போலி....................................ஸ் மரியாதை!
நோன்புக் கஞ்சியை மூலிகைக் கஞ்சின்னு சொல்லி பாக்கெட் போட்டு விற்றால் நல்லா விலைக்குப் போகும். காய்கறி பிரியாணியையும் மூலிகை பிரியாணின்னு அமெரிக்காவுல விக்கிறதாக் கேள்விபட்டேன். நம்ம ஊருப் புள்ளைங்க விசாரிச்சு அப்படியே ஒரு ப்ளேட் பார்சலும் அனுப்பி வச்சா ஒருநாள் சஹருக்குச் சாப்பிட்டுட்டு துஆச் செய்வேன்!
என்னதான் சொல்லுங்கம்மா நம்மூர் ஜாவியா நார்சா பிரியாணியை அடிக்க இதுவரை எந்த பிரியாணியும் பொறக்கலே ;-) ஜாவியா பிரியாணியைக் காயவச்சி வெளியூர்களுக்கும் பரக்கத்துக்காக? அனுப்புவார்கள் தெரியுமா? எது எப்படியோ பிரியாணிக்கும் இந்திய முஸ்லிம்கள் காப்புரிமை (PATENT) வாங்கி வச்சுடுறது நல்லது. இல்லேன்னா அமெரிக்காக்காரன் முந்திக்கிட்டா நம்ம பாடு திண்டாட்டமாகி விடும்.
இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தாகச் சொல்லி, அவர்கள் கட்டியதில் தாஜ்மஹால், செங்கோட்டை போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு பாபர் பள்ளிவாசலை அவமானச்சின்னம் என்று இடித்த மானம் கெட்டதுகள், மொகலாயர்கள் கொண்டுவந்த பிரியாணியைச் வெட்கமில்லாமல் சாப்பிட்டு விட்டுத்தான் இடித்தான்கள்.
எதையோ சொல்ல வந்துட்டு என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்கேன். முந்தாநேத்து தொலைக்காட்சிச் செய்திகளில் டெல்லி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களைக் காட்டினார்கள். முகம் துணியால் மறைக்கப்பட்டிருந்தன. வழக்கமா கருப்புத் துணியால் அல்லது கோனிப்பையால் மூடி ஊடகங்கள் முன்னிறுத்துவதுதான் வழக்கம். ஆனால்,வழக்கத்துக்கு மாத்தம வெள்ளை சிகப்புக் கட்டம்போட்ட சவூதி அரேபியர்கள் அணியும் தலப்பாத் துணியால் அவர்களின் முகம் மறைக்கப்பட்டிருந்தது!அரபு நாட்டுக்குப் போகவர இருக்கும் சபுராளிகள் அந்தமாதிரி துணியைச் சால்வைகளாகப் போட்டு பந்தா பண்ணுவார்கள். கீழத்தெரு காதர் பிஞ்சு பழசாப்போன ஒரு சால்வையைத் தோளில்போட்டுக் கொண்டு திரியிறார். பள்ளிவாசலில் தொழவைக்கும் இமாம்களும், தொழஅழைக்கும் சாபுகளும் (முஅத்தின்), மதரஸா மாணவர்களும் பெருமிதத்துடன் தோளில் போட்டுத் திரிவார்கள்.சிங்கப்பூர்/ மலேசியா சியா சட்டை, இந்தோனேசியா கைலி மாதிரி இந்த சவூதி தலைப்பாவும் பிரபலம். அதைத் தோளில் போட்டுக் கொண்டு குத்பாவுக்கு போனால் ராஜகம்பீரம் போங்க!
(இச்சால்வைகள் குஜராத்திலிருந்துதான் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. குஜராத்தில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த பின், சீனாவிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன என்று பேப்பரில் படித்தேன்.)
நாடு முழுவதும் எத்தனையோபேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகப்பட்டுக் கைது செய்யப்படுகிறார்கள். போலீஸ்காரர்களில்கூட சங்கிலித் திருடன், வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். அவர்களை யூனிபார்ம் போட்டு அழைத்து வருவதில்லை! பிக்பாக்கெட் முதல் பயங்கரக் குற்றம் செய்தவர்களை எல்லாம் சாதாரணமாக அழைத்துவரும் போலீஸ், முஸ்லிம்களை மேற்படி கெட்டப்புடன் அரபு நாட்டு சால்வையுடன் செய்தி ஊடகத்தினர் முன்பாக நிறுத்தும் மர்மம் விளங்கவில்லை!
அதேபோல், காசுக்காக கண்ட கம்முணாட்டிக்கும் முந்தானை விரிக்கும் டிவி, சினிமா நடிகைகள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்திற்காக அணியும் பர்தாவுடன் அழைத்து வருவதும்,ஆண்களை அரபுநாட்டு தலைப்பாவால் முகத்தை மூடியும் காட்சிப் பட்டுத்துவதிலும் காவல்துறையில் ஊடுருவி உள்ள காவித்துறையின் சதித்திட்டம் அம்பலமாகிறது.
சென்ற இடமெல்லாம் கலவரம் செய்யும் வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பொதுமக்களுக்குக் காவல் என்ற பெயரில் அணிவகுக்கும் காவலர்களில் பெரும்பாலோர் பக்திப் பரவசத்துடனே செல்வர். சாதிக் கலவரங்களால் பதட்டமடையும் தென்மாவட்ட தேரிழுப்புகளில் போலீஸாரே பக்தியுடன் தேரிழுப்பதையும் அரோகரா கோஷம் போடுவதையும் காணலாம்!
கலவரங்களில் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைப்பது சட்டரீதியானதுதே. தடியடியின்போது வழக்கமான போலீஸ் லத்திகளை, முழங்காலுக்குக்கீழே மிதமாக அடிப்பதுதான் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், திண்டுக்கல் விநாயகர் ஊர்வலத்திலும் வேலூர் தினமலர் எதிர்ப்புப் போராட்டங்களிலும் தடியடியில் போலீஸார் கொலைவெறியுடன் ஆளுயர சிலம்பங்களைக் கொண்டு தனியா மாட்டிகிட்ட ஒருவரை ஐந்தாறு காவலர்கள் சேர்ந்து ஊடுகட்டியடிப்பதைக் கண்டபோது, சங்கபரிவாரங்களின் சூலாயுதக் குத்தலே பரவாயில்லையோ எனுமளவுக்கு கொடுமையாக இருந்தது.
குற்றவாளிகளைக் கையாள்வதில் முஸ்லிம்களிடம் ஒரு அணுகுமுறையும் இந்துக்குற்றவாளிகளிடம் வேறு அணுகுமுறையும் கொண்டிருப்பதிலிருந்து, காவல்துறை பெரும்பாலான சூழல்களில் காவித்துறையாகவே செயபட்டு வந்துள்ளது. கோவைக் கலவரங்களில் காவித்துறைக்கும் காவல்துறைக்கும் கொஞ்சமும் வித்தியாமின்றி முஸ்லிம்களை இணைந்து வேட்டையாடினர். குஜராத்திலும் இதேநிலைதான்!
மாலை போட்டிருந்தால் திருப்பதி,சபரிமலை ஆடையுடன் சீருடையின்றிப் பணியாற்றவும் அனுமதி உண்டு! கமிஷனராகவே இருந்தாலும் மலைக்கு மாலை போட்டிருந்தால் (குரு)சாமியாகி விடுவார்! தாடி வைத்துக் கொண்டு ஒரு முஸ்லிம் சாதாரண ஏட்டாகப் பணியாற்ற முடியுமா என்று தெரியாது!
போலீஸ்காரங்களோட உன்னதமானப் பணியை மனதார மதிப்பவன் நான்; மற்ற அரசுப் பணியாளர்களைப்போல் இவர்களுக்கு யூனியனோ சங்கமோ இல்லை. பண்டிகை நாட்களிலும் டூட்டி இருக்கும். எந்நேரமும் டூட்டிக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதால் நிம்மதியாகக் குடும்பத்துடன் கழிக்க முடியாது. இவர்கள் மத மாச்சாரியங்களுக்கும் சாதிப்பாகுபாட்டிற்கும் அப்பாற்பட்டுச் செயல்பட்டால்தான் சட்டம் ஒழுங்கை நேர்மையாகக் காக்க முடியும்; அதைப் பெரும்பாலோர் தற்போது பின்பற்றுவதில்லை என்பதால் போலீஸாரில் பலர் போலி-களாகவே இருக்கிறார்கள்.
இவ்ளோ செஞ்சாலும் பாருங்க, நம்ம புள்ளைங்க வருசா வருசம் நடத்தும் கால்பந்து போட்டியின் மொதநாளன்று கால்பந்தை உதைத்துத் தொடங்கி வைக்கும் மொதல் மரியாதையை சுற்றுவட்டார போலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவிக்கிறோம். நம்ம சாச்சாவையும் அவருடன் நிற்க வைத்து போட்டோ எடுப்போம்.இதையெல்லாம் நம்ம தினமலர் நிருபரோ தினத்தந்தி நிருபரோ ஒருநாளாச்சும் போட்டோவுடன் செய்தியாகப் போட்டதாகத் தெரியவில்லை.
பின்குறிப்பு: விருந்துகளில் விரிக்கப்படும் பேப்பரை சஹன் வைக்கும் வரை சீரியசாகப் படிக்கும் யாராச்சும் அதுமாதிரி போட்டோவோ செய்தியோ கண்டிருந்தால் மறக்காமப் பின்னூட்டம் போட்டு வைங்கமா.
www.ஊர்சுத்தி.உமர்