தில்லாலங்கடி கோஷ்டிங்க!!!
வெப் கேம் குறித்த மிக பயனுள்ள எச்சரிக்கை செய்தி தந்த மக்பூல் அவர்களுக்கு நன்றி.அதே போன்று,வலைதளத்தில் நம் பைல்களை எப்படியெல்லாம் திருடுகிறார்கள் என்ற ஒரு செய்தி நம் சகோதர இணையதளத்தில் (அதிரை போஸ்ட்)வந்துள்ளது,மக்களுக்கு பயன்படும் எனும் நோக்கில் இங்கு பதியப்படுகிறது.நன்றி !
__________________________________________________
உலகத்துல இப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்வாங்களான்னு வியந்த விஷயங்களில் இதுவும் ஒண்ணு. நமக்கெல்லாம் copy & paste (ctrl+C & Ctrl+v) ஒரு சாதாரண விஷயம். ஆனா அதையே சில தில்லாலங்கடி கோஷ்டிங்க திருட்டுத்தனம் செய்ய உபயோகப்படுத்துறாங்க.
ஒரு சின்ன java scriptஜ வெச்சி நீங்க clipboardல காபி செய்து வைத்துள்ள மொத்த மேட்டரையும் லவட்டிட முடியுமாம். ஒரு சின்ன உதாரணம்.. நீங்க ஏதாவது ஒரு textஜ காபி செய்துவிட்டு இந்த வலை தளத்துக்கு செல்லுங்க. அதுல நீங்க ctrl+c உபயோகித்து எதை copy செய்து வெச்சி இருந்தீங்களோ அதை அப்படியே காட்டுவாங்க.
இந்த டெக்னீக்கை உபயோகித்து பல தில்லாலங்கடிங்க உங்க credit card எண்கள் முதல்கொண்டு பல மேட்டரை திருடி வருகிறார்களாம். உஷாரய்யா உஷாரு.
இந்த மேட்டரை செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நாலு வரி போதுமாம்.
இதுல ஒரு நிம்மதியான விஷயம் என்னான்னா இது IEல மட்டும் தான் வேலை செய்யுமாம் firefox, Google chrome முதலியவைகளில் இது வேலை செய்யாது.என்னிடம் safari மற்றும் இன்ன பிற உலாவிகள் கிடையாது யாராவது இது அங்கே வேலை செய்கிறதா என்று சரி பார்த்து சொன்னால் நன்றாக இருக்கும். IEல இது வேலை செய்யாமல் இருக்க கீழே கொடுக்கப்படுள்ள மாதிரி செய்யவும்
1. Internet options -> security க்கு செல்லவும்
2. custom levelல தேர்வு செய்யவும்.
3. security setting தேர்வு செய்து “allow paste operations via script” ஜ disable செய்யவும்.
நீங்க நல்ல வலைத்தளம் அப்படின்னு நம்புறம் தளங்களில் ஒன்று ஏதாவது இந்த மாதிரி இந்த பித்தலாட்டத்தை செய்யுதான்னு பாக்க “disable”ஜ தேர்வு செய்வதற்கு பதில் “prompt”ஜ தேர்வு செய்தால், அந்த வலைதளம் இந்த மாதிரி செய்யும் முன் IE உங்களிடம் அனுமதி கேட்கும் அப்ப நீங்க உஷாராகிவிடலாம்.
by அபூ ஜுலைகா
