அரஃபா தினத்தன்றைய நோன்பு
اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكةُ
ஏகஇறைவன் தனது அடியார்கள் பாவம் செய்தவர்களாக மறுமையில் தன்னை சந்திக்கவிருப்பதை விரும்பவில்லை அதனால் அவர்கள் உலகில் வாழும் காலத்திலேயே தங்களது பாவங்களை கழுவி தூய்மையாக்கிக் கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களை தனது திருத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் அறிவித்துக் கொடுத்தான். அதில் ஒன்று தான் அரஃபா தினத்தன்றைய நோன்பு.
ஹஜ்ஜூடைய நாட்களில் ஒன்பதாம் நாள் அன்று ஹஜ் யாத்ரீகர்கள் அரஃபாவில் குழுமுகின்ற தினத்தன்ற வெளியில் இருக்கக் கூடிய மக்களை பெருமானார் (ஸல்) அவர்ளக் நோன்பு நோற்க உத்தரவுப் பிறப்பித்ததுடன் அவர்களும் அன்றைய தினம் (ஹஜ் செய்;யாத வருடங்களில்) நோன்பு நோற்றார்கள். நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி) நூல்கள்: அபூதா¥த், நஸயீ, அஹ்மத்பிரதி
பலன்
இதன் மூலமாக நோன்பு நோற்றவர்களுடைய கடந்த வருடத்துப் பாவங்களையும் இந்த வருடத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பதாக பெருமானார்(ஸல்) அவரகள் அறிவிக்கின்றார்கள். அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ''அது கடந்தவருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதா¥த்
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
