தொடரும் தினமலரின் முஸ்லீம் விரோத போக்கு...
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் புனிதமிகு ரமலான் மாதம் தொடங்கியிருக்கும் இன்று, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் முஸ்லீம்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருக்கும் இந்த நல்ல வேலையில், பார்ப்பன வெறி பிடித்த தினமலர் நாளிதழ் மட்டும் தனது முஸ்லீம் விரோத போக்கை சற்றும் சளைக்காமல் மேற்கொண்டுள்ளது. பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூட பெயரளவுக்காவது இந்த ரமளான் மாதம் தொடங்கியதன் நிமித்தம் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சமயத்தில் தினமலர் மட்டும் தனது விஷமத்தனத்தை சில உள்நோக்கங்களுடன் மேற்கொண்டுள்ளது என்பது தான் மிகவும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.
குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஊட்ட வேண்டும் என்ற ஒரு பாசிச எண்ணத்துடன் இந்த நேரத்தில் இந்த விஷமக் கார்ட்டூனை வெளியிட்டு தனது அரிப்பைத் தீர்த்துக்கொண்டுள்ளது.
இன்று வேலூரிலிருந்து வெளிவந்த தினமலர் நாளிதழின் இலவச பதிப்பான கம்ப்யூட்டர் மலரின் 12ம் பக்கத்தில், வேண்டும் என்றே கட்டுரைக்கும் தலைப்பிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல், உள்நோக்கத்துடன் 'சினிமா பார்க்க ஒரு வெப்சைட்' என்று தலைப்பிட்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒரு கார்ட்டூனையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஒரு முஸ்லீமின் தலைப்பாகையின் மேல் வெடிகுண்டின் திரி பற்ற ஆரம்பிப்து போல் உள்ள அந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூனை போட்டு தனது முஸ்லீம் விரோத சிந்தனையை இணம் காட்டியுள்ளது.
இப்பொழுது ஒரிசாவில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வ வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொலை வெறித்தாக்குதல்களை மறைத்து, அதை விட்டும் பொது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நோக்கத்துடன் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டிருப்பதாக பல சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்கள் தங்கள் கைவசம் இருக்கின்றது என்ற காரணத்திற்காக எதை வேண்டுமானாலும் எழுதி வெளியிடலாம் என்ற துரோக எண்ணத்துடன் களம் இறங்கி இருக்கும் தினமலர் நாளிதழுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் எழுதுகோல் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம் என்பதை உணர வேண்டும். இனிமேலும் உண்டோம் உறங்கினோம் என்றில்லாமல் நம்மால் இயன்ற அளவு இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தவேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது முழுபலத்தையும் பிரயோகித்து இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தினால் வெற்றி வெகுதூரத்தில் இல்லை... என்பதை புரிந்து செயல்படுவோம்.

