இதுதான் துபாய்!அவலங்களின் மொத்த உருவம்! !சகோதரர்களின் உள்ளக் குமுறல்கள்!!!
M.I.Naina :நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் இத்தாலிய நாட்டைச் சார்ந்த பத்து பேர் கொண்ட ஒரு குழு சென்ற நோன்புப் பெருநாள் விடுமுறையை அவர்கள் நாட்டைப்போல் ஜாலியாக கொண்டாட துபாய்க்கு சென்று வந்தார்கள்.அப்படி துபாய் சென்று வந்த அவர்களிடம் பயண அனுபவம் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னது, துபாயில் எல்லாம் கிடைக்கிறது குறிப்பாக எங்கள் நாட்டை விட எல்லாவற்றிலும் மிகவும் வெளிப்படையான நாடாக இருக்கிறது என்றார்கள். அதன் மூலம் துபாயின் வண்டவாள, தண்டவாளங்களை தெரிந்து கொண்டேன். குர்'ஆனும், ஹதீஸும் தானேத் தவிர முஸ்லிம்களுக்கு அரபுநாடுகள் முன்மாதிரியல்ல அவர்களின் பழக்க,வழக்கங்களை நாம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.உலக திருக்குர்'ஆன் மனனம் மற்றும் ஓதும் போட்டிகள் மட்டும் நடாத்தி அதற்குரிய பரிசுகளும், பொற்கிளிகளும் கொடுத்து விட்டால் இறைவனின் அருளும், அவன் கருணையும் தானாக இறங்கி வந்து அவர்களைத் தாலாட்டும் என்றுநினைத்துக் கொண்டார்கள் போலும்?மேகத்தில் தலை துவட்டிக்கொள்ளும் வானுயர்ந்த கட்டிடங்கள் இறைவனுக்கு கண்குளிர்ச்சியையும், சந்தோசத்தையும் தந்து விடப்போவதில்லை. மாறாக உள்ளத்தின் உயர்ந்த இறை பக்தியே அவனுக்கு மிகவும் உவப்பானதாக இருக்க முடியும்.
Ansari: சில மாதங்களுக்கு முன் துபையின் நாளேடான கல்ஃப் நியூசில் முதல் பக்கத்தில் கட்டமிட்டு வந்த செய்தியாவது: அமெரிக்க ஹாலிவுட் செக்ஸ்பாம்(BAYWATCH) நடிகை பமேலா ஆன்டர்ஷனை ஒரு வசதியான எமிராத்தி (UAE குடிமகன்)Dating செய்திருக்கிறானாம்.புகழ் பெற்ற ஹாலிவுட் பிரபலத்தை UAE குடிமகன் டேட்டிங் செய்வது இதுவே முதல் முறை என்று மார்தட்டி எழுதியிருந்தது.விபச்சாரத்தை(ஜினாவை) பெருமைத் தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தி செய்தியாக வெளியிட்ட கேடு கெட்ட நாடு.ஏற்கனவே இங்கு விபச்சாரம் தலைவிரித்தாடுகிறது.அமெரிக்காவின் அடிவருடி துபைதான்.புஸ்ஸின் வருகைக்கு ஒரு நாள் அரசு விடுமுறை அறிவித்த நாடு இது ஒன்றுதான் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை இந்நாட்டுக்கு மிகப் பொருந்தும்.
Riyas: துபாயில் எல்லா துறைகளிலும் வேலை பார்ப்பது அரபிகள் அல்ல மற்ற நாட்டு மக்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அபு: அதிரை எக்ஸ்ப்ரஸ் மீதான தடை - தினமலருக்கு மீண்டும் அனுமதி அரபிகளுக்கு மூளை முட்டிக்கு கீழே இருக்கிரது என்பதைக் காட்டுகிறது.சரியான காட்டுப் பயளுவ...
அறிவாளி: துபாயை ஏன் ஒரு முஸ்லிம் நாடு என்று பார்க்கிறீர்கள்.ஒரு அரபு நாடு என்று பாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
Abdulkareem: துபைகாரன் இவ்வுலக வாழ்வை நேசிக்கும் ஒரு படோபகாரி என்பதும்,உலக நாடுகளுக்கு வியாபாரம் மூலம் ஆடம்பரம்,வீண் விரயம் செய்து சொகுசாக வாழவேண்டும் என் என்னும் அரசுதான் அது என்பதும் கண்கூடு.இவர்கள் அல்லாஹ்விடம் இவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.அங்குள்ள நம் மக்கள் துபையை காரி துப்புங்கள்.
