எழுதுவீர்,எழுதுவீர்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.சகோதரிகளே ஆக்கங்கள் படித்து கருத்து சொன்னால் தொடர்ந்து எழுத ஆர்வம் ஏற்படும். நல்லதை பாராட்டவிட்டாலும்,தவறைத்திருத்தி கொள்ள கருத்துக்கள் உதவும். நம்மைத்தவிர பிற மதத்தினர் அதிகம் படித்து மீடியாவில் தாக்கம் ஏற்படுத்துகின்றனர்.நாமோ ஊர் பற்றிய செய்திகளை மட்டுமே படித்துவிட்டு நல்ல பல ஆக்கங்களை கண்டு கொள்வதில்லை.அப்படி நாங்கள் தவறாக எழுதியிருப்பின் சுட்டிக்காட்டலாமே?(அதற்காக குதர்கமா- காழ்புணர்சி கொள்ளக்கூடியவகையில் திட்டியும் தீர்க வேண்டாம்,தலையில் தூக்கியும் ஆட வேண்டாம்). நடுனிலை கொண்டு அல்லாஹுக்கு அஞ்ஜி தட்டிகொடுக்கலாமே? பல புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதில் நமக்கும் பங்கு உள்ளதை மறவ வேண்டாம்.புதிய எழுத்தாளர்களைஉருவாக்கவும்,இப்பொழுது எழுதிவரும் எழுத்தர்களை ஊக்குவிப்பதிலும் அதிரை எக்ஸ்பிரஸின் பணி போற்றத்தக்கதாக இருக்கிறது.
தயக்கம் வேண்டாம் சகோதர சகோதரிகளே,புனைப்பெயர் கொண்டேனும் உங்கள் ஆக்கம் பதிந்து சமுதாயம் ஊக்கம் பெற எழுதுவீர்,எழுதுவீர்.
-- சகோ.முஹம்மதுதஸ்தகீர்
