தமிழகத்தை மிரட்டும் நிஷா புயல்!
வங்க கடலில் உருவான புயலை தொடர்ந்து, தமிழக முழுவதும் பலத்த மழை கடந்த 4 நாட்களாக இடைவிடாது பெய்து வருகிறது, இதனால் தமிழகமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.புயல் நாகப்பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிகளவு மழைப் பெய்து வருகிறது.
தலைநகர் சென்னையில் பலமான காற்றுடன் நல்ல மழைப் பெய்து வருகிறது, ஆங்காங்கே ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது மற்றும் பெரிய பெரிய மரங்களும் விழுந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடக்கவிருந்த பல பழ்கலைக்கழக தேர்வுகள் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நமதூரை (அதிரையை) பொருத்தவரையில் கடந்த 3 நாட்களாக மின் வினியோகம் இல்லை. பல தெருக்களில் மரங்கள் சாய்ந்துள்ளது, மின் கம்பங்களும் மழையால் சாய்ந்து கிடக்கின்றன. அதிகளவு காற்றுடன் நல்ல மழைப் பெய்து வருகிறது. காலேஜ் ரோட்டில் (ECR) உள்ள கால்வாய்களில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊரில் உள்ள எல்லாக்குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிமாக உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான பகுதிக்குச்செல்லுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளார்கள். சென்னையில் இருந்து நமதூருக்கு புறப்படும் தனியார் சொகுசு பஸ்கள் அனைத்தும் கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்படவில்லை.
சற்றுமுன் கிடைத்த தகவலின் படி நிஷா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்புயல் காரைக்காலில் இன்று காலை கரையைக் கடந்ததுள்ளது, முன்னதாக இந்தப் புயல் சி்ன்னம் வேதாரண்யம்-நாகப்பட்டினம் இடையே நேற்றே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நகரவில்லை. ஒரே இடத்தில் நிலை கொண்டது. இந் நிலையில் இப்போது புயல் நாகப்பட்டிணம் கரையோரமாக நகர ஆரம்பித்தது பின்னர் அது மேலும் வட மேற்காக நகர்ந்து காரைக்காலில் இன்று காலை கரையைக் கடந்ததுள்ளது.
-Abdul Barakath.
