முஸ்லீம் செய்திகள்
அமைதி விரும்பாத இந்துத்துவவை பாசிச வெறிக்கும்பல் தங்கள் கைவரி சையை விழுப்புரம் தக்வா பள்ளிவாசலின் மினாராவை உடைத்தும், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் வன்முறை வெறியாட்டம் துவக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 11.10.2008 அன்று விழுப்புரம் சிற்றேரிக் கரையில் மஸ்ஜிதே தக்வா பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளி நீண்ட நெடுங்காலமாக தமிழக வக்ப் வாரியத்தின் காலி இடமாக இருந்ததையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் நாற்புற மும் கோட்டைச் சுவரை எழுப்பி நடுவில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. இரு புறமும் உயர்ந்த கேட்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது. அதைச் சுற்றி லும் 150 முஸ்லிம் ஏழைக் குடும்பங்கள் குடியிருப்புகள் உள்ளன. அதற்கு சற்று தூரத்தில் கிறித்தவ மக்களின் கல்ல றைத் தோட்டமும் உள்ளது. கிறித்தவக் கல்லறைகள் பலவற்றை பாசிசக் கும்பல் உடைத்து இழிவுபடுத்தியது. அதற்கு சில தினங்கள் கழித்து இப்பள்ளியின் நுழைவாயில் கேட் மினாரா உடைக்கப் பட்டுள்ளது. பள்ளியின் சன்னல் கண்ணா டிகளும் உடைத்து நொறுக்கப்பட்டுள் ளன. காலையில் சுப்ஹு தொழுகைக் குச் சென்ற இமாம் மற்றும் ஜமாத்தார் கள் அதிர்ச்சியுற்றனர். பள்ளிவாசல் காம்பவுண்ட்டைச் சுற்றிலும் ஏராளமான லோக்கல் சாராய பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன.
இத்தகவலை அறிந்த தமுமுக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைது விழுப் புரம் விரைந்து தமுமுக மாவட்ட அனைத்து நிர்வாகிகளிடமும் ஜமாத்தார்களிடமும் விசாரித்து இரவு ஏழு மணிக்கு சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத் துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அனைத்துக் கட்சி பிரமுகர்களின் கருத்தையும் கேட்டறிந்தார். ஒட்டு மொத்த கட்சி நிர்வாகிகளும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதத்தின் பெயரால் இழிசெயலில் ஈடுபடும் பாசிச இந்துத்துவ சக்திகள் உடனடியாக காவல்துறையால் கண்டறியப்பட்டு தமிழக அரசின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக் களுக்கு இடமில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படாவிட் டால் அனைத்துக் கட்சிகள் சார்பில் விழுப்புரம் காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
-----------------------------------------------------------------------------
தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கைக் கண்டித்து சென்னையில் மாபெரும் பேரணி மற்றும் தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் சிற்றுரையாற்றி பேரணியை துவக்கி வைக்க, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் பி.ஜைனுல் ஆபிதீன், முன்னால் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம் பாக்கர், முன்னால் மாநிலச் செயலாளர் லுஹா, மாநிலத் துணைத் தலைவர் அல்தாஃபி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
கடந்த சில மாதங்களாக தமிழக அரசு முஸ்லிம்களை நசுக்கும் விஷயத்தில் கடுமையான தீவிர போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. முஸ்லிம்களின் சட்டப்பூர்வ உரிமைகளை பரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றது.
• முஸ்லிம்கள் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பம் செய்தால் அதன் விசாரணை அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தராமல் வேண்டுமென்றே வருடக் கணக்கில் தாமதப்படுத்தும் காவல் துறையின் அராஜகப் போக்கு.
• மத்திய அரசாங்கம் முஸ்லிம்களுக்காக வழங்கும் கல்வி உதவிகளை வழங்காமல் மாநில அரசு தட்டிக் கழிப்பது.
• அடிப்படை வசதிகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் ஜனநாயக வழியில் போராடும் அமைப்பு சாரா முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்துவது.
• தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அவர்கள் மீதே வழக்கு போடுவது.
• முஸ்லிம்களை மதத்தைச் சொல்லி போலிசார் கொச்சைப்படுத்தி பேசுவது.
• மத ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம் தெருக்களில் இஸ்லாத்தையும், முஸ்லிம் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் கோஷம் போடுவதை அனுமதிப்பது, அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை வேடிக்கைப் பார்ப்பது.
• இலவச நிலம், இலவச வீடு உள்ளிட்ட எல்லா இலவச திட்டங்களிலும் முஸ்லிம்களின் சதவிகிதத்திற்கு ஏற்ப உரிமை வழங்க மறுப்பது.
• முத்துப்பேட்டை பள்ளிவாசலுக்குள் நுழைந்து நோன்பாளிகள் மீது கண்மூடித்தனமாக போலிசார் தாக்குதல் நடத்தியது.
• 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து விட்டு 7 ஆண்டுகளும் அதற்கு மேலும் விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களை மட்டும் விடுதலை செய்யாமல் பாரபட்சம் காட்டியது.
• இந்து கோவில்களில் பூசாரிகளாக பணியாற்றுவோர் நலனுக்காக வாரியம் அமைத்து விட்டு, பள்ளிவாசலில் பணியாற்றும் முஸ்லிம் மதகுருமார்களான உலமாக்களுக்காக நலவாரியம் அமைக்க மறுப்பது
-----------------------------------------------------------------------
ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பைன்ஸா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை துர்கா சிலை ஊர்வலம் நடந்தது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. அதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.பதட்டம் தொடர்ந்ததை அடுத்து பைன்ஸா நகரிலும் அதன் சுற்றுபுற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பைன்ஸா நகருக்கு 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடோலி கிராமத்துக்குள் கலவர கும்பல் புகுந்து வன்முறைய கட்டவிழ்த்தது. கிராமத்தில் இருந்த சில வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர்.
