இல்லத்தரசிகளின் வேண்டுகோள்
பிஸ்மில்லாஹ்
- அதிரை எக்ஸ்பிரஸாருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் வாசகர் (வசாகிகள் இருக்கிறார்களோ இல்லையோ இருந்தால் அவர்களுக்கும்) எனது அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்). ஊர் சுத்தி உமர் காக்கா அவர்களோ அரசியல் பற்றி வெகு விமர்சையாக எழுதுகிறார்கள், தஸ்தகீர் அவர்களோ காவிகளை தோலுரித்து கவிதையாக் கட்டுரை எழுதுகிறார், அபு ஹசன் அவர்களோ இனிய மார்க்கமாகிய இஸ்லாத்தைப்பற்றியும் அரசியலுடன் எளியவர்களும் வியக்கியானம் படிப்பவர்களுக்கு செப்பையில் அடிப்பது போலவும் கட்டுரையிலும் அரட்டையிலும் வந்து விளாசிட்டு போறார், அபூ அஸீலவோ கார்த்திகை மாசத்து மழை போல் கோடை இடியுடன் அவ்வப்போது வந்து செல்கிறார். ஆனால் ஊரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டா இத்தளத்தில் எல்லோரும் வெளிநாட்டில் இருந்து கொண்டுத்தான் கட்டுரைகள் எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது.ஏனென்றால் யாரும் ஊரில் வீட்டுப்பெண்களான எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை யரும் எழுதவில்லை ஆதலால்தான் எனக்கு இந்த துணிவு வந்தது அல்லாஹ்வின் துணையுடன் எழுதுகிறேன் தவறுகள் இருப்பினும் அல்லாஹூக்காக மண்ணித்துக் கொள்ளவும்
இல்லத்தரசிகளின் பிரச்சனைகளில் முதலிடம் பெறுவது கேஸ் சிலிண்டர் இரண்டு மதத்திற்கு ஒருமுறைதான் பதியப்பட்டு மீண்டும் இரண்டு வாரங்கள் கழித்து தரப்படுகிறது வீட்டில் கேஸ் முடிந்தவுடன் ஏஜென்ஸிக்கு போன் செய்து கேட்டால் ஒழுங்கற்ற பதில் தரப்படுகிறது. எனக்கு கிடைத்த பதில் உங்கள் வீட்டில் இரண்டு நபர்கள் தானே இருக்கிறீர்கள் ஏன் அவசரபடுகிறீர்கள் என்கின்றனர், கேஸ் சிலிண்டருக்கு 1986ல் நான் பதியும் போது நாங்கள் உண்மையாக இருவர்தான் 22வருடமாக நங்கள் என்ன குழந்தை எதுவும் பெற்றுக்கொள்ளாமல் மலடியாகவக இருந்துவிட்டோம் நாங்கள் இருவர்தான் என கணிக்க இவர்கள் யார் நகர் புறங்களில் இதைபோல் கேள்வி கேட்டுவிடமுடியுமா?
அதிராம்பட்டினத்திற்கு என்று தனியாக கேஸ் ஏஜென்ஸி அவசியம் வேண்டும் கேஸ் வந்த புதிதில்(1985) பட்டுக்கோட்டை தாலுக்க மக்கள் தொகையில் 25 சதவீதம் வீட்டில் மட்டும் தான் கேஸ் அடுப்பு உபயோகித்தனர் ஆனால் இன்றோ அரசாங்கம் இலவசமாக கேஸ் அடுப்பு சிலிண்டர் கொடுக்கும் அளவுக்கு எங்கும் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள் இன்று 100 சதவீதம் முழுமையாக பயண்பாட்டிற்கு வந்துவிட்டது இன்னும் காலம் தாமதிக்காமல் அதிரையில் உள்ள பல மாறுபட்ட இயக்கத்தினர் இல்லத்தரசிகளான எங்களுக்காக நல்லமுடிவு எடுக்கவேண்டுகிறோம்.இதனால் பயன் அடையபோவது குடும்பதலைவர்கள், மேலும் அவர்களின் பணமும், நேரமும்தான்.
இல்லத்தரசிகளுக்காக
- உம்முஅப்துல்ரஹ்மான்

