தலித்கள் முடி வெட்டத் தடை!
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமரின் அனுபவம் இது... ''என் மகள் வைதேகியை... முடியை கட் பண்ணிட்டு ஸ்கூலுக்கு வான்னு டீச்சர்கள் சொன்னதால்... சேதுராமன் வச்சிருக்கும் சலூனுக்கு என் மகளுடன் போனேன். ஆனா அவர் நாங்க பி.சி.க்கு மட்டுதான் முடி வெட்டுவோம். எஸ்.சி.க்கெல்லாம் வெட்டமாட்டோம்னு சொல்ட்டார். முடி வெட்ட டவுனுக்கு பிள்ளையைக் கூட்டிட்டுப் போக னும்னா.. என்னோட ஒருநாள் கூவேலை பாதிக்குமேன்னு ஊர்ல இருக்கும் மத்த மூணு சலூன்கடைகளுக்கும் அழைச்சிக்கிட்டுப் போயும் யாருமே வெட்டிவிட மாட்டேன்னு சொல்ட்டாங்க. அப்புறம் வேற வழியில்லாம ஸ்கூலுக்கு ஒருநாள் லீவு போடச் சொல்ட்டு பிள்ளைக்கு இதுக்காக டவுனுக்குஅழைச் சிட்டுப் போனேங்க. எனக்கு மட்டும் ஏன் இங்க முடிவெட்ட மாட்டேங்குறாங்கன்னு விவரம் புரியாத எம்பொண்ணு கேக்குது. என்ன பதிலைச் சொல்றது?'' என்கிறார் ஆதங்கமும் வருத்தமுமாய்.
''ஒரு நல்லது கெட்டதுக்கு ஷேவிங் பண்ணிக் கிறதுக்குக் கூட நாங்க நத்தத்துக்குதான் போக வேண்டியிருக்கு. கொஞ்சநாளைக்கு முன்ன வரை டீக்கடை பெஞ்சில் நாங்க உட்காரமுடியாது. இரட்டை டம்ளர் வச்சிருப்பாங்க. கொஞ் சம் கொஞ்சமா போராடித்தான் ஓரளவு உரிமைகளை அடைஞ்சிருக்கோம். ஆனா லும் இந்த சலூன்களின் தீண்டாமைதான் எங்களை சங்கடப்படுத்திக்கிட்டு இருக்கு...'' என்கிறார் பொன்னப்பன் கவலையாய்.
பள்ளி மாணவனான ஜெயராமச் சந்திரனோ, ''அண்ணே நாங்க நத்தத்துக்குப் போய் முடிவெட்டறதுன்னா கூடுதலா பஸ் டிக்கெட்டுக்கு 15 ரூபாவரை ஆகுது. என்ன பண்றது? மூணுமாசத்துக்கொருதரம் ஸ்கூல் பசங்களான நாங்க ஏழெட்டுபேரா சேர்ந்து... நத்தத்துக்குப் போய் முடிவெட்டிக்கிட்டு வர்றோம். நத்தத்தில் உள்ளவங்க... உங்க ஊரைவிட்டுட்டு இங்க எதுக்கு வர்றீங் கன்னு பரிதாபமா கேக்கும் போதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. யாருண்ணே இந்த சாதி மதங்களையெல்லாம் உருவாக்கினா?'' என்கிறான் அப்பாவியாய்.
''எங்க அப்பாவுக்கு ஒரு வருஷமா உடம்பு சரியில்லை. நடக்கமுடியாம படுத்த படுக்கை தான். தலைமுடி மண்டிப்போய் கிடந்ததால் கைத்தாங்கலா எங்கப்பாவை சலூனுக்கு அழைச்சிக்கிட்டுப்போனேன். முடிவெட்ட முடியாதுன்னு சொல் அனுப்பிட்டாங்க. அதனால் முடிவெட்ட முடியாமலே படுத்துக் கிடக்கு எங்க அப்பா'' இது சின்னப்பொண்ணுவின் வேதனை.
'அம்பேத்கார் ஜனசக்தி' இயக்கத்தின் பொதுச் செயலாளரான பெரியசாமி சொல் கிறார்.. ''வத்திப்பட்டியைப்போலவே... இந்த பஞ்சாயத்தில் இருக்கும் ரெட்டியபட்டி, புதுக்கோட்டை, கலசம்பட்டி, காவணம் பட்டிகள்லயும் தத்துகளுக்கு சலூன்காரங்க முடிவெட்ட மாட்டாங்க. இந்த கொடுமைக்கு முடிவு கட்டுங்கன்னு கலெக்டருக்கு மனு கொடுத்திருக்கோம். அடுத்து போராட்டத்தில் குதிக்கப்போறோம்'' என்றார் காட்டமாய்.
இவர்களின் புகார்கள் குறித்து சலூன் கடைக்காரர்கள் சார்பில் வெள்ளிமலையிடம் நாம் கேட்டபோது,''ஊர்ல கட்டுப்பாடு இருக்கு. அதை நாங்க மீறமுடியாது. மீறி அந்த மக்களுக்கு நாங்க முடி வெட்டினால்... பெரும்பான்மையா இருக்கும் அம்பலக்காரங்க முடிவெட்டிக்க வரமாட்டாங்க. அதோட கடையையும் கா பண்ணச்சொல்டுவாங்க. இப்படி நிறைய நடந்திருக்கு. அதனால் தான்...'' என் றார் தயக்கமாய்.
அம்பலக்காரர்கள் தரப்பில் இது குறித்துக் கேட்டபோது...
''காலம்காலமாக இப்படிதாங்க. யாரை எங்க வைக்கணுமோ அவங்களை அங்க வச்சிருக்கோம். இதில் தப்பு என்ன இருக்கு? வேணும்னா தத்துகள் தங்களுக்குன்னு முடிவெட்ட ஒரு கடையை வச் சிக்கட்டுமே..'' என்கிறார்கள் கொஞ்சமும் சங்கோஜம் இல்லாமல்.
இந்தத் தீண்டாமை விவகாரத்திற்கு தீர்வு கிடையாதா என மாவட்ட ஆட்சியர் வாசுகியிடமே நாம் கேட்டபோது, ''எனக்கும் புகார் வந்தது. உடனே தாசில்தாரையும் டி.எஸ்.பி.யையும் அங்கே அனுப்பி விசாரணை நடத்தினோம். அதேபோல் அங்கே பீஸ் கமிட்டியை அமைத்து... எல்லா இடங்களிலும் தத்துகளுக்கு சம உரிமை கொடுக்கணும்னு வயுறுத்தியிருக்கோம். இதை மீறி யாராவது தீண்டாமைக் கொடுமைகளைக் கடை பிடிச்சா... கடுமையான நடவடிக்கை எடுப்போம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.
சம உரிமையை வயுறுத்தினால் மட்டும் போதாது. அதைக் கண்காணிக்க ஒரு அதிகாரிகள் குழுவையும் மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும். அப்போதுதான் நல்ல தீர்வு ஏற்படும்.
நன்றி : நக்கீரன்
இது போன்ற பிரச்சினைகளுக்கொல்லாம் ஒரே தீர்வு இஸ்லாத்தை தங்கள் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொள்வது மட்டுமே.
இஸ்லாத்தை இந்த யுகமெங்கும் எடுத்துரைப்போம். தீண்டாமை எனும் தீய சக்தியை இம்மண்ணைவிட்டும் துடைத்தெறிவோம்.
மேலும் படிக்க : ஏழல்ல எழுபது தலைமுறையானாலும் இன இழிவு நீங்காது!
