நாம் எந்த மூளையில் இருந்தாலும் சரியே. வாழ்க இந்தியா; வளர்க அதன் மைந்தர்கள்.
என உளமார வாழ்த்தும் உங்களின் என்றும் அன்புக்குரியவன்,
அதிரை எக்ஸ்பிரஸிற்காக
எம்.ஐ. நெய்னா முகம்மது
சவூதியிலிருந்து...
