video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

குஷ்பூவை பாராட்டுவோம் !

சந்திராயன் 1 விண்கலம் நிலவில் முதல் அடி எடுத்து வைக்கப் போகும் செய்தி நாடு முழுவதும் மகிழ்ச்சியை விதைத்தது. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தின் சௌகோரி முஹல்லா பகுதி மக்கள் கூடுதல் மகிழ்ச்சியிலும் பெரு மிதத்திலும் திளைத்தனர்.

அதற்கு காரணம் அந்த கிராமத்தின் செல்லப் பெண் குஷ்பூ மிர்ஸா. 23 வயதான இவர் சந்திராயன் செக் அவுட் டிவிஷனில் பொறியாளராக விளங்குகிறார். சந்திராயன் 1 விண்கல குழுவில் இவருக்கும் ஓர் இடம் உண்டு.

நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு தொண்டு செய்வதற்காக தான் இளம் பருவத்திலேயே பேரார்வம் கொண்டு விளங்கியதாகக் குறிப்பிடுகிறார்.முஸ்லிம் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த குஷ்பூ மிர்ஸா உத்தரப் பிரதேச மாநில அலிகார் பல்கலைக் கழகத்தில் பிடெக் பட்டம் பெற்றவராவார்.

இந்தியா விண்வெளி விஞ்ஞானத்துறையில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. விண்வெளி விஞ்ஞானத்தில் அது ஆசியாவின் மற்றொரு வல்லரசான சீனாவையும் மிஞ்சிவிட்டது.விஞ்ஞான இந்தியாவின் பெருமையில் குஷ்பூ மிர்ஸாவுக்கும் முக்கிய இடம் உண்டு.பேகம் ஹஜரத் மஹல் என்ற வீரப் பெண்மணியைத் தந்த உத்தரப் பிரதேச மண் தான் குஷ்பூ மிர்ஸாவையும் தந்துள்ளது.

விண்வெளிப் பெண்ணான கல்பனா சாவ்லா அமெரிக்க மண்ணில் (அமெரிக்காவுக்காக) சாதனை நிகழ்த்தினார். ஆனால் இளம் பெண் குஷ்பூ மிர்ஸா தற்போது தான் விஞ்ஞானத்துறையில் அடியெடுத்து வைக்கும் போதே இந்தியா சாதனை நிகழ்த்தும் சந்திராயன் 1 திட்டத்தில் பங்கேற்றது. தனக்கு கிடைத்த பெரும் பேறாக நினைப்பதாக குஷ்பு கூறுகிறார்.
நிலாப் பெண் குஷ்பு மிர்ஸா சந்திராயன் 1 திட்டத்தில் பணியாற்றும்போது ரமலான் மாதம் நோன்பு நோற்றதோடு தினமும் ஐந்து வேளையும் தவறாது தொழுகையும் நிறைவேற்றியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


குஷ்பு மிர்ஸாவின் திறமை மேலும் வளர்ந்து தாய் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.ஆமீன்

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 11/03/2008 06:37:00 AM. Filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for குஷ்பூவை பாராட்டுவோம் !

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery