பிள்ளை பிடிக்கிறவன் - எச்சரிக்கை ரிப்போர்ட்!!!
முன்பெல்லாம் "பிள்ளை பிடிக்கிறவன் பிடித்துக்கொண்டு போய் விடுவான்" என்று நமது மூத்தவர்கள் எச்சரிக்கக் கேட்டிருப்பீர்கள். சாக்கு மஸ்தான், பூம்பூம் மாட்டுக்காரன், கோடங்கி, தெருவித்தை செய்பவர் எனப் பல்வேறு விதத்திலும் பிள்ளை பிடிப்பவர்கள் குறித்து எச்சரிக்கப் பட்டிருக்கலாம்.
சிறுவர்-சிறுமியர் காணாமல் போய்விட்டால் ஆறு,குளங்களில் தேடுவதும், பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் அறிவிப்புச் செய்தும் ஊரே பரபரப்பாக இருக்கும். விபரமறியாதவர்களை பிள்ளை பிடிப்பவர்கள் ஆசைவார்த்தை கூறி மயக்கி கடத்திச் சென்று பிச்சையெடுக்க வைத்தல் மற்றும் பிற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்துவதை அவ்வப்போது நாளிதல்களில் செய்திகளாகக் கண்டிருக்கிறோம்!
மக்களிடம் தகவல் தொடர்பும் விழிப்புணர்வும் பெருகியதால் தற்போது இது போன்றச் செயல்கள் தற்காலத்தில் ஓரளவுக்குக் குறைந்து விட்டன. மேலே குறிப்பிட்டவர்களும் தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டுவிட்டதால் இத்தகையர்களின் நடமாட்டம் கனிசமாகக் குறைந்து விட்டது; சந்தேகிக்கும் படியாக யாரேனும் தென்பட்டாலும், காவலரிடம் பிடித்துக் கொடுத்தோ அல்லது தெருவாசிகளால் எச்சரித்தோ விரட்டப்பட்டுகின்றனர். ஆனாலும், இவர்கள் வெவ்வேறு வகைகளில் நம்மிடையே ஊடுறிவியுள்ளனர்.
இத்தகையவர்களின் தொழில்தான் மாறியிருக்கிறதே தவிர இவர்களால் ஏற்படும் சமூகஇழப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. வெறும் யூகத்தின் அடிப்படையில் எழுதவில்லை; நமதூரில் நடந்ததாகக் கேள்விப் பட்ட, நம்பத் தகுந்த தகவல்களின் அடிப்படையில் இதை எச்சரிக்கையாக எழுதுகிறேன்:
நமதூர் கல்யாண மண்டபங்களில் சில வருடங்களாகப் பொருட்காட்சிகள் நடப்பதையும், மலிவான விலையில் பொருட்கள் கிடைப்பதையும் கேள்விப் பட்டிருப்பீர்கள். உள்ளூரில் நீண்டநாட்கள் இருந்திருந்தால் அங்கு சென்றும் இருப்பீர்கள். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை மொத்தமாக,நேரடியாக விற்பதால் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக அலைமோதுகின்றனர்.மீண்டும் மீண்டும் செல்லும் பெண்களின் கூட்டம் மற்ற இடங்களைவிட இங்கு அதிகமாகவே இருக்கும்.
உள்ளூரில் நடப்பதாலும் பாதுகாப்பானது என்பதாலும் நம் தாய்மார்களும், சகோதரிகளும் தங்கள் வீட்டுக் குமரிப்பெண்களையும், திருமண வயதில் இருப்பவர்களையும் பொழுதுபோக்கிற்காக அழைத்துச் செல்வர். இப்படியாகச் சென்றவர்களில் ஒரு முஸ்லிம் இளம்பெண்ணை, அந்தப்பொருட்காட்சியில் கடை விரித்திருந்த இளைஞன் எப்படியோ தொடர்பு கொண்டுள்ளான். (அனேகமாக இருப்பிலில்லாத பொருள் குறித்து அறிந்து கொள்வதற்காகத் தன்னுடைய செல்போன் என்னைக் கொடுத்திருக்கக் கூடும்).
சாதாரணமாகப் பொருளைப் பற்றிய தகவலுக்காக அவனின் பேச்சை நம்பி அவன் செல்போனினுக்குத் தொடர்பு கொண்ட ஒரு பள்ளி மாணவியிடம் ஈமெயிலையும் பெற்றுள்ளான். பொருட்காட்சி முடிந்த பின்னரும் அந்தப் பெண்ணுடன் ஈமெயிலில் தொடர்பு கொண்டு, தன்னைப் பற்றிய அந்தரங்க விபரங்களை மிகமிக ஆபாசமாக ஈமெயிலில் அனுப்பியிருக்கிறான். இதை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல், தனக்கு வரும் மின்மடல்களை பொது இணையச்சேவையுள்ள அல்லது பள்ளிகூடக் கணினியில் திறந்து பார்த்து செய்வதறியாது திகைத்த அந்த அபலைப்பெண் என்ன செய்வதென்று அறியாமல் குழம்பியுள்ளார்.
அதிஷ்டவசமாக, அப்பெண்ணுடன் கூடப்படிக்கும் சகமாணவிகள் விழிப்புடன் இருந்தக் காரணத்தால் இத்தைகைய சூழ்ச்சிகள் வெளியில் வந்துள்ளன. (மேற்கொண்டு ஆபாச மின்மடல் அனுப்பியவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவலில்லை).நாமறியாமல் இப்படி எத்தனை சூழ்ச்சி வலைகள் நம் வீட்டுப் பெண்களுக்கு எதிராகப் பின்னப்பட்டுள்ளவதோ தெரியவில்லை. அல்லாஹ்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்!
நம் பெண்கள் நன்கு படித்து சமூகத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்றும், உலக விசயங்களை அறிந்து கொள்வதற்காகவும் பள்ளிக்கும் இது போன்ற பொருட்காட்சிகளுக்கும் அனுப்புகிறோம். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிராக கபடவேடமிட்டு வெறிகொண்டலையும் ஒரு கூட்டம் பல்வேறு வகையில் சதிசெய்து வருகின்றனர். உணர்ச்சி வயப்பட வைத்து, உள்ளுணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் பெண்களை வழிகெடுப்பதற்கென்றே சில மதவெறியர்கள் அமைப்புகளாக இயங்கி வருவதாகக் கேள்விப்பட்டுள்ளோம். (பயங்கரவாத RSS இயக்கத்தினருக்கு,முஸ்லிம் பெண்களைத் திட்டமிட்டு வழிகெடுக்கும் வழிமுறைகள் குறித்து ரகசிய சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதைச் சில வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்டுள்ளோம்)
சமீபத்தில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகளில் முஸ்லிம் பெண்களும், குழந்தைகளுமே குறிவைத்து கற்பழித்துக் கொல்லப் பட்டார்கள். கர்ப்பினிப் பெண்களையும்கூட ஈவிரக்கமின்றி கொன்றொழித்த மாபாதகர்களுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் என்றுமே ஒரு கண் உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டே முஸ்லிம்கள் மட்டுமே புழங்கும் பகுதியில், கும்பிடுவதற்கு ஒரேயொரு இந்துகூட இல்லாத நமதூர் மேலத்தெருவில் முனிக்கோவிலைக் கட்டி தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணினர். மதச்சண்டைமூட்டி இனப்படுகொலை செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள பயங்கரவாத RSS ஸினரின் சூழ்ச்சிகளில் ஒன்றுதான், மேலே சொல்லப்பட்ட சதிவலை.
நமதூர் கல்யாண மண்டப பொருட்காட்சிகளில் கடை வைப்பவர்களுக்கு நிரந்தரமான தொழில் முகவரியோ அல்லது அடையாளமோ கிடையாது. மொத்தக் கொள்முதல் விலையில் பொருட்களை விற்கிறார்கள் என்பது மட்டுமே அவர்களை நோக்கி அப்பாவி பொதுமக்களின் மோகத்திற்குக் காரணம். இத்தகைய பொருட்காட்சிகளை உள்ளூர்வாசிகளோ அல்லது திருமண மண்டப உரிமையாளர்களோ நடத்தினால் ஓரளவு பாதுகாப்பாக இருப்பதுடன் இத்தகைய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும். வர்த்தகர்கள் நிறைந்துள்ள நமதூரில் குஜராத்திலிருந்து ஒரிஸ்ஸாவிலிருந்தும் வந்து கடை வைக்க வேண்டிய அவசியமில்லை!
பொருட்காட்சிக்கு தங்கள் வீட்டுப்பிள்ளைகளுடன் செல்லும் தாய்மார்களே! உங்கள் அன்பு மகளை அடையாளம் தெரியாத நபர்களுடன் தனித்து விலை பேசவோ அல்லது பொருட்கள் குறித்த பேரம் பேசவோ அனுமதிக்காதீர்கள். எக்காரணம் கொண்டும் தனியாகச் செல்போனிலோ அல்லது வேறெந்த வகையிலும் தொடர்பு கொள்ளவே வேண்டாம்.
பொருட்காட்சிக்கு அனுமதிக்கும் மண்டப உரிமையாளர்களே! உங்களின் மீதுள்ள நம்பிக்கையை அந்நிய விஷமிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடும். எனவே இத்தகையவர்களைப் பற்றிய தகவல்களை முழுதும் அறிந்து வைத்து உங்கள் மண்டபங்களில் இடமளியுங்கள். வர்த்தகர்கள் சங்கம் காவல்துறையும்கூட இதுபோன்ற திடீர் வியாபாரிகளைக் கடுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்து எதிர்கால அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேண்டும்!
இப்படிக்கு,
அதிரை நலன்விரும்பி
அபூஅல்மாஸ் - அபூதாபி
