video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

அதிரை எக்ஸ்ப்ரஸ் - சில விளக்கங்கள்

அதிரை மக்களின் இணையக் குரலாய் இயங்கிவரும் அதிரை எக்ஸ்ப்ரஸ் என்ற இத்தளம் கடந்த சில மாதங்களாக பொலிவிழந்துள்ளதாக சிலர் கருத்திட்டிருந்தார்கள். வேறுசிலரோ அதிரை எக்ஸ்ப்ரஸ் 'குறிப்பிட்டச் சில தெருவாசிகள்' மட்டுமே அதிகம் புழங்குவதாக குற்றம் சாட்டியிருந்தார்கள். மேலும் சிலர் சிறப்பாக எழுதிவந்தவர்கள் ஏன் அடிக்கடி தென்படுவதில்லை? என்று உரிமையுடன் கேட்டிருந்ததோடு,அதிரையின் ஒட்டுமொத்தக் குரலாக அதிரை எக்ஸ்ப்ரஸை முன்னிறுத்தலாமே என்ற ஆலோசனையும் வழங்கி இருந்தார்கள்.

ஏற்கனவே பலமுறை சொல்லியபடி, அதிரை எக்ஸ்ப்ரஸ் நமதூர் மக்களின் உணர்வுகளுக்கு இணைய வடிகாலாகவும், அதிரைவாசிகளுடன் நேரடியாக தொடர்புடைய அல்லது பயனாக இருக்கும் இதரச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் மட்டுறுத்தலற்ற, சுதந்திரமான செய்தித்தளம் என்ற அடிப்படை நோக்கத்திலிருந்து விலகாமலேயே இதுவரை செயல்பட்டு வருகிறது என்பதை மீண்டும் நினைவுறுத்தி, மேற்கண்ட விசயங்கள் குறித்தும் சில விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

1) பொலிவிழந்துள்ளதா?

கடந்த ரமழானில் தினமலர் வேலூர் பதிப்பில் நமது உயிரினும் மேலான முஹம்மது நபியைக் (ஸல்) கேலிசெய்த பத்திரிக்கைச் செய்தியைச் சுட்டி தொடுப்பாகக் கொடுத்து, முஸ்லிம்களைச் சீண்டியதை அதிரை எக்ஸ்ப்ரஸே முதலில் வெளிக்கொண்டு வந்தது. இதையடுத்து பலவளைகுடா நாடுகளில் தினமலர் இணையதளம் தடைசெய்யப்பட்டபோது செய்தியைச் சுட்டியை நமது தளமும் அமீரகத்தில் தெரியாதவகையில் மட்டுறுத்தப்பட்டுள்ளது. தடையை நீக்கக்கோரி உரியமுறையில் தொடர்பு கொண்டும் பயனில்லை.

அதிரை எக்ஸ்ப்ரஸின் பெரும்பாலான பதிவர்கள், வாசகர்கள் மற்றும் அரட்டையாளர்கள் அமீரகவாசிகளாக இருந்ததால், அதிரை எக்ஸ்ப்ரஸ் இணையதளத்திற்கு நேரடியாக அணுகமுடியவில்லை. இதன்காரணமாக அதிரை எக்ஸ்ப்ரஸின் அமீரகப் பங்களிப்பாளர்களால் செய்தி மற்றும் அரட்டையில் கலந்து கொள்ள முடிவதில்லை என்பதே பிரதானக் காரணம்.

மேலும்,அதிரை எக்ஸ்ப்ரஸ் போன்ற வெவ்வேறு பெயர்களில் தனிபதிவுகள் சிலவும் இருப்பதால் ஓரிடத்திற்கு வரவேண்டிய செய்திகள் வெவ்வேறு பதிவுகளில் பதியப்படுகிறது. இதன்மூலம் ஓரிடத்தில் இணைய வேண்டிய அதிரைவாசிகள் வெவ்வேறு தளங்கள் நோக்கி திசைதிருப்பப்பட்டுள்ளார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

அதிரை வலைப்பதிவுகளையும் வலைப்பதிவர்களையும் ஊக்கப்டுத்துவதில் அதிரை எக்ஸ்ப்ரஸ் என்றுமே தயங்கியதில்லை. எனினும், பொதுவான செய்திகளை அதிரை எக்ஸ்ப்ரஸில் பதிந்தால் மேற்கண்ட பின்னடைவு ஏற்படாது. சம்பந்தப்பட்ட வலைப்பதிவர்களின் ஆலோசனையும் புரிந்து கொள்ளலும் வரவேற்கப்படுகிறது.

2) தெருப்பாகுபாடு?

இத்தளம் பிரபலமாகக் காரணம் அல்-அமீன் பள்ளிவாசல் பிரச்சினையைக் குறித்து யாருக்கும் அஞ்சாமல் உண்மைச் செய்திகளைப் பகிரங்கமாக எழுதியதும் ஒரு காரணம். இப்பிரச்சினையில் நமதூர் 'பெரியவர்' குறித்தும் எழுதப்பட்டதால், சம்பந்தப்பட்ட தெருவாசிகள் அல்லது அப்பெரியவரின் ஆதரவாளர்கள்/விசுவாசிகள் மட்டுமே இவ்வாறு அவதூறு சொல்கிறார்கள். அதிரை எக்ஸ்ப்ரஸை தொடக்கம்முதல் அவதானித்து வரும் வாசகர்கள் அதிரை எக்ஸ்ப்ரஸின் செயல்பாடுகளை புரிந்துள்ளார்களென்பதால் இது போன்ற அவதூறுகளைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

3) பதிவர்கள் பஞ்சம்?

பெரும்பாலானப் பதிவர்கள் அமீரகத்திலிருந்தே எழுதி வந்தார்கள். அதிரை எக்ஸ்ப்ரஸ் அமீரகத்தில் தெரியாதக் காரணத்தால் அவர்கள் சோர்வடைந்து இருக்கக்கூடும். எனினும் மின்மடல் மூலம் செய்திகள் மற்றும் கட்டுரைகள் நேரடியாகப் பதியும் வசதி இருப்பதால் இதைப் பயன்படுத்தி தொடர்ந்து எழுதலாம்.

4) செய்திகள் மட்டுறுத்தப்படுகிறதா?

இல்லை. நேரடியாகப் பதியும் வசதியை வலைப்பு வழங்கியான ப்ளாக்கர் செய்து கொடுத்திருந்தாலும், எரிதம் எனப்படும் SPAM விளம்பரங்களும் நேரடியாகப் பதிய முடியுமென்பதால் பிரசுரிக்க அனுமதிக்கும் அதிகாரத்தை சில பங்களிப்பாளர்களிடம் வழங்கி இருந்தோம். அவர்களும் அமீரகவாசிகள் என்பதால் அதிரை எக்ஸ்ப்ரஸிலிருந்து அந்நியப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்!

அதிரை எக்ஸ்ப்ரஸ் முகவரியை மாற்றி, பழைய செய்திகளும் தொடர்ந்து தெரியும்படிச் செய்வதற்கான நுடப்நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. அனேகமாக வரும் ஜனவரி-1,2009 க்குள் புதிய முகவரியில் அதிரை எக்ஸ்ப்ரஸை அமீரகவாசிகளும் அணுகுவதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மாதிரியை http://adiraiexpress.wordpress.com என்ற முகவரியில் காணலாம்.

http://adiraixpress.wordpress.com என்ற முகவரி ஏற்கனவே யாரொ பதிவு செய்துள்ளதால் முகவரியில் Xpress என்பதற்குப் பதில் Express என்று மாற்றி உள்ளோம். http://adiraixpress.wordpress.com ஐப் பதிவு செய்து வைத்துள்ள சகோதரர் அதன் கடவுச் சொல் விபரத்தை adiraixpress@gmail.com முகவரிக்கு அறியத் தந்தால் அதிரைவாசிகளுக்குக் குழப்பமில்லாமல் ஒரே செய்திதளமாக்கும் எமது முயற்சிக்கு வசதியாக இருக்கும்.

வாசகர்கள் மறக்காமல் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பின்னூட்டமாகவும/மின்மடலாக அறியத்தந்தால் அவற்றையும் பரிசீலித்து நமது இணையக் குரலாக அதிரை எக்ஸ்ப்ரஸை புதுப்பொழிவுடன் ஒலிக்கச் செய்வோம்.

இப்படிக்கு,

-எக்ஸ்ப்ரஸ் டீம்-

Posted by Unknown on 12/29/2008 02:30:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for அதிரை எக்ஸ்ப்ரஸ் - சில விளக்கங்கள்

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery