சத்தியம் அது சத்தியம்
1976-ல் வெளியான ஒரு புத்தகம் மேற்குலகை உலுக்கியது. குறிப்பாக ஐரோப்பிய விஞ்ஞானிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
'குர்ஆன்,பைபில் மற்றும் அறிவியல்: அறிவியல் பார்வையில் சமய நூல்கள்' என்ற அந்த புத்தகம் இலட்சக்கக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. உலகின் பல்வேறு மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பட்டது. அன்றைய தொலைகாட்சியிலும் விவாத மேடைகளிலும் பல்வேறு தலைப்புகளில் விவாதங்களை முன்னிறுத்திய அந்த நூலை எழுதியவர் பிரெஞ்சு தொல்லியல்
மற்றும் உயற்கூறியல் விஞ்ஞானி மாரிஸ் புகைல் என்பார்.
இத்தனை பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அந்த புத்தகத்தில் அப்படி அவர் என்னதான் எழுதியிருந்தார். அதில் இருந்த செய்திதான் என்ன..?
'நான் எகிப்தின் அருங்காட்சியகத்தில் மம்மிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அங்கு வரும் ஏராளமான சுற்றலா பயணிகள் 'ஆஹா.. என்ன ஒரு விந்தை
இது. காலத்தை கடந்த மனிதர்களை காண்பது எப்படி ஒரு பிரமிப்பை தருகிறது..' என்று விழிகள் விரிய முனுமுனுத்தபடி நகர்ந்து சென்றனர்.
'என்னே ஒரு துரதிஷ்டம்..! பாடம் செய்யப்பட்ட அந்த உடல் பறைசாற்றும் பாடத்தை, இறைவனையும் அவன் தூதரையும் நிராகரிப்பவர்களுக்கு உறைந்த சாட்சியாய் அத்தாட்சியாய்
அந்த உடலை நூற்றாண்டுகளாய் இறைவன் பாதுகாப்பதை அறியாதவர்களாய்...'
இவை வாசகம் அல்ல.. சாசனம்.
சமயங்களை கேலி செய்யும் விஞ்ஞானிகளை விக்கித்துப் போக வைத்த இந்த வாசகத்தை ஒரு சராசரி மனிதன் கூறவில்லை. பிரான்ஸின் தலைசிறந்த விஞ்ஞானி இதனை கூறியதுதான்
இத்தனை பரபரப்பை உண்டாக்கியது.
அவர் அவ்வாறு கூறியதன் பின்னனி என்ன?
1981-ல் ஃபிரன்ஸிஸ்கோ மித்ரா பிரன்ஸின் அதிபரான போது எகிப்திய அரசாங்கத்திடம் தொல்லியல் ஆய்வுக்காக உலகின் மிகக்கொடிய கொடுங்கோல் அரசன் என்று கூறப்படும்
'பாரோஹ்' என்ற ஃபிர்அவ்னின் உடலை தந்துதவும்படி வேண்டிக் கொண்டார்.
அதன்படி அந்த உடல் பிரான்ஸின் ஆய்வுக்கூடத்தை அடைந்தபோது அதிபர் உட்பட அங்கிருந்த அணைவரும் சிரம் தாழ்த்தி ராஜமரியாதையுடன் அதை வரவேற்றனர்.
அதன் பின் அந்த மம்மி ஆய்வுக்கூடத்தின் ஒரு பிரத்தியோக பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விஞ்ஞானி மாரிஸ் புகைல் தலைமையில் பல்வேறு தொல்லியல் மற்றும் உடற்கூறியல்
ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது.
குறிப்பாக அந்த மம்மி எவ்வாறு இறந்தது என்பதை அறிய விஞ்ஞானிகள் மிகுந்த நாட்டம் கொண்டனர்.
இறுதியாக அன்றிரவு வெளியிடப்பட்ட விஞ்ஞானிகளின் அறிக்கையில் 'அந்த உடலில் எஞ்சியுள்ள உப்பு அது கடலில் மூழ்கடிக்கப்பட்டு இறந்து பிறகு உடனடியாக மீட்கப்பட்டு சிதையாமல்
பாதுகாக்கப்பட்டிருக்கிறது' என்பதை வெளியிட்டனர்.
விஞ்ஞானி மாரிஸ் புகைலுக்கு புலப்படாத ஒரு விஷயம் 'கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மற்ற உடல்களைவிட இந்த உடல் மற்றும் எப்படி எவ்வித சிதையும் அடையாமல் இத்தனை
காலம் தாக்குப்பிடித்தது?' என்பதுதான்.
எனவே அவருடைய இறுதி அறிக்கையில் 'பாரோஹ்(ஃபிர்அவ்ன்) உடல் மட்டும் உயிர் பிரிந்தவுடன் ஏதோ ஒரு புதிய முறையில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்'
என்று எழுதினார்.
அப்போது அங்கிருந்த சக விஞ்ஞானி ஒருவர் 'முஸ்லிம்கள் இந்த மம்மியின் மரணம் பற்றி தங்கள் வேதப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்று ஏதோ கூறுகிறார்கள்' என்று கூறினார்.
அதை மறுத்த மாரிஸ் புகைல் 'இன்றைய விஞ்ஞான வளர்ச்சியும் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் மற்றும் கம்ப்யூட்டர்கள் துணையும் நாம் கையாண்ட உத்திகளும் இல்லாமல் இதை
யாரும் கூறமுடியாது' என்றார்.
ஆனால் அந்த சக விஞ்ஞானியோ 'முஸ்லிம்களின் வேதப்புத்தகமான 'குரானில்' பாரோஹ்(ஃபிர்அவ்ன்) கடலில் மூழ்கடிக்கப்பட்டு பின்வரும் மனிதர்களுக்கு அத்தாட்சியாய் அவன் உடல்
பாதுகாக்கப்படுகிறது' என்ற செய்தி இருப்பதை உறுதிப்படுத்தவும் மாரிஸ் புகைல் வியப்பில் ஆழ்ந்தார்.
200 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட ஒரு உடலைப்பற்றி 1400 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புத்தகம் எவ்வாறு விவரிக்க முடியும்?
சில பத்தாண்டுகளுக்கு முன்புதான் அறியப்பட்ட எகிப்திய நாகரிகத்தைப் பற்றிய குறிப்புகளை அதற்கு 1400 ஆண்டுகள் முந்தைய புத்தகத்தில் எவ்வாறு காணமுடியும்?
தமது வேதமான பைபில் கூறியதை குர்ஆனின் கூற்றோடு கவனமாக ஒப்பிட்டு பைபில் பாரோஹ் கடலில் மூழ்கடிக்கப்பட்டதை பற்றி மட்டுமே கூறுவதையும் குர்ஆன் அவனுடைய
மரணத்தையும் மரணத்திற்கு பின் அவனுடல் பாதுகாக்கப்படுமென்று கூறுவதையும் அறிந்து பிரமித்தார்.
'இதோ என் முன் வைக்கப்பட்டிருப்பதுதான் மோஸசை(மூஸா) விரட்டிச் சென்றவனின் உடலா..?'
'இது இவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதை முஹம்மது(ஸல்) 1400 ஆண்டுகளுக்கு முன்பே அறிவாரா..?'
மாரிஸ் தன் தூக்கத்தை தொலைத்தார். பைபிலை கொண்டுவரச் சொல்லி அதன் பக்கங்களை புரட்டினார். 'பாரோஹ்வும் அவன் சேனைகளும் கடலில் மூழ்கி மாண்டனர். அவர்களில்
எவரும் உயிர் பிழைத்தாரில்லை' என்று மட்டுமே இருந்ததையும் பாரோஹ்வின் உடல் அழியாமல் பாதுகாக்கப்பட்ட விபரம் அதில் இல்லாதிருப்பதையும் கண்டார்.
அதன் பிறகு விஞ்ஞானிகள் அந்த மம்மியை எகிப்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்தனர். ஆனால் மாரிஸ் புகைல் மட்டும் ஓயவில்லை. இந்த மம்மி பாதுகாக்கப்படும் என்ற விபரங்களை
முஸ்லிம்கள் ஏற்கெனவே அறிவார்கள் என்ற உண்மை அவரை ஓய விடவில்லை.
அவர் உடனே எகிப்துக்கு பயணமானார். எகிப்தின் முஸ்லிம் உடற்கூறியல் விஞ்ஞானிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி பாரோஹ்வின் உடல் இறப்புக்கு பின் புதிய முறையில் பாதுகாக்கப்
பட்டிருக்கிறது என்ற தமது கண்டுபிடிப்பை பற்றி விவாதித்தார்.
ஒரு முஸ்லிம் விஞ்ஞானி அமைதியாய் எழுந்து குர்ஆனின் ஒரு பக்கத்தை புரட்டி சில வாசகங்களை காட்டினார்.
அந்த வாசகத்தை படித்த மாரிஸ் புகைல் உறைந்து போய் எழுந்து நின்றார்.
அவர் வாய் மெல்ல முனுமுனுத்தது 'நான் இந்த குர்ஆனை நம்புகிறேன்.. இந்த குர்ஆன் கூறும் இஸ்லாத்தையும் நம்புகிறேன்..'
அதன் பின் அவர் பிரான்ஸுக்கு ஒரு புதிய மனிதனாய் திரும்பிச் சென்றார்.
அந்த விஞ்ஞானியின் வாழ்வை புரட்டிப்போட்ட அந்த வாசகம்..
10:92 எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி
அலட்சியமாக இருக்கின்றார்கள்' (என்று அவனிடம் கூறப்பட்டது).

