யோகா,இஸ்லாமிய அதிகாரிகள் தடை!
யோகா பயிற்சி செய்வதால் முஸ்லிம்கள் பாதை வழுவலாம் என்ற அச்சம் காரணமாக மலேசியாவிலே முஸ்லிம்கள் யோகா பயிற்சி செய்வதற்கு அந்நாட்டின் இஸ்லாமிய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
யோகா பயிற்சியின்போது மந்திரம் சொல்வதும் வணங்குவதும் முஸ்லிம்களுக்கு பொருத்தமானதாக இல்லை. முஸ்லிம்களின் நம்பிக்கையை அவ்வழக்கங்கள் அழித்துவிடக்கூடும் ஆதலால் முஸ்லிம்கள் யோகா பயிற்சி செய்யக்கூடாதது என்று தேசிய ஃபத்வா சபை எனப்படும் மலேசியாவின் தலைமை இஸ்லாமிய அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
யோகா என்ற பெயரில் அதில் ஏக இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகங்கள் இடம்பெறுகின்றன.அல்லாஹ் மன்னிக்காத குற்றம் ஷிர்க் மட்டுமே,மற்றதை அவன் நாடினால் மன்னித்துவிடுவதாக குரான் மற்றும் ஹதீஸில் நாம் அறியலாம்.எனவே நாம் சொல்,செயல்,இன்னும் எல்லா வகையான குறிப்புக்கள் மூலமாகவும் ஷிர்க் வந்துவிடாமல் கவனித்து நடக்க வேண்டியது நம் பொறுப்பாகும்.நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் மற்றும் எல்லா தொடர்பு சாதனங்களையும் கண்காணித்து,யோகா பயிலாமலும்,வந்தே மாதரம் போன்ற மண்ணை வணக்க சொல்லும் பாடலை பாடாமலும்,இன்னும் பல சினிமா பாடல்களை நம் சிறார்கள் தெரிந்தோ தெரியாமலோ பாடுகின்றனர்,அதில் ஷிர்க் வைக்கும் நிறைய வரிகள் நம் சிந்தைக்கு தெரியாமல் பாடுகிறோம்,(அது ஈ.எம்.ஹனீபா பாடலாக இருந்தாலும் சரியே)மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
மேலும்,நாம் நன்றாக நடை பயிற்சி செய்து,ஐந்து வேலையும் தொழுது வந்தாலே,அந்த ஒவ்வொரு நிலையிலும் நம் ஒவ்வொரு உறுப்பின் பயிற்சியும் அமைந்துவிடுகிறது.ஒரு வித்தியாசம்,நாம் பயிற்சிக்காக தொழுவது இல்லை மட்டுமல்ல கூடாது,மாறாக அல்லாஹ்வை வணங்கவேண்டும் என குனிந்து நிமிரும்போது நமக்கு மறுமைக்கான கூலியையும் அல்லாஹ் நமக்கு தந்து விடுகிறான்,நம் உடலுக்கும் பயனாகவும் அமைத்துவிடுகிறான்.ஸுப்ஹாநல்லாஹ்.அதுதான் அல்லாஹ்வின் மார்க்கம்.
எனவே ஒவ்வொரு விஷயத்திலும் ஷிர்க் நம்மை அண்டாமல் கவனிப்பாய் இருப்போம்.
