ஆரோக்கியமான உணவுகள்
கோழிக்கறியில் கிடைக்கும் சத்துகள்
அசைவ உணவு உண்போரால் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுவது கோழி இறைச்சிதான். இதற்கு முக்கியக் காரணம், இதனுடைய சுவை. கோழி இறைச்சிக் கொண்டு ஆயிரக்கணக்கில், அறுசுவையிலும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.கோழிக்கறி புரதச்சத்து மிகுந்த உணவாகும். கொழுப்புச்சத்து மிகவும் குறைவு.
கோழி முட்டையில்தான் கொழுப்பு அதிகம். அதிகம் எண்ணெய் சேர்க்காமல், தந்தூரி முறையில் செய்யப்படும் கோழிக்கறி உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. கொழுப்பை தவிர்க்க நினைப்பவர்கள், மற்ற இறைச்சிகளை ஒதுக்கிவிட்டு கோழி இறைச்சியை சாப்பிடலாம்.
கோழி இறைச்சி 100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள்
சக்தி (Energy)109 கலோரிகள், ஈரப்பதம்/நீர் (Moisture)72.2 கிராம், புரதம் (Protein)25.9 கிராம், கொழுப்பு (Fat)0.6 கிராம், தாதுக்கள் (Minerals)1.3 கிராம், கால்சியம் (Calcium)25 மி.கி, பாஸ்பரஸ் (Phosporous)245 மி.கி., ரைப்போஃப்ளேவின் (Riboflavin)0.14 மி.கி.,போலிக் அமிலம் (Folic acid)6.8 மை.கி.
முட்டையில் கிடைக்கும் சத்துகள்
அதிக ஊட்டச்சத்துகளுடன் இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் முக்கியமானது முட்டை. புரோட்டீன் (Protein) அதிகம் நிறைந்தது. விட்டமின் A (Vitamin A), விட்டமின் B (Vitamin B) அளவில் அதிகம் இருப்பதால், தோல் ஆரோக்கியத்திற்கும், பார்வை திறனுக்கு வலுவூட்டவும், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் மிகவும் உகந்தது.
சைவ உணவு உண்பவர்கள்கூட இன்று அதிகம் விரும்பிச் சாப்பிடும் சுவையான, ஊட்டம் நிறைந்த உணவுப் பொருள் இது. முட்டையை அவித்து சாப்பிடலாம், ஆம்லெட் போட்டு சாப்பிடலாம் என்று இருந்த நிலை போய், இன்று எண்ணற்ற விதங்களில், சுவைகளில் பல்வேறு உணவுகள் முட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றினை இந்தப் பக்கத்தில் தொகுத்து தருகின்றோம்.
முட்டை100 கிராம் உண்பதில் அடங்கியுள்ள சத்துக்கள்
சக்தி (Energy)173 கலோரிகள், ஈரப்பதம்/நீர் (Moisture)73.7 கிராம், புரதம் (Protein)13.3 கிராம், கொழுப்பு (Fat)13.3 கிராம், தாதுக்கள் (Minerals)1 கிராம், கால்சியம் (Calcium)60 மி.கி., பாஸ்பரஸ் (Phosporous) 220 மி.கி, இரும்பு (Iron)2.1 மி.கி., கரோட்டீன் (Carotene)420 மை.கி., தையாமின் (Thiamine)0.10 மி.கி., ரைப்போஃப்ளேவின் (Riboflavin)0.40 மி.கி, நியாசின் (Niacin)0.1 மி.கி., போலிக் அமிலம் (Folic acid)78.3 மை.கி.
மீனில் கிடைக்கும் சத்துகள்
மீன்கள் இந்தியாவில் சில இடங்களில் சைவ உணவாகவே கருதப்படுகின்றது. மீன்களில் புரதச்சத்து மட்டுமன்றி கால்சியமும் மிகுதியாய் உள்ளது. மீன்களின் வகைகளைப் பொறுத்து அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களும் வித்தியாசப்படுகின்றன. கெண்டை மீன்களில் ஆட்டிறைச்சியில் உள்ளது போல் இருமடங்கு கொழுப்பு சத்து உள்ளது.
கெலங்கா (கெழக்கன்) போன்ற மீன்களில் கொழுப்பு மிகவும் குறைவு. மீன் இறைச்சி உடல் சூட்டை உண்டாக்குவது இல்லை. கடல் உணவுகளில் பெரிதாக கலப்படம் செய்ய வாய்ப்பில்லை என்பதால் அனைத்து தரப்பினரும் கவலை இன்றி சாப்பிட மீன் இறைச்சி ஒரு சிறந்த உணவு.ஒவ்வொரு மீனுக்கும் சத்துக்கள் விபரம் வித்தியாசப்படுவதால், பொதுவாக மீன்களுக்கு என்று கொடுப்பது கடினம். அதிகம் உணவாகும் வௌவால் மீனின் சத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
100 கிராம் (வெள்ளை) வௌவால்(வவ்வாள்) மீனில் அடங்கியுள்ள சத்துக்கள்
சக்தி (Energy)87 கலோரிகள், ஈரப்பதம்/நீர் (Moisture)78.4 கிராம், புரதம் (Protein)17 கிராம், கொழுப்பு (Fat)1.3 கிராம், தாதுக்கள் (Minerals)1.5 கிராம், கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)1.8 கிராம், கால்சியம் (Calcium)200 மி.கி., பாஸ்பரஸ் (Phosporous)290 மி.கி., இரும்பு (Iron)0.9 மி.கி., நியாசின் (Niacin)2.6 மி.கி., ரைப்போஃப்ளேவின் (Riboflavin)0.15 மி.கி.
Source: National Institute of Nutrition - Hyderabad
தொகுப்பு:உம்முஅப்துற்றஹ்மான்
