காக்காமார்களே! நல்ல காலம் பொறக்குமா?
நம் ஊர் விரிவடைந்து வருகிறது.சி.எம்.பி லைன்,ஷிபா இப்படி ஒரு பக்கம்,மேலதெரு மறுபுறம்,கடற் கரை தெரு இப்படி ஊரின் எல்லை விரிவடைந்து செல்கிறது.மக்கள் பெருக்கத்தால் வாகனங்களின் தேவையும் அதிகரிக்க,ஆட்டோ சவாரிக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
ஆனால், அதற்க்கு சந்தோசம் ஏற்படவேண்டிய தருணத்துக்கு பதிலாய் எரிச்சல் தான் ஏற்படுகிறது.காரணம்.
1)ஆட்டோ ஓட்டும் பெரும்பாலோர் கெட்ட நடத்தை உடையவர்களாக உள்ளனர்.இதனால் பெண்கள் சீரழகிறார்கள்.வருமானம் போய் விடும் என்ற பயத்தில் ஆட்டோ முதலாளிகள் இதை கண்டு கொள்வதில்லை.டிரைவர்களை கண்டிப்பதில்லை.அகால நேரத்திலும் பட்டுக்கோட்டை என ஊர் சுற்றும் நிலை பெருகிவருகிறது.
2) பத்து ரூபாய் வசூலிக்க வேண்டிய இடத்துக்கு,குறைந்தது நாற்பது ரூபாய் என்ற கணக்கில் வசூலிப்பது.இதற்கு பெட்ரோல் விலையை காரணம் காட்டினாலும்,அதற்கு செலவாகும் தொகை மிக குறைவே,அவர்கள் வசூலிக்கும் தொகையோ பல மடங்கு அதிகம்.
3)குதிரை வண்டிகளும் இல்லாத காரணத்தால் ஏழைகளுக்கு ஆட்டோ பயணம் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு உள்ளது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்!
1)நேர்மையான,நல்ல ஒழுக்கமுள்ள சகோதரர்கள் ஆட்டோ ஓட்ட முன் வர வேண்டும்.
2)நியாயமான முறையில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
3)எல்லா தெருக்களையும் இணைக்கும் வண்ணம்,ஒரு மினி பேரூந்து ஏற்பாடு செய்து,நல்ல ஒழுக்கமுள்ள டிரைவரை ஏற்பாடு செய்து,மிக குறைந்த கட்டணத்தில் உதாரணமாக,ரூபாய் ஐந்து என டிக்கட் நிர்ணயம் செய்யலாம்.(point to point). வயதான ஆண்,பெண்கள் அனைவருக்கும் இலவசம் அல்லது அறை டிக்கட் நிர்ணயம் செய்யலாம்.
4)மருத்துவமனைகள்,ஜும்மா பள்ளிகள்,மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு அதிகம் சுற்றி வரக்கூடியதாக ஆக்கி,(frequent travel) சேவை செய்தால் நிறைய மக்கள் பயன் பெறலாம்.
5)இந்த பேரூந்தை அதிரை பைதுல்மாலோ,ஏதாவதொரு இயக்கமோ,அல்லது சங்கமோ தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து இயக்கலாம்.(தனி நபர் இயக்கினால் காசு பார்ப்பாங்க காக்கா)
இது சரி வருமா?இந்த எம் கருத்து சரியா?உங்கள் கருத்து என்ன?சொல்லுங்க காக்காமார்களே!
