video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

என்ன நடக்குது காஷ்மீரில்...? பாகம் -2

காஷ்மீருக்குள் யாரும் செல்போனி லிருந்து எஸ்.எம்.எஸ். கொடுக்க முடியாது என்பது பலருக்கும் தெரியாது. எஸ்.எம்.எஸ். வசதியை தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது, காரணமாக சொல்லப்படுகிறது. `ப்ரீ பெய்ட்’ செல்களும் அங்கே வேலை செய்வதில்லை. எளிதில் தீவிரவாதிகள் ப்ரீபெய்ட் சிம்கார்டுகளைப் பெற்று விடு கிறார்களாம். இதுமட்டுமல்ல, காஷ்மீரிலி ருந்து யாரும் பாகிஸ்தானுக்கு பேசவும் முடியாது. டெல்லியிலிருந்து பேசலாம். தமிழ்நாட்டிலிருந்து பேசலாம். அதே போல ஒரு இரண்டு கி.மீ. தொலைவில், ஆசாத் காஷ்மீர் என அவர்களாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என நம்மவர்களாலும் சொல்லப்படுகிற பகுதிக்குள் காஷ்மீரி ஒருவரின் உறவி னர் ஒருவர் இருந்தால், அவரை சந்திக்க ஒருவர் டெல்லி வந்து பின்பு அங்கி ருந்துதான் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும், அதுவும் அனுமதி பெற்று.


எங்களில் கேரளாவிலிருந்து வந்தி ருந்த `மாத்யமம்’ இதழாசிரியர் இப்ராஹீ மிடம் மட்டுமே `போஸ்ட் பெய்ட்’ செல் இருந்தது. அதன்மூலமும் எங்களால் பேரா. ஜீலானியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. இடையில் விசாரிக்கும் இடங்களில் டெல்லியிலிருந்து செல்லும் `டூரிஸ்ட்’கள் எனச் சொல்லிவிடுவது என முடிவு செய்து, இந்தி தெரிந்த ரோனாவில்சன் முன்சீட்டில் அமர்ந்து கொண்டார். அதிவேகமாக வண்டியை ஓட்டினார் ஓட்டுனர். மலைப் பாதையில் அது கொஞ்சம் பயமாக இருந்தது. ஏன் இத்தனை வேகம் என்று கேட்டபோது, ஆசியாவிலேயே நீளமான குகைப் பாதை (கூரnநேட) போகும் வழியில் உள்ளது எனவும், ஏதேனும் இராணுவ வாகனங்கள் வந்தால், அல்லது வேறு ஏதும் பிரச்சினை என்று நிறுத்திவிட்டால் தாமதமாகி விடும் என்றார் ஓட்டுனர். தாமதமானால் ஒருவேளை ஊரடங்குச் சட்டம் அறிவித்து விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு. காஷ்மீர் பள்ளத்தாக் கிற்குச் செல்வதற்கு `முகல் சாலை’ உட்பட வேறு பல வழிகள் இருந்தாலும் இன்று போக்குவரத்து அனுமதிக்கப்படு வது இந்தச் சாலையில் மட்டும்தான்.


அமர்நாத் பிரச்சினையின்போது இந்தச் சாலையை இந்துத்துவ சக்திகள் மூடிவிட்டதால் பள்ளத்தாக்கிற்குள் வாழ்கிறவர்கள் பட்ட துன்பம் ஏராளம். காஷ்மீரின் இரண்டு தொழில்களில் ஒன்றான பழ வணிகம் இதன்மூலம் பெரிதும் பாதிப்படைந்தது. நாங்கள் சென்றிருந்த காலம்வரை ஜம்முவிலி ருந்து முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் எல்லாம் கூட வருவது நிறுத்தப்பட்டிருந் தது. குழந்தை உணவுகளுக்கும் தட்டுப் பாடு. நேரடியாக நிறுவனங்களிலிருந்து மருந்தை பெற்றுக் கொள்வது என்கிற நிலையை காஷ்மீர வணிகர்கள் எடுத் தால் அதற்கு பன்னாட்டு மருந்து நிறு வனங்கள் ஒத்துழைப்பதில்லை. ஜம்முவி லிருந்தே மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பைஸர்’ முதலான பன்னாட்டு நிறுவனங்கள் சொல்லி விடுகின்றன.


எங்கள் வாகனத்தின் வேகத்திற்கு தடையாக இருந்தது எதிரே சாரிசாரியாக வந்த கம்பளி ஆடுகள்தான். நூற்றுக் கணக்கான கம்பளி ஆடுகளை ஓட்டிக் கொண்டு நீண்ட தொளதொளத்த அங்கிகளுடன் முஸ்லிம் ஆட்டிடையர் கள் வந்து கொண்டிருந்தனர். துணை யாக அருகில் நாங்கள். பனிக்காலம் தொடங்குகிற காலம் நெருங்கிவிட்ட தால் ஆடுகளை ஓட்டிக் கொண்டு பள்ளத்தாக்கை விட்டு வெளியேறு கின்றனராம். இந்த முஸ்லிம் ஆட்டிடை யர்களை `மாலிக்’கள் என்கிறார்கள். இப் படி ஒரு மாலிக் தான் 150 ஆண்டுகட்டு முன்பு அமர்நாத் பனி லிங்கத்தைக் கண்டு பிடித்தவர். ஆனந்த் நாக்கைத் தாண்டியுள்ள `கிளேசியர்’ பகுதியில் ஒரு குகைக்குள் இருந்த அந்தப் பனி வடிவம் `லிங்க’த்தைப் போலிருந்ததால், உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத வராயினும் அந்த மாலிக் அந்தச் செய்தியை தூரத்தில் இருந்த இந்துச் சகோதரர்களிடம் பகிர்ந்து கொண் டார். அந்தப் பகுதியிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவு வரை யாரும் இந்துக்கள் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பனிலிங்கம் சரியாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் தான் அந்த வடிவில் அங்கிருக்கும். அதன்பின் அது உருகி `லிட்டர்’ ஆற்றில் கரைந்து விடும். அந்தச் சில நாட் களில் அங்கு வந்து பனி லிங்கத் தைத் தரிசித்துச் செல்லும் வழக்கம் தொடங்கியது.


அடுத்த 150 ஆண்டு காலமும் வரும் யாத்ரீகர்களை வரவேற்று, பாதுகாப்பளித்து, உணவு ஏற்பாடு செய்து அந்தக் குகையையும் பாது காத்து வந்தது முஸ்லிம் குடும்பங்கள் தான். மத ரீதியான சடங்குகளில் காஷ் மீரப் பண்டிதர்கள் உதவி புரிகின்றனர். யாத்ரீகர்கள் ஆண்டுதோறும் வருவது அதிகமாயிற்று. எனினும் ஆலய நிர்வாக வாரியம் (ளுhசiநே க்ஷடியசன) என்றெல்லாம் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆல யப் பாதுகாப்பு மாலிக் முஸ்லிம்கள் வசமே இருந்து வந்தது. ஆலயப் பகுதியை ஒட்டிச் சிறு வணிகர்கள் பிழைத்து வந்தனர். தீவிரவாதம் காஷ் மீரில் உச்சத்தில் இருந்தபோதும் கூட யாத்ரீகர்கள் எவருக்கும் எந்தச் சிறு தீங்கும் இழைக்கப்பட்டதில்லை.


பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர் சின்ஹா, யாத்ரீ கர்கள் அதிகம் வருவதற்கு ஊக்கு வித்தார். சில ஆயிரங்கள் அளவில் யாத்ரீகர்கள் வருவது, லட்சம் யாத்ரீகர் கள் என்கிற அளவிற்கு அதிகரிக்கப் பட்டது. யாத்திரை காலமும் 2 வாரம் என்பதிலிருந்து இரண்டு மாதங்கள் என்பதாகவும் அதிகரிக்கப்பட்டது.


கிளேசியர் பகுதியில் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது எனவும் `பால்தள்’ளுக்கு வரும் யாத்ரீகர் களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் தொடர் பான நிதீஷ்சென் குப்தா குழு எச்சரித்தி ருந்தது கண்டுகொள்ளப்படவில்லை. அதிக யாத்ரீகர்கள வருவது, இராணுவ ஹெலிகாப்டர்கள் மேலே சுற்றுவது ஆகியவை எல்லாம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்கிற எச்சரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை. அதேசமயத்தில் பா.ஜ.க. ஆள்கிற ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள `கோமுக்’ புண்ணிய தலத்திற்கு வரும் யாத்ரீகர்கள் இதே காரணங்களுக்காக கட்டுப்படுத்தப்படு வது குறிப்பிடத்தக்கது. யாத்திரைக் காலமும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2, 3 ஆண்டுகளாக பனிலிங்கம் வழக்கத்தைக் காட்டிலும் சீக்கரமாகவே உருகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.


2000 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஆலய நிர்வாகத்திற்காக வாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் 150 ஆண்டு கால பாரம்பரிய உரிமையை முஸ்லிம்கள் இழந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீர நிறுவனங்களின் மீதான உரிமையை காஷ்மீரிகளிட மிருந்து பறிப்பது என்கிற தந்திரத்தையே இந்திய அரசு அங்கு கடைப்பிடித்து வருகிறது. ஆலய நிர்வாக வாரியத்தின் தலைவர் ஆளுநர். ஒருவேளை ஆளுநர் முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் அவர் ஒரு இந்துவை தலைவராக நியமிப்பார்.


2003ம் ஆண்டில் பி.டி.பி. அரசு ஆட்சிக்கு வந்தது. பால்தள் பகுதியில் கொஞ்சம் நிலத்தை ஆலயத்திற்கென நிரந்தரமாக ஒதுக்குவது என முடிவெடுக் கப்பட்டது. ஏனோ அப்போது அது நடை பெறவில்லை. இந்த ஆண்டு தொடக் கத்தில் 100 கானல் நிலம் (சுமார் 80 ஏக்கர்) ஆலயத்திற்கு ஒதுக்குவது என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட் டது. நிரந்தரமாக பளிங்கு லிங்கம் ஒன்று அமைக்கப்படும் என்றும் கூறப் பட்டது.


இந்த முடிவுக்கு எதிராக பள்ளத் தாக்கின் மக்கள் வெகுண்டு எழுந்தனர். நீண்ட நாட்களுக்குப் பின் பிரிந்து கிடந்த ஹூரியத் அமைப்புகள் ஒன்றா யின. `நில மாற்றத்திற்கு எதிரான கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. ஸ்ரீநகர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் மியா அப்துல் கலிம் அதன் தலைவர். பா.ஜ.க. கட்சியும் இதர இந்துத்துவ அமைப்பு களும் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தின. பெரிய அள வில் பாதிப்புகள் ஏற்பட்ட போதும் பள்ளத்தாக்கு மக்கள் யாத்ரீகர்களுக்கு எந்த ஊறும் விளைவிக்கவில்லை. முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இது அறிவிக்கப்பட்டது. “அவர்கள் எம் விருந்தாளிகள். அவர்களுக்கு எந் தத்தீங்கும் இழைக்க மாட்டோம்’’ எனக் கூறினர். அவ்வாறே சாலைமறியல் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில்30 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும் ஒரு இந்து யாத்ரீகருக்கும் எந்தத் தீங்கும் இழைக் கப்படவில்லை. மறியலை ஒட்டி ஓட்டல் கள் மூடப்பட்ட காலங்களிலும் கூட மிகப்பெரிய `லங்கர்’களை அமைத்து உணவு தயாரிக்கப்பட்டு யாத்ரீகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டுதான் சென்ற 150 ஆண்டுகளில் மிக அதிக யாத்ரீகர்கள் வந்து போயினர். சுமார் 4 லட்சம் பேர்.


எனினும் இந்தச் செய்திகளை ஊட கங்கள் முதன்மை அளித்து மக்களுக் குத் தெரிவிக்கவில்லை. மாறாக ஏதோ ஒரு நூறு ஏக்கர் நிலத்தை ஆலயத்திற்கு அளித்ததை முஸ்லிம்கள் எதிர்ப்பதா கவே செய்திகள் பரப்பப்பட்டன. யாத்ரீகர் கள் தாக்கப்படுவதாக ஒரு பொய்ச் செய்தியையும் கூட ஒருமுறை டைம்ஸ் ஆப் இந்தியா பரப்பியது.


மலையடிவாரம் ஒன்றில் அமைந்தி ருந்த ஒரு சாலை ஓர ஓட்டலில் சூடான ரொட்டியும் கோழியும் கிடைத்தது. அதைவிட அந்த ஓட்டலை ஒட்டி வழிந்து ஓடிக்கொண்டிருந்த மலையருவியின் சுள்ளென உரைத்த குளிர் முகத்திற்கும் தொண்டைக்கும் இதமாக இருந்தது.


இரண்டரை கி.மீ. நீளமுள்ள அந்த குகைப் பாதையை நாங்கள் வந்தடைந்த போது இருட்டத் தொடங்கியுள்ளது.
அ. மார்க்ஸ்

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 12/10/2008 05:56:00 AM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for என்ன நடக்குது காஷ்மீரில்...? பாகம் -2

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery