பேச்சிலர் கிச்சன்.
பேச்சிலர் கிச்சன்.
வளைகுடா நாடுகளில் தனிமையில்(பேச்சிலர்) வசிக்கும் நமதூர் மக்கள் பயன்பெறும் பொருட்டு இந்த எளிய சமையல் குறிப்புகள்.
- ஃப்ரஸ் தேங்காய் கிடைக்காதவர்கள் இங்கு கிடைக்கும் உலர்ந்த தேங்காய் பூவில் கொப்பரை வாசம் வீசுவதை தவிர்க்க ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் ஊற வைக்கலாம்.
- தயிர் முடிந்துவிட்டால் அந்த கப்பில் பால் ஊற்றி வைத்துவிட்டால் 10 மணி நேரத்தில் மீண்டும் கட்டித்தயிர் ரெடி.(ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது)
- இறைச்சி ஆணம் மிஞ்சி விட்டதா. அதில் அரிசிமாவை(புட்டு மாவு) கலந்து சுவையான பிராச்சப்பம் சுடலாம்.
- சஹரில் துணைக்கறிக்கு இங்கு கிடைக்கும் சிக்கன் பர்கரை பொரித்துக் கொண்டால் உண்டக்கலியா போல் சுவையாக இருக்கும்.
- சிறிய நூடுல்ஸ் (மாகி,இந்தோமின்) வெந்ததும் வடித்து விட்டு அதில் முட்டை வெங்காயம் மிளகாய் சேர்த்து தோசைபோல் சுட்டால் திடீர் முர்தபா ரெடி.
ஃபாஸ்ட் நோன்புக்கஞ்சி:
ஒரு கரண்டி எண்ணெயில் பாதி வெங்காயம் பாதி தக்காளி ஒரு கரண்டி இஞ்சி-பூண்டு கலவை சிறிதளவு கொத்துக்கறி(கீமா) விட்டு வதக்கி இரண்டு கப் நீர் விட்டு ஒரு கரண்டி ஓட்ஸ் தூவி கொதிக்க வைத்து இறக்கினால் சூப்பர் கறிகஞ்சி தயார்.
ஒரு கொசுறு தகவல்: இந்த வருட ரமழான் ஆங்கில மாதம் மற்றும் நாளில் வந்திருக்கிறது. ரமழானும் செப்டம்பரும் ஒன்பதாவது மாதங்கள். தேதியும் ஒன்றே ரமழான்-1 செப்டம்பர் -1. இதற்குமுன் எப்போதாவது வந்திருக்கிறதா?
தொகுப்பு - அபூஸமீஹா
--
Peace be on You
Abubaker
சகோ. அபுபக்கரே, நீங்கள் திருமணமான பேச்சிலரா? சமையல் டிப்ஸ் அருமை.... வாழ்த்துக்கள். நேரடி பங்களிப்பிற்கு ஆர்வமிருந்தால் மின்னஞ்லிடுங்கள்.
அதிரை எக்ஸ்ப்ரெஸ்

