அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்
பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின்றது என்பது நாம் யாவரும் அறிந்ததே. மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் நம்மூர் மக்களில் இருவர் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.
ஆமாத்மா : "அய்ஷாமா, யான்வுளே கேக்குறிய, குடிக்க தண்ணி இல்லாம நாங்க படுற பாடு அல்லாஹ் ஒருத்தனுக்கு தான் தெரியும்."
அய்ஷாமா : "ஆமாவுளே எங்க வீட்லயும் தான், இவ்வோ வாப்பா தான் சொன்னாக, மல தண்ணிய புடிச்சு காச்சி குடிக்கலாம் னு, அப்டி தான் நேத்து சோறு கூட ஆக்கினோம்"
ஆமாத்மா : "அதான்வுளே பண்ண வகை இல்லாம போச்சு, சரி சரி வா, புதுமன தெருவுல அடி பைப்புல எல்லோரும் தண்ணி பிடிக்குறாகளாம், வா நாமலும் போய் ஒரு கொடம் பிடிச்சுட்டு வருவோம்."
அய்ஷாமா : "இந்தா வர்றேன்"
ஆமாத்மா : "அப்டியே ஒன்ற செல் ஃபோனையும் எடுத்துடு வா, ஜனரேட்ட்டர் ல சார்ஜ் போட்டு தர்றாங்களாம்,ஃபோனுக்கு பத்து ரூவாயாம் சார்ஜ் பன்றதுக்கு"
அய்ஷாமா : "நல்லதா போச்சு, எங்க வீட்ல மட்டும் அஞ்சு ஃபோனு, அம்பது ரூவா, கொடுவா பிசுக்கு வாங்குற காசு, நல்லா சம்பாதிக்குறானுவோ, சரி என்னா பன்றது? கொடத்தையும் ஃபோனையும் எடுத்துட்டு வர்றேன்"(போய் குடம் எடுத்து வருகிறார்)
ஆமாத்மா : "SKS-ல ஜனரேட்டர் தருவாங்களாம், ஒரு மோட்டாருக்கு 300 ரூவாயாம், ஒரு மணி நேரம் ஓடுமாம், டேங்க் நிரஞ்சாலும் நிரையாட்டியும் ஒரு மணி நேரம் தான் ஓடுமாம்"
அய்ஷாமா : "ஆஹா, அப்படியா???"
ஆமாத்மா : "அது மட்டும் இல்லை, ஜனரேட்டர் கேக்க போனா SKS காரவனுவோ 'உங்க வீட்ல நீர் மூழ்கியா? இல்லை சாதா மோட்டாரா? னு' கேப்பாங்களாம், நீர் மூழ்கியா இருந்தா வரமாட்டானுவளாம், ஏன்னா நீர் மூழ்கி சீக்கிரம் நெரஞ்சுடுமாம், வருமானம் கம்மி ஆயிடுமாம் "
அய்ஷாமா : "அல்லாஹ்வே, கொள்ள நயம்டீ, கெட்டி காரனுவோ, பொலச்சுகிடுவானுவோ"
ஆமாத்மா : "மல வந்தாலும் வந்துச்சு, எல்லா வெலையும் ஏறி போச்சு, உம்மாடி, காய்கறியெல்லாம் நெருப்பு வெல விக்குது"
அய்ஷாமா : "ஆமாவுளே, அதுக்கு கூட ஜனம் போட்டி போட்டு வாங்குதுவோ"
ஆமாத்மா: "என்னத்த சொல்ல, நம்ம ஊர்ல ஒரு கடையிலயும் மொலவுதிரி கெடைக்கல, வீடல் இருந்த அரிக்கலாம்புக்கும் எண்ணை இல்லை,
புள்ள குட்டிவொள வச்சுகிட்டு ரொம்ப செரமமா இருக்குவுளே"
அய்ஷாமா : " ஆமா, அல்லாஹ் இருக்கான், இன்னும் ஒன்னு ரெண்டு நாளைல எல்லாம் சரி ஆகிடும், அடி பைப்பு வந்துடுச்சு, வாங்க வரிசைல நிப்போம்"
ஆமாத்மா : "சரிவுளே"
உங்களுக்காக அடி பைப்பில் தண்ணி பிடித்துக்கொண்டே,
உங்கள் நண்பன்