video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு நவம்பர் 7 அன்று சென்னையில் நடைபெற்றது. பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர்களும் கலந்துக்கொண்டனர்.

இதில் டிசம்பர் 6-ல் என்ன வகையான போராட்டத்தை அறிவிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளில் இறுதியாக ரயில் மறியல் போராட்டத்தை வீரியத்தோடு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டங்கள் நடத்துவது என்றும் ரயில்கள் செல்லும் ஊர்களில் மறியல் நடத்துவது என்றும், ரயில்கள் இயங்காத இடங்களில் ரயில் நிலையங்கள் செயல்பட்டால் அங்கு முற்றுகைப் போராட்டமாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.இரண்டும் இல்லாத மாவட்டங்களில், பக்கத்து மாவட்டங்களோடு இணைந்தோ அல்லது அம்மாவட்டங்களில் உள்ள மற்றொரு பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களிலோ போராட்டத்தை நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

அதோடு, பாபர் மஸ்ஜித் போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும் முயற்சியாக, கடந்த 2004 - டிசம்பர் 6-ல் தமுமுக டெல்லியில் பேரணி - மாநாடு நடத்தியதைப் போல, இவ்வருடமும் இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்பத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோழமை முஸ்லிம் அமைப்புகளுக்கு கடிதம் எழுதி, அந்தந்த மாநில தலைநகரங்களில் அவர்களின் சக்திகேற்ப போராட்டத்தை நடத்த அறிவுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், தெருமுனைப் பிரச்சாரங்கள், வாகன ஒலிபெருக்கி பிரச்சாரங்கள், களப்பணி ஆகியவற்றை போர்கால அடிப்படையில் தொடங்கிட வேண்டும் என இயக்க தோழர்களை தலைமைக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது தவிர மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக மாநாட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பிப்ரவரி 7, 2009 அன்று புதிய அரசியல் கட்சியின் துவக்க விழாவை நடத்துவது என்றும்; அதை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி தென்னிந்தியாவை வியப்பில் ஆழ்த்துவது (இன்ஷாஅல்லாஹ்) என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
------------------------------------------------
04.11.2008 பாண்டிச்சேரியில் அன்று, மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கக் கோரியும்,குண்டு வெடிப்பு வழக்குகளை CBI யிடம் ஒப்படைக்கக் கோரியும்,குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சங்பரிவார் தீவிர வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டத்தவறிய மீடியாக்களை கண்டித்தும் காலை 11 .00 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. M.S.. சுலைமான். கண்டன உரையாற்றினார். மற்றும் புதுவை மாநில நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
------------------------------------------------

இன்ஷா அல்லாஹ் அஜ்மன் TNTJ நடத்தும் இரத்த தான முகாம்!

நாள் : 14-11-2008 – வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 4 மணி முதல் 8 மணி வரை

இடம் : அஜ்மான் மியூசியத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈத்கா திடல்

உதிரம் கொடுப்போம் ! உயிரை காப்போம் !!

சிறந்த தானத்தில் பங்கெடுக்க உங்களை அன்புடன் வரவேற்கிறது

அஜ்மன் -TNTJ
------------------------------------------------

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 11/09/2008 06:16:00 AM. Filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்!

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery