ஒரு மருத்துவ ஸ்பெஷல் அலசல் :நடங்க நடங்க நடந்துகிட்டே இருங்க!!!
நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே, மரணத்தை எளிதில் ஏமாற்றி விடலாம். இது, புதிய மருத்துவ ஆய்வு ஒன்றின் முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.
ஹாவர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், கடந்த 32 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர்களின் அன்றாட வாழ்க்கை முறையை கண்காணித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில், தினமும் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றால் வாழ்நாளை வெகுவாக நீட்டிக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், புகைப் பழக்கத்தையும், உடல் பருமனாவதையும் தவிர்க்க வேண்டியது அவசியம் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. இந்த ஆய்வு தொடர்பான முழு விவரங்கள், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
************
சயன்ஸ் என்ன சொன்னாலும்,எல்லாம் அல்லாஹ்வின் கைகளில் உள்ளது.மரணம் நோயாளிக்கும் வரும்,ஆரோக்கியமானவனுக்கும் வரும்.
-------------------------------------------
இந்தியாவில் 72.5 சதவீதம் குழந்தைகள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சமீபத்தில் அந்த அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
ஒரு வயது முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளே பெரும்பாலும் இரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில், அதாவது 43 சதவீதம் எடை குறைவான குழந்தைகள் உள்ளனர்.குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு நோய்களை குணமாக்க முடியும். குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம் ஆகியவற்றை சரியான முறையில் பராமரிப்பதன் மூலம் நோய் தொற்றை தடுக்கலாம்.
****************
தாய்ப்பாலின் அவசியம் குறித்து திருக்குரான் எப்போதோ கூறிவிட்டது.எந்த மத வேதத்திலும் கூறப்படாத விஷயங்களில் இதுவும் ஒன்று,மேலும் இது திருக்குரான் ஏக இறைவனாகிய அல்லாஹ்விடமிருந்து வந்த தெளிவான வேதம் என்பதற்கு சான்றாகவும் உள்ளது.
------------------------------------------------------------------
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்திருப்பதால், முளைக்கீரையை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஒரு அவுன்ஸ் அளவிலான முளைக்கீரையில், 800 மில்லி கிராம் அளவிலான வைட்டமின் 'ஏ' உள்ளது. அதோடு, வைட்டமின் பி1 சத்து 10 மில்லிகிராமும், பி2 சத்து 30 மில்லிகிராமும் நிறைந்துள்ளது; வைட்டமின் சி சத்து 50 மில்லி கிராமும் இருக்கிறது.
அத்துடன், கால்சியம் சத்து 145 மில்லி கிராம் அளவிலும், இரும்புச் சத்து 6.1 மில்லி கிராம் அளவிலும் இந்தக் கீரையில் அடங்கியிருக்கிறது. குழந்தைகள் தாய்ப்பால் பருகுவதை நிறுத்தி, உணவு உட்கொள்ளத் தொடங்கியதும், முளைக்கீரையை நன்கு மசிய கடைந்து அரைத்து சேர்த்துக் கொடுப்பது சாலச் சிறந்தது.
கண் பார்வைத் திறனுக்கு இந்த வகைக் கீரை மிகுந்த பலனையளிக்கிறது. சரும நோய்களில் இருந்து தவிர்க்கவும் வழிவகை செய்கிறது.
***************
அல்லாஹ்வின் ஒவ்வொரு படைப்பிலும் அதிசயமும்,உணவும்,மருந்தும் இருக்கிறது.ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ற வகையில் அல்லாஹ் ஒவ்வொரு வகை காய்கறி,கனி வகைகளை நமக்கு தருகிறான்.அதையே முறையாக பேணி,உண்டு வந்தால் அதனதன் சீசனில் ஏற்படும் பருவ மாற்றங்களில் ஏற்படும் உபாதைகள் வராமல் அல்லாஹ் உதவியால் தடுக்க முடியும்.
