நான்டெட் மீண்டும் சங்பரிவார பயங்கரவாதிகள் சிக்கினர்
கடந்த ஆண்டு மகாராஷ் டிர மாநிலம் நான்டெட் பகுதியில் சங் பயங்கரவாதிகள் ஏராளமான ஆயுதங்களைத் தயாரித்து வந்ததையும், தயா ரித்த ஆயுதங்களை பதுக்கி வைத்தபோது அது வெடித்த தால் சங் கும்பலைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பலியானதும் இந்த நாடு அறியும்.
2008 ஜூலை 5ஆம் தேதி நான் டெட்டில் மீண்டும் சங் பயங்கரவாதி களின் சதிச்செயல்கள் வெளியாகி உள்ளன.
மோகன்லால் ஹர்தியோஜி மற்றும் போர்லால் பக்சு என்ற இருவரும் நான்டெட் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்களது வீடுகளை சோதனையிட்டபோது படுபயங்கர வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட் கள் கிடைத்துள்ளன.
இரண்டு அதிபயங்கர தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உடனடியாக செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் வேண்டுமென்றே அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்யும் போது ஒரு டஜனுக்கு மேற்பட்ட ஒலிபெருக்கி களுக்கும், ஏராளமான கேமராக்களுக்கும் நடுவில் ஜம்பம் அடிப்பது போன்ற குரூரமான நகைச்சுவை காட்சிகள் இந்த பயங்கரவாதிகளின் கைது சம்பவத்தில் நடக்கவில்லை. இதுகுறித்து சமாதானம் மற்றும் நீதிக்கான சமூக அமைப்பை நடத்திவரும் ஃபெரோஸ்கான்காஜி, ''ஜூலை 5ஆம் தேதி நடந்த இந்த கைது நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக ஏன் வெளியிடப்படவில்லை?'' என்று கேள்வி எழுப்பியவர், ''முஸ்லிம் அல்லாதவர்கள் கைது செய்யப்பட்டால் அதுகுறித்து உண்மைகளை வெளியிடுவதற்கு காவல் துறை ஏன் தயங்க வேண்டும்?'' என்றார்.
நான்டெட்டில் மீண்டும் வெடிகுண்டு கள் சிக்கியதையும், சங் பயங்கரவாதிகள் கையும் களவுமாக பிடிபட்டதை 'இன்குலாப்' என்ற உருது செய்தி ஏடு அம்பலப்படுத்தி இருக்கிறது.
பிடிபட்ட சங்பரிவார் பயங்கரவாதி களில் மோகன்லால் ஹர்தியோஜி (வயது 20) ராஜஸ்தானின் ஜத்ராஸ் பகுதியைச் சேர்ந்தவன். மற்றொருவனான போர்லால் பக்சு (35) ராஜஸ் தானின் கோவிந்த்புரா பகுதி யைச் சேர்ந்தவன். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதிகளின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் விவரம்:
1) எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் 365
2) ஜெலட்டின் குச்சிகள் 400
3) பேட்டரிகள் பொருத்தப்பட்ட அதிபயங்கர வெடிபொருட்கள் கைப் பற்றப்பட்டன.
இந்தியாவில் கடந்த 60 ஆண்டு களாகவே சங்பரிவார் பயங்கரவாதிகள் தீவிரவாதத்தை நிகழ்த்தி வருகிறார்கள். அது தற்போது அவர்கள் அம்ப லமாகும் வேளை வந்துவிட்டது.
1) நான்டெட் (2006)
2) தென்காசி (2008)
3) தானே (2008)
4) நவி மும்பை (2008)
5) தற்போது மீண்டும் நான்டெட் (2008)
என சங் பயங்கரவாதிகளின் தீவிர வாதச் செயல்கள் தொடர்ந்து அம்பல மாகி வரும் நிலையில் நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பிலுள்ள அரசுகள் ஐந்து காசுக்கு பெறுமான மில்லாத அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தம் குறித்து தனது முழு கவனத்தையும், சக்தியையும் அதற்காக விரயமாக்கிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு.
