தினமலத்தை கண்டித்து அதிரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
நமது உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேளி செய்து சித்திரம் வெளியிட்ட தினமலத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளித்து போயுள்ளனர். சென்னையை அல்லாத பிற மாவட்ட வெளியீடுகளில் கம்ப்யூட்டர் மலரில் தலைப்பாகையில் வெடிகுண்டு வைத்திருப்பது போன்ற கார்ட்டூனை வெளியிட்டு தங்களுடைய முஸ்லிம்களுக்கெதிரான அரிப்பை தீர்த்துக்கொண்டது தினமலம்.
இதனை கண்டு கொந்தளித்த வேலூர் முஸ்லிம்கள் தினமலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்க காவி உடை தரித்த காவல்துறை கயவர்கள் தங்களுடைய புனித மிக்க ரமலான் மாதத்தின் முதலாம் நோன்பை நோற்றிருக்க அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துள்ளது.
இதனை கண்டு தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கொந்தளித்துள்ளனர். பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதிரையில் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. அதனையும் மீறி அதிரை முஸ்லிம்கள் இன்று (03-09-2008) மாலை 4.30 மணியளவில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டு தினமலரை தடைசெய்யவேண்டும் என்றும் வேலூர் முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை கயவர்களை தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசை வழியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தமுமுக மற்றும் மனித நீதி பாசறை (MNP) அமைப்பினர் ஒருங்கினைத்தனர். (முன்னதாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் செல்பேசி வாயிலாக மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி செய்தியை தெரிவித்தனர்). கூட்டத்தின் முடிவில் தமுமுக மாவட்ட நிர்வாகி ஜனாப் சாகுல் ஹமீது அவர்கள் நிறைவுறையாற்றினார்.
பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
