மோப்ப நாய்களுக்கு ஷூ கட்டாயம்
முஸ்லிம்களின் மத உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளில் சோதனைக்கு அழைத் துச் செல்லப்படும் மோப்ப நாய்க ளுக்கு இனி, ஷூ அணிவிக்க, பிரிட்டன் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நாய்களை அசுத்தமான விலங்காக முஸ்லிம்கள் கருதுகின் றனர். நாய்கள் தங்களை தொடுவதற்கும், வீடுகளுக்குள் நுழைவதற்கும் அவர்கள் அனுமதிப்பதில்லை. பயங்கரவாதிகளையும், வெடிகுண்டுகளையும் கண்டுபிடிப்பதற்காக, பிரிட்டன் போலீசாரும், பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரும் மோப்ப நாய்களை பயன் படுத்துகின்றனர். ஆனால், இதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தங்களை நாய்கள் முகர்ந்து பார்ப்பதற்கும், தொடுவதற்கும் அவர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். உடமைகளை மோப்ப நாய்கள் சோதனையிடுவதற்கும் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், முஸ்லிம்களையும், அவர்கள் உடமைகளையும் தொடாத வகையில் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப் படுகிறது. ஏற்கனவே, மசூதிகளில் மோப்ப நாய்கள் சோதனையிடும் போது, அவற்றின் கால்களில் ரப்பர் ஷூக்கள் அணிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், முஸ்லிம்களின் வீடுகள், நிறுவனங்களில், போதை மருந்து அல்லது வெடிமருந்து சோதனை நடத்த நேரிட்டால், மோப்ப நாய்களின் கால்கள் அங்கு படாத வகையில் அவற்றுக்கு ரப்பர் காலணிகள் அணிவிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. ஆனால், "முஸ்லிம் சட்டப்படி, நாய்களை அசுத்தமானவையாக சித்தரிக்கப்படவில்லை. நாய்களில் இருந்து வழியும் எச்சில் மட்டுமே அசுத்தமானதாக கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டப் பள்ளிகளில் பெரும்பாலானவையும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் வீடுகளுக்குள் நாய்களை கொண்டு செல்ல வேண்டுமானால், அதில் தவறு இல்லை,' என்று, பிரிட்டனை சேர்ந்த இமாம் இப்ராகிம் மோக்ரா கருத்துக் கூறியுள்ளார்.
