உணர்ந்து கொள்வாயா எனது சோதரா!
எத்தனை நம் உயிர்கள்....
பல்துளி ரத்தம் கொட்டியே பெற்ற சுதந்திரம்.
அனால்....
காட்டி கொடுத்தவனும்,மாட்டிவிட்டவனும் தியாகி வேசம் பாரீர்.
உயிர் இழந்தவன் முஸ்லிம்,
உணவிழந்தவன் முஸ்லிம்.
உண்டு கொழுத்தவனும்,கேட்டு பெற்றவனும் உண்மை குடி மகனாம்.
ஒரு அணியில் நின்று ,
தீரத்திலே வென்ற இஸ்லாமியன் துரோகியாம்.
அன்று முதல் இன்று வரை தேச நேசர்கள் நாம்!
ஆனால்....
வேச கபட தாரிகள் நம்மை அடக்கி ஆளுகின்றார்.
இனி ஒரு விதி செய்வோம்-
வரும் சுதந்திர நாளில் நம் உண்மை சுதந்தரம் பெற சூலுறைப்போம்.
அதற்கு இன்றே தோலோடு தோல் சேர்வோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
