செவிடன் காதில் ஊதிய சங்கு?
தமிழ்நாட்டில் இருக்கும் வேலூர் கோட்டை வளாகத்தில் இருக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்த தங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கோட்டை வளாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்திய நடுவணரசின் தொல்லியல் துறை இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. இந்த பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு ஒன்று சமீபத்தில் இந்த கோட்டை வளாகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி திரும்பியிருக்கிறது.
இந்த குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பி மோகன் , இந்த கோட்டையில் இந்து மத வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அடிப்படையாக கொண்டு, இஸ்லாமிய வழிப்பாட்டிற்கும் தொல்லியல்துறை அனுமதிக்க வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்றும், இதற்காக தாங்கள் மத்திய அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்,த மு மு க மற்றும் சில முஸ்லீம் அமைப்புகள்,வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நமக்குள்ள இடம் தொழுகை நடத்த கிடைக்குமா அல்லது வழக்கம் போல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகுமா.? பொருத்திருந்து பார்ப்போம்.
