மருத்துவ உதவி வேண்டுகோள்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்
நமதூர் சின்ன நெசவுத்தெருவைச்சார்ந்த சகோதரர் துல்கருணைன் அவர்களது மகன் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானார்.
அவ்விபத்தில் அவரது கால் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இதுவரை ரூ மூன்று இலட்சம் வரை செலவு செய்திருக்கிறார்கள். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது. வாலிப வயதினரான இவர் சம்பாதித்து காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள இக்குடும்பத்தினருக்கு, இவர் முழுமையாக குணமடைய மேலும் ஓரு இலட்சம் வரை மருத்து செலவினங்களுக்காக தேவைப்படுகிறது. கடும் உழைப்பாளியான இவர் விரைவில் குணமடைய நாம் துஆ செய்வதோடல்லாமல் மிகவும் வறுமையில் வாடும் இக்குடும்பத்தினர் துயர் துடைக்க வாரி வழங்க அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
நல்லுள்ளம் படைத்த வாசகர்கள் தாராளமாக நிதியுதவியளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் நேரிடையாக அனுப்பும் பட்சத்தில் அதன் தகவலை அதிரை எக்ஸ்பிரஸிற்கு மின்னஞ்சலிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
அதிரை எக்ஸ்பிரஸ்

