கருத்து தீவிரவாதத்திற்கு எதிராக கொதித்தெழுவோம்
இந்துமத சித்தாந்தம் வேறு, இந்துத்துவ பயங்கரவாதம் வேறு என்பதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு. ஆனால் இந்துமத சித்தாந்தமே கொடும் பயங்கரவாதம் என்பது பிராமணரல்லாத இந்துக்களின் வாதம். நமக்கு இரண்டாவது நிலைபாடு குறித்து எந்தக் கருத்தும் இல்லை. ஆனால் நாம் வேறு கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், ஒருவர் செய்யும் தவறுக்கு ஒரு மதத்தையோ அல்லது கூட்டத்தையோ பழியாக்கி விடக்கூடாது என்ற திருக்குர்ஆன் கூற்றுப்படி நமது முதல் நிலைபாடு அமைகிறது.
சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்க உளவுத்துறை, இஸ்ரேலின் மொஸாத் உளவுத்துறை, சங்பரிவார் அமைப்புகளின் கூட்டணி திரைமறைவில் செயல்படுவதாக நாம் குற்றம்சாட்டி வருகிறோம். இவர்கள் எந்தக் கொள்கையும் இல்லாத சில பெயர்தாங்கி முஸ்லிம்களை அம்புகளாகப் பயன்படுத்தும் அபாயமும் உள்ளதாக ஐயம் எழுப்பி வருகிறோம்.
பகிரங்கமாக ஆயுதப் பயிற்சி எடுக்கும் பஜ்ரங்தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து ஜாக்ரன் மன்ச், துர்கா வாகினி உள்ளிட்ட இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை ஏனோ விசாரிப்பதில்லை.
இந்நிலையில் மீடியாக்கள் சில 'முரட்டு விலங்குகளாக' முஸ்லிம்கள் மீது பாய்கின்றன. தமிழகத்தில் ஜெயா டி.வி.யும், தினமலரும், இந்தியா டுடேயும் மதக்கலவரத்தைத் துண்டும் வகையிலும், தீவிரவாதத்தைத் தூண்டிவிடும் வகையிலும் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அமைதியை விரும்பும் அனைவரும் கீழ்க்கண்ட கருத்தியலோடு சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக வழியில் தெரிவிக்குமாறு தமுமுக மாணவரணியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பார்ப்பன பயங்கரவாதத்தைத் தூண்டும் தினமலர்
போன்: (044) 28523715, 28511303, 28592814 பேக்ஸ்: (044) 28592815
மதவெறியைத் தூண்டும் இந்தியா டுடே
போன்: (044) 28478525, 28478544 பேக்ஸ்: (044) 28472178
இந்துத்துவ தீவிரவாதத்தை வளர்க்கும் ஜெயா டி.வி.
போன்: (044) 43960000, 43960144 பேக்ஸ்: (044) 43960145

