மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாத்தை ஏற்றார்?!
அமெரிக்க பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாத்தை ஏற்றதாக பிரபல பத்திரிக்கைகளை மேற்கோள் காட்டிய மடல்கள் மின்மடல்களிலும் மடற்குழுமங்களிலும் வலம் வருகின்றன். செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்காக மைக்கேல் ஜாக்ஸனின் இணைய பக்கத்திற்குச் சென்று பார்த்தால், THRILLER பாடல் ஆல்பத்தின் விளம்பரமே தெரிகிறது! மைக்கேல் ஜாக்சன் குறித்த வதந்திகளுக்குப் பஞ்சமில்லை என்றாலும் அவர் இஸ்லாத்தை ஏற்றது குறித்து பிரபல பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டிருப்பதால் ஓரளவு நம்பக்கூடியதாகவே இருக்கிறது. எப்படியோ மைக்கேல் இஸ்லாத்தை ஏற்றது உண்மையாக இருப்பின் மனதார வாழ்த்தி வரவேற்போம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! சமீப வருடங்களாக மைக்கேல் ஜாக்ஸன் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து வழக்குகளுக்கும் ஆளாகி வந்துள்ளார். தன்னுடைய பாப் இசை ஆல்பம் வெளியீட்டு ஒப்பந்தத்தை மீறியதாதாக பஹ்ரைன் இளவரசர் ஏழு மில்லியன் பவுண்ட்ஸ் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கும் சூழலில் மைக்கேல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டச்செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. மைக்கேலின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்ஸன் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கைநெறியாக ஏற்று ஹஜ்ஜுக்கு சென்று திரும்பியபோது பல்வேறு வழக்குகளால் மனம் சோர்ந்து போயிருந்த மைக்கேல் ஜாக்ஸனுக்கு குர்ஆன் மொழிபெயர்ப்புடன் இஸ்லாமியப் புத்தகங்களையும் பரிசாக வழங்கியதோடு இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்ததாகவும் சொன்னார். R முன்பு இங்லாந்தின் பிரபல பாப் பாடகர் CAT STEVENS இஸ்லாத்தில் இணைந்து யூசுப் இஸ்லாம் என்று பெயர்மாற்றி முழுநேர இஸ்லாமிய அழைப்பாளராக இருப்பதையும் குறிப்பிட வேண்டும். மைக்கேல் ஜாக்ஸன் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றபோது இவரும் உடனிருந்ததாகச் சொல்லப் படுகிறது. தனக்கெனதனி ரசிகர் பட்டாளத்துடன் பஞ்சமில்லா சொத்து,சுகம், புகழ் இருந்த போதும் அவற்றினால் கிடைக்காத மனநிம்மதியும் ஆதம திருப்தியும் இஸ்லாத்தில் இருப்பதை அடையாளம் கண்டு கொண்டார்கள். பிறப்பால் முஸ்லிமாகி,விரும்பியோ அல்லது விரும்பாமலோ முஸ்லிம் பெயருடன் நடமாடிவரும் நம்மில் எத்தனைபேர் அல்லாஹ் வழங்கியுள்ள அருகொடைகளிலெல்லாம் சிறந்த அருட்கொடையான 'முஸ்லிம்' என்ற அடையாளம் குறித்து சிந்தித்திருப்போமா? மைக்கேல் ஜாக்ஸனும் கேட் ஸ்டீவனும் இஸ்லாத்தில் அடைக்கலமாக நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்களாயின.எந்தவொரு முயற்சியும் செய்யாமலேயே பிறவிமுதல் முஸ்லிமாகியுள்ளோம்! அல்ஹம்துலில்லாஹ்! அமெரிக்க அரசு வழங்கும் சிறப்புப் பாதுகாப்புடன் தனது சொந்த பாதுகாப்பு அதிகாரிகளைமீறி மைக்கேலின் பண்ணை வீடுவரைச் சென்று எந்தவொரு முஸ்லிம் படைத்தளபதியும் வாளேந்திப் போரிட்டு மைக்கேலை கட்டாய மதமாற்றம் செய்யவில்லையே! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது, முஸ்லிம் மன்னர்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தார்களென இதுவரை இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் மனம்போனபோக்கில் பொய்ச்செய்திகளை பரப்பிவந்த உலகமகா ஊடகங்களே இனியேனும் உங்கள் பசப்புரைகளுக்கு முடிவுரை எழுதுங்கள். இஸ்லாம் பழமைவாதிகளுக்கே உரிய மார்க்கம் என்ற உடைந்த இசைத் தட்டாக ரீங்காரமிட்டவர்களே இனியேனும் உங்கள் சுருதியை மாற்றிக் கொள்ளுங்கள்! பின்குறிப்பு: வழக்கமான வதந்திகளுடன் மைக்கேல் ஜாக்ஸன் மீக்காயில் என்று பெயர்மாற்றி முஸ்லிம் ஆனதாகச் சொல்லப்படும் இச்செய்தியும் வதந்தியாக இருப்பின், இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ யாதொரு இழப்பில்லை. "மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழியில் நாம் செலுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கிறான்" (குர்ஆன்-029:069) وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ <<<அபூஅஸீலா-துபாய்>>>
