மறுமை - ( மரணத்திற்கு பிறகு)
இஸ்லாமியா மார்க்கத்தில் மறுமையை நம்புவது இஸ்லாத்தின் அடிப்படையில் ஓர் அங்கமாக விளங்குகிறது. எனவே, ஈமானின் (இறை விசுவாசத்தின்) ஓர் அம்சமான மறுமையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியாது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
உலகில் உள்ள அனைவரும் மரணத்தை அறிந்து வைத்துள்ளனர். இம்மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் ஒர்நாள் மரணித்தே ஆகவேண்டும் இது இறைவனின் நியதி.இந்த உண்மையை அனைவரும் அறிந்தே வைத்துள்ளனர், என்றாலும் மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்வைப்பற்றி இவ்வுலகில் மாறுப்பட்ட கருத்துகளைவும், இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதனை இங்கே காண்போம்.
மரணத்திற்கு பிறகு ஒன்றுமில்லை என்பது எல்லாம் மக்களை பயமுறத்துவதற்கு மதவாதிகள் கண்டுபிடித்தாது என்று நாத்திகர்களின் கொள்கையாக உள்ளது. மரணத்திற்கு பின் இவ்வுலகில் செய்த நண்மை தீமைகளுக்கு ஏற்ப மறுபிறப்பு உண்டு என்று இந்து மதத்தினர் நம்புகின்றனர்.கிருஸ்துவர்களை பொறுத்தமாட்டிலும் முஸ்லீம்களின் கருத்துகளுடன் ஒத்துபோனாலும் அவரவர் கடவுள் கொள்கையில் காணபாடும் வேறுபாடுகளுக்கேற்ப மறுமை நம்பிக்கையிலும் வித்தியாசப்படுகின்றனர். இவ்வாறு நம்பிக்கைகள் வித்தியாசப்படும் என்பதால்தானோ திருமறை அல் குர் ஆன் கூறுகிறது (அவன்) அளவற்ற அருள்ளான்: மிககிருபையுடைவன் அவனே நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி மறுமை நாளின் அதிபதியாக நம்பச் சொல்லும் அதே வேளை மறுமையயும் நம்பச்சொல்கிற்து.
மறுமை நம்பிக்கையென்பது மரணத்திற்குப்பிற்கு உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு உல்கில் செய்த நண்மை தீமைகளுக்கேற்ப கூலிகள் வழங்கபடும் என்பதாகும். கண்ணால் புலண்கலால் அறியப்படாத்வைகளை நம்புவது மடமை என்பது நாத்திகர்களின் நம்பிக்கை, அவர்களின் இந்த நம்பிக்கைபடியே கூட மறுமையை மறுக்கமுடியாது. ஏனெனில் காணாத, புலண்கலால் அறியப்படாத ஒன்றை இல்லையென மறுக்க இயலாது. தவிர, மனிதன் தனக்குள்ள புலன்கள் யாவும் வரையறுக்கப்ப்ட்டுள்ளன மற்றுக்கருத்துகிடையாது. என்றாலும்கூட நீண்டா நாட்கள் நோயின்றி வழவேண்டும் என விறும்புகின்றான். எப்போதும் அழகான, இளமையான வழ்க்கைத்துணை வேண்டும் என விரும்புகிறான். சொத்து சுகங்களை சேர்த்து நிம்மதியாக வாழவேண்டுமென்றும் ஆசைப்படுகிறான். ஆனால் இவை அனைத்தும் கடினம் என்றும் தெறிந்து வைத்துள்ளான். ஒரு வேளை இவை கிடைத்தாலும். அனுபவிக்கமுடியாமல் போகுமோ என்றும் பயமுள்ளது. இவை அனைத்தும் மறுமை உள்ளது என்று அவன் உள்ளம் உரைக்கும் உண்மைகளே. தவிர, இவ்வுலகில் நடைபெறும் குற்றசெயல்களைப் பொறுத்தவரையில் எந்த விதத்திலும் நியாப்படுதிவிடலாம். அச்செயல்கள் பாவம் என்று ஒப்புக்கொள்வதாக இருந்தால் மறுமையையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் ஏனென்றால் இங்கு தண்டனைகள் நியாப்படி கிடைப்பதில்லை ஒருவனுக்கு அதிகம்மாகவும் மற்றவனுக்கு அவன் குறைவகவும் நீதி வழங்கப்படுகிறது. இதன் முலம் மனிதன் மறுமை ஒன்று அவசியம் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறான், மறுமையில் மட்டுமே சம நீதி கிடைக்குமென்று உணர்து கொள்கிறான்
இத்தகைய மறுமை நம்பிக்கை உள்ளவர்களால்தான் உலகில் நல்லறங்கள் புரிய முடியும். தீயன்வற்றிலிருந்து விலகி இருக்கமுடியும். அப்போதுதான் உலகில் உண்மையான சாந்தியும், சாமாதானமும் உண்டாகும். ஆக மறுமை நம்பிக்கை மூலமே மனிதன் இவ்வுலகில் நிம்மதியாக், சந்தோஷமாக வாழமுடியும். திருக்குர் ஆன் மறுமையின் பல் வேறு நிகழ்வுகளை அழகாக சொல்கிறது, குர் ஆனில் ஏறத்தாழ மூன்றில் ஒர் பாகம் மறுமையை பற்றிய வசனங்களே இடம் பெற்றுள்ளன. மறுமை நாள் ஏற்படுவதற்கு முன்னோட்டமாக் இவ்வுலகமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிக்கப்படுவது பற்றியும், வானமும் அதிலுள்ளவைகலும் சுருட்டி சிதறடிக்கப்படுவது பற்றியும் இறந்த உயிரினங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவது, மனிதனின் அன்றைய நிலைப்பற்றி அந்நாளில் அமையப்போகும் நீதி விசாரணை பற்றி , விசரணாயின் போது வாய், சீலிடப்ப்பட்டு கை கால் உறுப்புகள் பேசுவது பற்றி அந்த விசாரணையின் முடிவில் நல்லவர்களுக்கு வழங்கப்படவுள்ள கனிவகைகலும் ஆறுகள் நிறைந்த சுவர்க்கம், தீயவர்களுக்கு வித விதமான நெருப்புகளினால் சூழப்பட்ட நரகம் குறித்து வல்ல அல்லாஹ் தனது திருமறை குர் ஆனில் அதிக அதிகமாக விவரித்துள்ளான்.
அல்குர் ஆன் குறிப்பிட்டுக்காட்டும் பல செய்திகளை இன்றைய நவீன அறிவியல் உண்மைப்படுத்துதைப் போலவே, மறுமைநாளின் முன்னோட்டமாக அல்லாஹ் வர்ணித்துள்ளன் சூரியன் ஒளியிழந்து போகும் நிலை சாத்தியாமனது என அறிவியல் ஆரச்சியாளர்கள் ஒப்புக்கொள்கின்றனரிதன் மூலம் மறைமுகமாக மறுமையையும் ஒப்புக்கொள்கின்றனர்.
இத்தகைய அவசியமான்,சத்தியமான் ஒன்றை அடிப்படை நம்பிக்கையாக வலியுறுத்துவதன் மூலம் இஸ்லாம் இவ்வுலக வாழ்க்கையும் இனிமையானதாக ஆக்குகின்றது. இது மனிதர்கள் மத்தியிலே மகிழ்ச்சி நிலவக் காரணமாகின்றது மேலும், வல்ல அல்லாஹ் அந்த நாளில் விசாரணைக்கு சாட்சியாக அழைப்பவை இவ்வுலகில் மனிதனிடத்தில் மௌன சாட்சிகளாக் விளங்கி வந்த கை கால் கண் போன்ற உறுப்புகளைதான். மனிதன் மண்ணில் சில்லுப் புரட்சி செய்ய முடிகிறபோது, இம்மனிதனை படைத்திட்ட இறைவனால் மனிதனின் உறுப்புகளை பேச வைப்பது சிரமமான் கரியமல்லவே.
எனவே, நிச்சயமாக வர இருக்கும் மறுமைக்கு ஏற்ற வகையில் நமது செயல்களை அமைத்துக்கொண்டால் மாத்திரமே, வெற்றி பெற்றவர்களாக் நாம் எவ்வாறெல்லம் வசதியாக, இளமையாக், செழிப்பாக நிரந்தரமாக வாழவேண்டும் என்று எண்ணினோமோ அவ்வாறு ஜெய சீலர்களாக் இருக்கமுடியும் இதனை மறுத்து மறுமையை நம்பாமல் நம் மனம்போனபடி இவ்வுலகில் வாழ எண்ணினால் மறுமையில் சீரழிந்தவர்களாக, நரகப்படுகுழியில் தலைகுப்புற விழுபவர்களாக, கொழுந்துவிட்டு எறியும் நரக நெருப்பை சுவைப்பவர்களாக அசுத்தமும் சீழும் நிறைந்த பானத்தை குடிப்பவர்காளக கள்ளி, கற்றாழை போன்றவைகளை உணவாக உட்கொள்பவர்களாக ஆக நேரிடும்.
எனவே, வல்ல அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிட்டுள்ள மறுமையின் அத்தாட்சிகளை உணர்தவர்களாக மறுமையை முற்றிலும் நம்பி அதற்கான தயாரிப்புகளை (நல் அமல்களை) அதிகம் சேர்த்தவர்களாக நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெற குர் ஆனும் ஸூன்னாவும் தடுத்துஇருக்ககூடிய அனைத்திலிருந்தும் விலகியவர்களாக வாழ முயற்ச்சிப்போம். அதன் மூலம் நிர்ந்தரமான சுவர்க்கதிற்கு உரியவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோமாக.
நன்றி: இஸ்லாமிய கலாச்சர மையம் தம்மாம்
