நாட்டில் அமைதியும். வளங்களும் ஓங்கட்டும்!
தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தி:
இஸ்லாத்தின் இரு பெருநாள்களில் ஒன்றான ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் பெருமக்களுக்கு நெஞ்சங்கனிந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மைக் காலமாக நாம் கண்டுவரும் பயங்கரவாதச் செயல்கள் வேரொடு ஒழிக்கப்பட வேண்டும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மைச் சமுதாயங்களைக் குறிவைத்து நடத்தப்படும் வன்செயல்களும், விஷமப் பிரச்சாரமும் ஒட்டுமொத்தமாக களையப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடியும், விலைவாசி உயர்வும் அடித்தட்டு மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் சூழலில், ஈகைப் பண்பு நாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும்.
ஈகையை கட்டாயக் கடமையாக ஆக்கியிருக்கும் மார்க்கம் இஸ்லாமாகும்.ஈகைப் பண்பால் இதயங்கள் மலர, வறுமை ஒழிய, செழுமை பெருக, அமைதி தவழ, அநீதிகள் அகல, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் சகோதரர்கள் என்ற ஒற்றுமை உணர்வு ஓங்கி வளர எல்லோரையும் படைத்த ஏக இறைவனைப் பிரார்த்திக்கிறேன், எல்லோர்க்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
