மழை! மழை!! மேலும் மழை!!!
கடந்த 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொட்டி வரும் கன மழையல் 15 மாவட்டங்கள் கடும் மழையை பெற்றுள்ளன.இதில் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் மாவட்டஙகளில் வெள்ளம் கரை புரண்டதால் பல பகுதிகள் ஐந்தாவது நாளாக தத்தளிக்கின்றன.
கடலூர், நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றன. செல் போன்ரீசார்ச் செய்ய முடியாததால் தகவல் தொடர்புகள் குறைந்துள்ளது. நான்கு நாட்களுக்கு பின்பு வெள்ளிக்கிழமை அன்று தான் கடைகள் திறக்கப் பட்டுள்ளது.பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு தொடர்கிறது.கோடியக்கரையில் வெள்ளம் புகுந்ததால் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் இறந்துள்ளன. அப்பகுதி வாழ் மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். தோப்புத்துறையில் பல இடங்களில் குளங்கள், ஏரிகள் உடைந்துள்ளன.
நாகை, வேதாரண்யம் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து இயங்கவில்லை. வேதாரண்யம் பகுதியில் 42 செ.மீ மழை பதிவானதால் அப்பகுதி தீவுப் போல் உள்ளது.முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம், கட்டிமேடு, நாச்சிக்குளம், பாமணி, திருப்பூண்டி, தலைஞாயிறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்க்கியுள்ளன. ஆறுகளில் வெள்ள நீர் கரையை உடைத்து பாய்ந்து செல்கிறது.முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் முழங்கால் அளவுக்கு மேலே தண்ணீர் நிற்கிறது. ஆசாத் நகர் பள்ளிவாசலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை காரைக்கால், பொறையார், சீர்காழி பகுதிகளில் வயல்களில் வெள்ளநீர் வடியாமல் இருப்பதால் பயிர்கள் அனைத்தும் மூழ்கியுள்ளன.சிதம்பரம், லால்பேட்டை, காட்டு மன்னார்குடி பகுதிகள் மிக கடுமையாக வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை முழுக்க வெள்ள நீரால் மூழ்கியுள்ளது. சென்னை-வேளாங்கண்ணி பேருந்துகள் தங்கள் சேவைகளை மூன்று நாட்களாக நிறுத்தியுள்ளன. வீராணம் ஏரி நிரம்பி வழிவதால் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
நிஷா புயலால் பெரும் சேதம் இல்லையென்றாலும், மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை கடலூர் அருகே நீடிப்பதால் மழை வெள்ளிக்கிழமையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. வெள்ளி அன்று நாகை-திருவாரூர் மவட்டத்தில் லேசான வெயில் அடித்தாலும், மாலை நேரத்தில் மழை மேகங்கள் மீண்டும் மிரட்டுகின்றன.திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கும்பகோணம், ராஜகிரி, பண்டாரவடை, அய்யம்பேட்டை, பாபநாசம், திருவிடை மருதூர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதில் 50 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி தஞ்சை சாலை துண்டிக்கப் பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் அனைத்தும் உடைப்பெடுத்துள்ளன. கூத்தா நல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, அடியக்க மங்கலம், கொடிக்கால்பாளையம் என எங்கும் வெள்ள நீர் முழங்கால் அளவுக்கு மூடி, தற்போது குறைந்து வருகிறது.நாகூர் தெத்திப் பகுதியில் வெள்ளநீர் புகுந்து மக்கள் மவ்லவி அப்துர் ரஹிம் நினைவு பேரிடர் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
______________________________________________________
சென்னையில் இருந்து:: மேலும் அத்தியாவாசியப் பொருள்களும் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
சென்னையில் இருந்து:: மேலும் அதிரையில் முருக்கு க்கு செம கிராக்கியாம்
சென்னையில் இருந்து:: அதிரையில் மொபைல் பேட்டரி சார்ஜ் செய்ய 10 ரூபாயாம்
Abu: ஜெனரேட்டர் மூலம் மின் சப்ளை செய்து வாட்டர் டேங்க் நிரப்ப ஒரு வீட்டுக்கு ரூ.250 வசூலிக்கப்படுகின்றதாம்
Abu: நமது ஊரின் நிலமை எப்படியாகிவிட்டது பாருங்கள்
Abu: அல்ஹம்துல்லில்லாஹ், நமக்கு பரவாயில்லை. பல ஊரில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து இருப்பதற்கு இடமில்லாமல் பள்ளிக்கூடங்களிலும், சத்ரங்களிலும் மற்றும் இன்னபிற பாதுக்காப்பான இடங்களிலும் தங்க வைக்கபட்டுள்ளனர்
ummu abdurrahman: தக்காளி கிலோ 100/=, கோழிகறி 150/=,தண்ணீர் டேங் நிறைத்துக்கொள்ள ஜெனேரேட்டர் வடாகை 250/=, மளிகை பொருட்கள் எல்லாம் இருமடங்கு, மூன்றும் மடங்கு விலை உயர்த்தி விற்கபடுகிறது பதுக்கல் பேர்வழிகள் கொள்ளையடித்துகொண்டிருக்கின்றன்ர்
Abu_Hasan: இச்சமயத்தில் தான் நாம் சஹாபாக்கள் காலங்களில் எவ்வித நவீன வசதியும் இல்லாமல் எப்படி இருந்திருப்பார்கள், தன் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி இருப்பார்கள்? என சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
Abu_Hasan: இச்சூழ்நிலையைப் பயன் படுத்தி ஊரில் கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்கும் எவரும் நிச்சயம் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் நாளை நிச்சயமாக வர இருக்கும் மறுமையில் கடும் வேதனை உண்டு என்பதை மறக்கலாகாது.
Abu_Hasan: நாம் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையும், மனித நேயமும் ஆழ்குழாய்க்கிணறுகள் போல் ஆழத்தில் புதைந்து விட வேண்டாம். மக்களின் கஷ்டக்காலத்தில் உதவி இறைவனின் இஷ்டத்தைப் பெறுவோமாக......
