அதிரை பைத்துல்மாலின் சுதந்திர தின விழா
அதிராம்பட்டிணம் 'அதிரை பைத்துல்மால் ' சார்பில் அதன் அலுவலக வளாகத்தில் சுதந்திர தின் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதிரை பைத்துல்மாலின் உதவித்தலைவர் ஜனாப் K.S.M முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். ஹாஜி M.Z. அப்துல் மாலிக் 'கிராத'் ஓத, பள்ளிக்குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. செயலாளர் வழக்கறிஞர் அ. முனாப் வரவேற்புறை நிகழ்த்தினார். ஜனாப் K.S.M முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தியபின், அதிராம்பட்டிணம் காவல்துறை ஆய்வாளர் உயர்திரு M. பிச்சைப்பிள்ளை அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புறை ஆற்றினார்.
ஜித்தாவிலிருந்து வருகை தந்த அய்டாவின் தலைவர் ஹாஜி M. ரஃபி அஹ்மத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து சொற்பொழிவாற்றினார்.
விருந்தினர்களை கௌரவித்து ஹாஜி N. சிபஹத்துல்லா, ஹாஜி. H. முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சியில் தலைவர் பேரா. S. பரக்கத், ஹாஜி S.M.A செய்யது முஹம்மது புஹாரி, ஹாஜி. M.M. இப்ராஹிம், S. அப்துல் ஜலீல், K.M. அபூபக்கர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டை சிறப்பாக செய்தனர்
உதவித்தலைவர் ஹாஜி S.K.M ஹாஜா முஹைதீன் நன்றியுறை ஆற்றியபின் தேதியகீதம் பாடப்பெற்று அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பெற்றன.
விழாவை ஹாஜி C. முஹம்மது இப்ராஹிம் தொகுத்து வழங்கினார்.

