இதைப் படிக்காதீர்கள்!!!!!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
அல்லாஹ் நமக்களித்த பன்னிரெண்டு மாதங்களில், மிகவும் புனிதமும், பாக்கியமும் நிரம்பப்பெற்ற ரமழானை அடையப் பெற்றிருக்கிறோம். அல்லாஹ்வுடைய அன்பையும், அருளையும் அதிகமாகப் பெற்றுத்தரக்கூடிய இம்மாதத்தை, முழுமையாக பயன்படுத்தி, நன்மையான காரியங்கள் நிரம்பச் செய்து, நற்பேற்றினை அடைந்துக் கொள்வோமாக! ஆமீன்...
கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், இம்மாததின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் நன்மைகள் தேடுவதற்கு பயன்படுத்த வேண்டும். அதிகம் அதிகமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்தும் நம்மை நாமே தூரமாக்கிகொள்ள வேண்டும்.
கடந்த சில நாட்களாக நம் சமுதாயத்தில், ஏன்?, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது ஒரு தமிழ்க் காவிப் பத்திரிகையின் காவித்தனமான செயல்., தினமல(ர்)ம் என்னும் இந்த ஈனப் பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியர்களின் நோக்கம் யாதெனில், பெருமானார் அவர்களை கேலிச் சித்திரமாக வரைவதன்று. சத்தியமாக யாராலும் எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் அவர்களை அவர்களின் உயரிய நிலையிலிருந்து சிறிதும் குறைத்திட முடியாது., மாறாக, இந்த ஈனப் பிறவிகளால் முடிந்தது எல்லாம் நம் சமுதாய மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, நம்மை நம் வணக்க வழிபாடுகளின் பக்கம் செல்லவிடாது, நம் கவனங்களை திசைத் திருப்புவது தான் என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு உணர வேண்டும். நம் இறைத் தூதர் அவர்களைப் பற்றி விமர்சித்தால், உலக முஸ்லிம்கள் அனைவரும் கொதித்து எழுவார்கள் என்பது அவர்கள் நன்கு உணராமல் இல்லை. டென்மார்க் எதிர்ப்பு ஒரு மிகப்பெரிய உதாரணம். இருந்தும் இப்படி செய்கிறார்கள் என்றால் அவர்கள் நோக்கம் கேலி பண்ணுவதன்று, மாறாக,பிறிதொன்று என்பதை நாம் உணர வேண்டும். 'அதற்காக இப்படிப்பட்டவர்களை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதா?' என கேள்வி எழலாம். இல்லை, விடக்கூடாது தான். அவர்களை சட்டத்தின் துணைகொண்டு எதிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் ஒருமித்த குரலில் எதிர்ப்பைத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால், நம் எதிர்ப்பை போராட்டங்களாகவும், ஊர்வலங்களாகவும் ஆக்கி, பொன்னான இந்த ரமழானை வீணடிக்க வேண்டாம் என்பது என் அசைக்க முடியாத எண்ணம். அதை எல்லாம் விட முக்கியமாக, அவர்களது நேர்வழிக்காக வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சவேண்டும். இது தான் நம் இறைத்தூதர் நமக்குக் காட்டித்தந்த வழிமுறை ஆகும். கல்லாலும், சொல்லாலும் காயப்படுத்திய தாயிஃப் நகர மக்களுக்காக, அவர்களுக்கு நேர்வழிகாக நம் காருண்ய நபி துஆ செய்தார்கள் என்பதை நான் இங்கு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனது நேர்வழியில் நடத்துவானாக, ஆமீன்.
பின் குறிப்பு: இந்த தளத்தில் எனக்கு இதுவே முதல் பதிப்பு. என் படைப்புகளில் இருக்கும் குறைகளை எனக்கு சுட்டிக்காட்டினால் உங்கள் விமர்சனங்கள் என் எழுத்துக்களை நிறுத்துப் பார்க்க எடைக் கற்களாய் உதவும்.
------அதிரை அருட்புதல்வன்
