video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

தொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்படு முன்!

சலீம் நானா வியப்போடு சொன்னார்,"பாருங்க பஷீர் காக்கா,இந்த காலத்துல உள்ள சின்ன பசங்க எல்லாம்,முறையா வேலா வேலைக்கு தொழ பள்ளிக்கு வர்றத". கண்கள் மின்ன,சந்தோசம் பொங்கக் கூறினார்.

"ஆமா சலீம்,நீ சொல்றது சரிதான்.இப்போ சின்ன பசங்க கூட மார்க்க விஷயத்துல பேணுதலா இருக்கிறத நெனச்சி ரொம்ம்ப மகிழ்ச்சியாத்தான் இருக்கு.அதே சமயம் சில பெரியவங்க கூட,தொழுக இல்லாம,பொடுபோக்கா இருக்காங்க.சில பேரு பள்ளிவாசல் வந்து நாலு பேரோட ஊர் பலாய் கழுவி பொழுது போக்க வர்றாங்க, பாங்கு சொன்னதும்,போய்டுவாங்க.இதுல பள்ளிவாசல் பாத்ரூம்ல பீடி புகைய விட்டு,வர்ற தொழுகையாளிக்கும் இடைஞ்சல் தருதாங்க.அல்லாஹ்தான் தொழுகையோட மகத்துவம் புரிஞ்சி அவங்க தொழுவ கருணை புரியனும்".உண்மையான அக்கறையோடு கூறினார் பஷீர் காக்கா.
***********************************************
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9

உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ள வில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னுஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்

(மறுமை நாளில்) சுவர்க்க வாசிகள் சுவர்க்கத்தில் இருந்துக்கொண்டு நரகவாசிகளைப் பார்த்து "உங்களை நரகத்தில் புகுத்தியது எது?" என்று கேட்ப்பார்கள். அதற்கவர்கள் "நாங்கள் தொழாதவர்களாகவே இருந்தோம்."என்று பதில் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:42

சிறந்த அமல்:
அமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புக்கள்:
"(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்." என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ

கூட்டுத் தொழுகையின் சிறப்பு:
ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை:
நமக்கும் அவர்களுக்குமிடையே (நிராகரிப்பவர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும்.யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காபிராகிவிட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, அஹ்மது

பாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை:
என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி

நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது சாட்சி கூறுவதாக இருக்கிறது. அல்குர்ஆன்17:78

இரண்டு தொழுகைகள் முனாபிக்கீன்கள் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாத்தும் இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபிصلى الله عليه وسلم அவர்கள் நவின்றனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள் "ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கிய பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் 'நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும் உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும்' என உளருகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து எழுந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி, முஸ்லிம், முஅத்தா, நஸயீ, அபூதாவூத்

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 12/24/2008 10:07:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for தொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்படு முன்!

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery