கலாச்சாரமும் இன்றைய பெண்களும்
பிஸ்மில்லாஹ்..
அண்பார்ந்த சகோதரர்களே முத்லில் இதை சொடுக்கி பார்த்து விட்டு பிறகு நமது செய்திக்கு வாருங்கள்.
http://www.tamilanexpress.com/Investigate/investigate1.asp
இது நடந்தது வேறு எங்குமில்லை முஸ்லீம்கள் அதிக அதிகமாக வாழும் வேலுரிதான், மதரஸக்கள் நிறைந்த ஊர் மேல் விசாரம் இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளது.இப்பெண்ணுக்கு வயது ஒன்றும் அதிகம் இல்லை சுமார் 12 தான். காவல் துறை சொல்லுகிறது காதல் என்று, குடும்பத்தின்ரோ கடத்தல் என்கிறனர்முதலில் கதலுக்கு வருவோம், 12 வயதில் எந்த பெண்ணுக்காவது கதல் வருமா?. சினிமாவில் தான் அப்படி வரும் அப்படி பார்த்தால் இப்பெண் அதிகமாக சினிமா டி.வி பார்த்துயிருக்கவேண்டும் சினிமாவில் தான் பள்ளி கூடத்திற்கு செல்லும் 12 வயது பெண் காதலிக்கும் ஒடிப்போகவும் செய்யும். இது முதல் கராணம்.
இதற்குதான் மார்க்க கல்வி அவசியம், எப்படி உலக்கல்விக்கு முன்னுரிமை கொடுக்கிறமே ஏன் மார்க்க கல்வியிலும் குழந்தைகளுக்கு அவசியம் போதிக்க கூடாது போதித்து இருந்தால் இப்பாடி நடக்க வாய்ப்புகள் கிடையாது. நமதுரில் நடந்த சம்பவம் நண்பரும் அவரது குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து டி.வி. பார்த்துகொண்டிருந்தார்கள் அதில் அவரின் 10 வயதுக்கு மேற்பட்ட அவரது பெண் குழந்தையும் அடக்கம், நண்பரே இப்படி பார்ப்பது கூடாது என்றவுடன் அவர் சொன்னார் இல்லை எனக்கு என்று ரூமில் தனியாக டி.வி இருக்கு நான் தனியாக தான் பார்பேன் என்கிறார், அப்போ அவரது மகள் என்ன காட்சிகள் பார்க்கிறார்கள் என்று இவருக்கு தெரிய வய்ப்புயில்லை இது போல் பல பெற்றோர்கள் உள்ளனர்.
கேடு விளைவிக்கக் கூடியவற்றைத்தான் இஸ்லாம் தடைசெய்கிறது. அந்த வகையில் பாடல் இசைகருவிகளின் கெடுதிகள் அதிகம் உள்ளன.அவற்றை இப்னு தைமியா (ரஹ்)கூறுகிறார்கள், இசைக்கருவிகளினால் ஏற்படும் போதை மது வகைகளின் போதையைவிட மனதை அலைபாயவிடும் கடுமையானது. இசை ஒலி கேட்டவர்கள் மதிமயங்கும் போது இணைவைத்தல் கூட அவர்களுக்கு நடந்து விடும் ஆபாசம் அநியாயம் போன்றவற்றின் பக்கம் சாய்து விடுவார்கள் இதனால் விபச்சாரதில் (காதலில்) ஈடுபடுகின்றனர்
நம் குழந்தைகளுக்கு 5 ரூபாய் கொடுத்தலும் அதை எவ்வகையில் செலவு செய்கிறது என்பதை கண்காணிக்கவேண்டும், நம் கொடுத்ததைவிட அதிகமாக செலவு செய்துயிருந்தால் ஏது என்று விசரிக்க வேண்டும் கரணம் நமது பக்கத்திலே பல அயோக்கியர்கள் நாடகமாடி நடமாடி கொண்டிருக்கிறார்கள். பக்கத்துவீட்டு மாமா, அண்ணன் கொடுத்தார்கள் என்றால் அவர்கள் ஏன் கொடுத்தார்கள் என்று விசாரிக்கவேண்டும்,
Good touch செய்து கொடுத்தார்களா அல்லது bad touch (அல்ப புத்தி) செய்த்தற்காக என்று கவணிக்கவேண்டும், எந்த இடத்தில் தொட்டால் Bad touch எந்த இடத்தில் தொட்டால் Good touch என்று குழந்தைக்கு அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரியே பெண் குழந்தையாக இருந்தாலும் சரியே சொல்லி கொடுக்கவேண்டும், சில பள்ளி, கல்லுரிகளில் படிக்கும் சில குழந்தைகள் இது என் தோழி தந்தது இது தோழியின் வாப்பா துபாயிலேயிருந்து வந்ததற்கு ( தோழியின் வாப்பா இறந்து பல வருடமாகியிருக்கும்) தந்தது என்று சொன்னால் பெற்றவர்களே உள்ளுரில் தானே உள்ளீர்கள் போய் நீங்கள் அவசியம் விசாரிக்கவேண்டும்,
இது போல் நமது ஊரில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது இதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்,இது இரண்டாவது.மேலும் கடத்தப்பட்டது என்றால் இது கயவர்களின் சூழ்ச்சியே, அவர்கள் தான் இஸ்லாமிய இனத்தை வேறேடு ஒழித்து கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும். காவிகளின் கொள்கைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
பெண்கள் "பர்தா" இல்லாமல் பயணம் மேற்கொள்ளல் மேலும் பெண்கள் உரத்த சப்தத்துடன் பேசுதல், சிரித்தல், ஓர் பெண் அண்ணிய ஆடவரின் கையை பிடித்து வெட்கமின்றி உரையாடுதல் ஆண் பெண் குணநலன்களைக் கெடுக்கக் கூடிய கேவலமான புகைப்படங்களை பரிமாரிகொள்ளுதல்(sms, mms )இது பெரும் பாவங்களாகும். பெற்றோர்கள் இதையும் கவணிக்கவேண்டும்.
பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பும் போது கண்டிப்பாக மகரம்மன ஆண் துனையுடன் தான் அனுப்பவேண்டும். எங்கு செல்கிறார்கள் ஏன் செல்கிறார்கள் இந்த வேலைக்கு இவர்கள் தான் செல்லவேண்டுமா என்பதை அவசியம் ஆராயவேண்டும். முடிந்த வரை பெற்றோறே செல்லவேண்டும்.இதெல்லாம் முடியுமா என்பது விளங்குது நாம் அல்லஹ்வின் கட்டளையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின் பற்றினால் கண்டிப்பக முடியும்.குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் போதித்து நல்ல முறையில் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இதுவும் இஸ்லாமிய கடைமைகளில் ஒன்றுதான்.
chinnakaka
