இதுதான் தருணம்
(சகோ.அபூஅசீலாவின் ஆக்கத்தை ஆமோதித்து வழிமொழிகிறேன்)
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர்;ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான் (குர்ஆன் 061:008)-இதைவிட மேலான கருத்தை எந்த ஒரு படைப்புகளும்(மனித இனம் உள்பட) சொல்ல முடியாது.அனாலும், அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டவனாக என் சிற்றறிவிற்கு தோன்றியதைச் சொல்ல விழைகிறேன்.
எதற்கும் காலம் கனிந்து வர வேண்டும் என்பார்கள்.காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது அனுபவ மொழிகள்.ஒரு எதிரி வீழும் போதே நம் கோட்டை,ஆள் பலத்தை அதிக்கப்படுத்தும் பொழுது பத்து எதிரியை ஒரே நேரத்தில் வீழ்த்தியதற்குச் சமம்.எதிரிதான் ஒழிந்துவிட்டானே பிறகு மற்ற எதிரிகளை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டால் பின் தோல்வியுற்றவனின் பந்துக்களும்,மற்ற எதிரி(பார்பானியன்)களும் ஒன்று சேர்ந்து நம்மைவிட பலம் பெறக்கூடும்.
சகோதரர் அபூஅசீலா எழுதியது போல் இதுதான் தருணம் உடனே நாம் இதை ஆரம்பிக்க அணைத்து சகோதர அமைப்புகளும் ஓர் கருத்தில் வரணும் என்பதே என்னைபோல் பாமர வாசகனின் வேண்டுதல்.வழக்கம் போல் அபூ அசீலா நல்ல ஆக்கத்தை அனுப்பி ஊக்கத்தின் முதல் விதை விதைத்துவிட்டார்,விதை முளைத்து,மெல்ல வளர்ந்து பூவாகி,காயாகி பின் கனியாகவும்,இலை,கிளைகள் பல பரப்பும் பெரும் மரமாகி நம் சமுதாயத்துக்கு ஒரே குடையாக நிழல் தரும் நிசமாக(ரியலிசம்) வாழ்த்துகிறேன்.
----முஹம்மதுதஸ்தகீர்.
