செல்போன் - உஷார்......
உஷார்......
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இது ஒரு எச்சரிக்கை இதைபோல் நமது பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது அல்லாஹ் நம்மையும் நம்பிள்ளைகளையு மானக்கேடான விஷயங்களில் பாதுகாப்பானக ஆமீன்
சம்பவம் 1: பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியார் செல்போன் வைத்து இருப்பது சர்வசதரண விஷயமாகிவிட்ட இக்காலகட்டத்தில் அவர்கள் எப்படியெல்லாம் பயண்படுத்துகின்றனர் என்று எந்த பெற்றோரவது பார்த்தது உண்டா? அல்லது கோட்டது தான் உண்டா? இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்க்கின்றேன்!!! என்கின்றன்ர்.
எனது நணபரின் தம்பியின் போனை அவனின் அனுமதியுடன்
பார்த்துக்கொண்டிருந்தேன் அந்த போனிற்கு ஒரு SMS வந்து அதில் பல வார்ணனையான வார்த்தைகள் வந்து இருந்து (ஆனுக்கும் பெண்னுக்கும் பொருந்தும்) நான் அவனினிடம் இது யார் உணக்கு அனுப்பியது என்றதற்கு இல்லை எனது தங்கைக்கு அவள் தோழி அனுப்பியது என்றான். அனுப்பியது பெண் தான் என்று உறுதிபடுத்திக்கொண்டு மேலும் அவனிடம் விவதித்தேன் அவன் பல திடுக்கிடும் செய்தியை சொல்லி அசரவைத்தான்.
அப்பெண் தோழிகளுக்குள் பல ஆபசமான செய்த்திகளை பறிமாறிக்கொள்ளுவதும் உண்டாம் இப்படி அனுப்பி கொண்டிருக்கும்போது ஒருநாள் மற்றொரு தோழியின் போன் அவனது சகோதரனின் கைக்கு மாறியது தெறியாமல் தொடர்ந்து செய்திகளை அனுப்பி கொண்டிருக்கின்றாள், பிறகு அவனும் அவளுக்கு செய்திகளை பெண்னின் பெயரிலேயே பறிமாறிக்கொண்டிருக்கின்றன் ஒருகட்டத்தில் அவள் போனில் பேச கடைசில் ஆண் என்று தெரிந்தவுடன் தொடர்பை துண்டித்துகொள்ள, இப்போதுதான் விபரிதம் ஆரம்பமகிறது அவளுக்கு இவன் அடிக்கடி பேச முயற்ச்சி செய்து இருக்கின்றான் முடியவில்லை அவளுடைய தந்தை ஒருநாள் போனை எடுக்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றி இருக்கிறது உடனே அவன் உங்கள் மகள் தான் எனக்கு அடிக்கடி செய்தி அனுப்பியது என்று ஆதாரத்துடன் நிரூபித்துவிட்டு தப்பிவிட்டான். இதில் குற்றவாளி யார்? அப்பெண்னா? ஆணா?
சம்பவம் 2: EC என்று ரீசார்ஜ் முறையால் வந்த விணை. குடும்ப பெண் ஒருவர் தன்னுடைய போனிற்கு ரீசார்ஜ் செய்ய அருகில் இருந்த கடைக்கு தான் போன் எண்னை கொடுத்து அனுப்ப அங்கு வேலை பார்க்கும் நபருடன் நண்பர்களும் சூழ்ந்து இருந்து இருக்கிறார்கள் (இது தான் நம்ம ஊர்ல சகஜப்பா)அவர்களில் ஒருவன் அந்த எண்னை தன்னுடைய போனில் குறித்து கொண்டு இரவு நேரங்களில் வெவ்வேறு எண்கள் மூலம் அப்பெண்னை தொந்தரவு செய்து இருக்கின்றான் அப்பெண்னின் கணவர் வந்து இருந்த சமயம் அவன் போன் செய்ய வசமாக மாட்டிக்கொண்டன் கணவர் சந்தேகப்படுபரக இருந்து இருந்தால் அந்த பெண்னின் வாழ்க்கை எப்படி போயிருக்கும் என்று சிந்திது பாருங்கள் சகோதரர்களே
மேலும் நம்மவர்கள் காவல் நிலையம் ஏறி புகார் கொடுக்கமாட்டார்கள் என்பதால் இது போல் சில தில்லாலங்கடிகள் கிளம்பி இருக்கனுங்க உஷார்...........
சம்பவம்3:இப்படியுமா இருப்பார்கள் கல்யாண வீட்டில் ஒருவன் என் போனை காணவில்லை போனுக்கு மிஸ்டு கால் பன்னிக்கொள்கிறேன் ஒரு பெண்னிடம் போனை வாங்கி அவனுடைய போனில் தான் நினைத்தது போல் அப்பாவி அப்பெண்னின் எண்னை ஏற்றி கொண்டு அப்பெண்னிற்கு அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டி இருக்கின்றான் கடைசியில் யரென்று பார்த்தால் சகோதரன் முறை கொண்ட தன் தம்பி வயதையொட்டி உள்ள தன் உறவுக்காரன் என்று தெறிந்து கொண்டு மண்னிவிட்டு விட்டார்கள் இப்படி சொந்தத்துக்குள் வேலை காட்டும் இவர்களை என்ன செய்வது போனை பாதுகாப்பது முக்கியமில்லை நம்முடைய மானத்தைபோல் போனின் எண்களையும் பதுகாக்கவேண்டும்
chinnakaka

