ஊர்சுத்தி உமரின் பொன்மொழிகள்
என்றைக்கோ கிடைக்கப்போகும் US விசாவைவிட
இன்றைக்குக் கிடைக்கும் UAE விசாவே மேல்!
Credit Card ஐ வைத்து Cell Phone வாங்குவதைவிட
Cell Phone ஐ வைத்து Credit Card கடனை அடைப்பதே மேல்!!
கல்ப் ரிட்டர்னாக இருந்தாலும், யூரோப் ரிட்டர்னாக இருந்தாலும்
வெள்ளை வேட்டி மூனுமாசத்துல பழுத்துடும் ஜாக்கிரதை!
சட்டியில் வைத்து கீழே சூடாக்கினால் பிராச்சப்பம்
மேலே சூடாக்கினால் பிஜ்ஜா (அப்பம்?)
என்னதான் பணக்கார வீட்டுக்கல்யாணம்னாலும்
பந்தல் கீத்துல/தகரத்துலதான் போடமுடியும்.
என்னடா நல்லாத்தானே ஊர்சுத்திக்கிட்டு இருந்தார்! என்னாச்சு இந்த மனுசனுக்கு தத்துவம்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாருன்னு யாரும் என்னை தப்பா எடுத்துக்கக் கூடாது.
வட்டி வாங்காதே-கொடுக்காதே-சாட்சி சொல்லாதே-உடந்தையாக இருக்காதேன்னு படிச்சு படிச்சு சொல்லியும் இந்தா பாருங்க நல்லாத்தானே இருக்கோம். வட்டி இல்லாம உலகம் இயங்குமா? என்றெல்லாம் தத்துவம் பேசியவர்கள், லேமென் பிரதர்ஸ் மஞ்சக்கடுதாசி (Insolvency) கொடுத்தப் பின்னாடி உலகநாடுகளில் இப்படித்தான் பலரும் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்களாம்.
வரவுக்குமீறி வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் டிமிக்கி கொடுத்ததால் வங்கிகள் நிலைகுலைந்து போயுள்ளார்கள்."உங்கள் தேவையே எங்கள் சேவை" என்று 'மானாட மயிலாட' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்தவர்களெல்லாம் திக்கு முக்காடிப் போகுமளவுக்கு வங்கிகள் மீதான நம்பிக்கை சீர் கெட்டுள்ளது. ஏதோ இரண்டு பொருளாதார மேதைகள் (மன்மோகன் சிங், ப.சிதம்பரம்) மத்திய ஆட்சியில் இருப்பதால் நம்நாட்டு வங்கிகள் ஓரளவு தாக்குப் பிடித்துள்ளன.
பாவம்! அமெரிக்காவின் கடைக்கண் பார்வைக்காக கண்ணைமூடி தலையாட்டி அமெரிக்காவுக்கு வால் பிடித்து அமெரிக்கா பின்னாடி சென்ற ஐரோப்பிய,கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரம்தான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். இனி, அடுத்தடுத்த நாட்களில் நம்மள மாதிரி ஐரோப்பிய, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் வெட்டித் தத்துவம் சொல்லிக் கொண்டு திரியப்போகிறார்கள்.
உப்பைத் தின்றவன் தண்ணிக் குடிச்சுத்தான் ஆகனும்! நல்லாக் குடிங்கடே!!
-இப்படிக்கு-
www.ஊர்சுத்தி.உமர்