தமிழில் முஸ்லிம்களுக்கானத் தனிநாளிதழ் சாத்தியமா?
இதன் தொடர்ச்சியாக முஹம்மது நபி ஸல்.அவர்களைப் பற்றி யெலன்டன் போஸ்டென் டென்மார்க் பத்திரிக்கை சிலவருடங்கள் முன்பு வெளியிட்ட கேலிச்சித்திரத்தை, விஷமத்தனமாக தினமலர் மீள்பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து தமிழக முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்புகளைப் பலமாகப் பதிவு செய்துள்ளார்கள். வழக்குகள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் தவிர்த்து மின்மடல் குழுமங்கள் மற்றும் இணைய தளங்களில் இதுகுறித்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வளைகுடா மற்றும் தமிழர்கள் அதிகமாக பணியாற்றும் மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தினமலர் இணைய தளத்தை முடக்கும் முயற்சிகள் துரிதமாக நடந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட நாடுகளிலுள்ள இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் முஸ்லிம்களின் கோரிக்கையையும் மனக் குமுறலின் நியாயத்தையும் ஏற்று தினமலரை தடைசெய்யும் பட்சத்தில் கனிசமான தமிழ், முஸ்லிம் வாசகர்களை தினமலர் இழக்கப்போவது உறுதி (இன்ஷா அல்லாஹ்!) [ தற்போதைய நிலவரப்படி அமீரகத்தில் தினமலர் இணைய தளம் தடை செய்யப்பட்டுள்ளது]
செப்டம்பர்-11, தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு உலகலாவிய அளவில் இஸ்லாத்திற்கு எதிரான எதிர்ப்பலைகளை ஊடகங்கள் வாயிலாக வேகமாகப் பரப்பப்பட்டன. அதுவரை இஸ்லாம் என்றாலே என்னவென்றே அறியாதார்கூட, இறுதி வேதமாகிய குர்ஆனின் மொழிபெயர்ப்புகளை அதிகமாக வாங்கிப்படிக்கலாயினர். இஸ்லாமிய எதிர்ப்பலை அடங்காமல், முஸ்லிம்களைப் பற்றிய அபரிமித அச்சத்தை விதைப்பதில் பார்ப்பன ஆதிக்க ஊடகங்களும் சரியாகப் பயன் படுத்திக் கொண்டதன் விளைவு! இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் முஸ்லிமல்லாதார்களிடம் ஏற்பட்டு, குர்ஆன் மொழிபெயர்ப்புகள் என்றுமில்லாதளவுக்கு விற்றுத் தீர்ந்தன.
உலக மக்களில் ஐந்தில் இருபங்கினரின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிப் போடக் காரணமான இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன முஹம்மது நபி ஸல் அவர்களைத் தூற்றுவது நபிகளார் காலத்திலிருந்தே தொடர்ந்த போதிலும் அல்லாஹ்வின் ஜோதியை அவர்களின் வெறும் வாய்களால் அணைக்க முடியாமல் இறுதியில் இஸ்லாம் வென்றதாகவே வரலாறுகள் பதிவு செய்து வைத்துள்ளன. தினமலர் போன்ற பார்ப்பனக் கையேடுகள் இவற்றை அறிந்தும் அறியாமல் முஸ்லிம்களைப் பற்றியச் செய்திகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பீதியூட்டி எழுதிவருவதோடு இதுபோன்ற விஷமத்தனத்தில் சிலவருடங்களாக ஈடுபட்டு வருகிறது.
எதிர்ப்புகள் வந்தால் "வருந்துகிறோம்" என்று பெட்டிச் செய்தி வெளியிட்டு மீண்டும் மீண்டும் விஷமம் செய்யும் தினமருக்கு முஸ்லிம்கள் சரியான செருப்படியைக் கொடுத்துள்ளார்கள். இதுபோல் உணர்ச்சிவயப்பட வைத்து கலவரத்தைத் தூண்டி அரசியல் குளிர்காயும் சங்பரிவாரங்களின் பார்ப்பனச் சூழ்ச்சியில் தினமலரும் பங்கெடுத்ததன் மூலம் தமிழக முஸ்லிம்கள் நெடு நாட்களுக்குப் பின்னர் ஒன்றுசேரும் உன்னதமான வாய்ப்பை இந்த ரமழானில் தினமலர் ஏற்படுத்தித் தந்துள்ளது.
முஸ்லிம்களுக்குள் தெளிவு பெறவேண்டிய மார்க்கம் விளக்கங்களை முரண்பாடுகளாக முன்னிறுத்தி பரஸ்பரம் ஊடகங்களில் வசைபாடிக் கொண்டிருந்த முஸ்லிம் அமைப்புகளும், அரசியலில் கொட்டைபோட்ட கட்சிகள் முதல் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட கட்சிவரை நபிகளாரை அவமதிக்கும் தினமலரின் விஷமத்தை கண்டித்துள்ளனர்.வழிபாடுகளால் இறையருளைப் பெறும் ரமழான் மாதத்தில் எங்கள் உயிரினும் மேலான நபிகளாருக்கு ஆதரவாகக் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருமித்தக் குரலில் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதன் மூலம் தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமைக்காண விதையை தினமலர் விதைத்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் இந்த ரமழானின் நற்செய்தியாக தமிழக முஸ்லிம்கள் தொடர்ந்து தினமலர் போன்ற பார்ப்பனச் சித்தனை நச்சூடகங்களைப் புறக்கணிப்பதோடு முஸ்லிம்களுக்கான நாளேடு ஒன்றைத் துவங்கவும் முயற்சி செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கான நாளிதழ் சாத்தியமா என்று யோசித்து இனியும் காலம்கடத்தாமல் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே இயங்கி வரும் நலிவடைந்த பத்திரிக்கையை எடுத்து நடத்தலாம்.
திமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முரசொலி நாளிதழ் தடையின்றி கட்சித் தொண்டர்களை மட்டுமே நம்பி வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிமுகவிற்கு Dr.நமது எம்ஜியார்!திராவிடர் கழகத்திற்கு விடுதலை; பாமகவுக்கு "தமிழோசை" இவை பரபரப்புச் செய்திகளையோ, சினிமாச் செய்திகளையோ முன்னிறுத்தாமல் தங்கள் கட்சி சம்பந்தப்பட்ட செய்திகளையே பிரசுரித்து இலாபகரமாக இல்லாவிட்டாலும் நஷ்டமின்றி தொடர்ந்து இயங்கி வருகின்றன என்பதைக் கவனத்தில் கொண்டால் முஸ்லிம்களுக்கான தனிநாளிதழ் தொடங்கப்பட்டால்,தமிழகத்தின் அனைத்துப் பகுதி முஸ்லிம்களும் ஆதரவளிக்கும் நிலையில் நஷ்டப்பட வாய்ப்பில்லை.
உடனடியாக செய்தியாளர்களுக்கு எங்கு செல்வது என்ற கவலையும் தேவையில்லை. தற்போது கொடிகட்டிப்பறக்கும் தமிழ் முஸ்லிம் வலைப் பதிவர்களில் பலர் சர்வதேச செய்தியாளர்களுக்கு இணையாக திறமையாக எழுதி வருகிறார்கள். அதிரை எக்ஸ்ப்ரஸ் போல் ஊருக்கு ஒரு வலைப்பூ செய்தி மடலை ஏற்படுத்தி அவற்றை ஒருங்கிணைத்தாலே ஆண்லைன் செய்தியும் உடனுக்குடன் கிடைத்து விடும்.
செய்திகளின் தன்மையைப் பொருத்து மேற்சொன்ன நாளிதழ் வாசகர்களும் விளம்பரதாரர்களும் நமக்கான நாளிதழை நோக்கித் திரும்பினால் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் பாலமாக அது விளங்கும் என்பதில் மிகையில்லை! அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர்;ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான் (குர்ஆன் 061:008)
அபூஅஸீலா-துபாய்

