video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

என்ன கொடுமை சார்,இது?

அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க, இந்தியாவில் சட்டம் கொண்டு வருவோம் என்று அந்த மாநாட்டில் அவர் பேசியதாக திடுக்கிடும் செய்தி வந்தது.ஆணும் ஆணும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் சேர்ந்து கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்த வக்கிர உறவிற்குப் பெயர்தான் ஓரினச் சேர்க்கை என்பதாகும். இதற்கு ஒரு தமிழ் மகன் ஆதரவா? எண்ணிப் பார்க்கவே இதயம் நடுங்கியது.

ஆணும் ஆணும் குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் குடித்தனம் நடத்தலாம். இது என்ன கொடுமை? அப்படியானால் குடும்ப உறவுகள், மரபுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வேண்டுமா?ஓரினச் சேர்க்கையை தமிழ்ச் சமுதாயம் அங்கீகரித்ததாகவோ ஆதரித்ததாகவோ எந்த இலக்கியத்திலும் எந்தத் தமிழ்க் கல்வெட்டிலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லி ஆங்கிலத் தொலைக்காட்சியைத் தற்செயலாகத் திருப்பினோம். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல் தந்தனர்.ஓரினச் சேர்க்கை என்ற அநாகரிகத்திற்கு ஆட்பட்டு விட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்மீது மத்திய அரசின் கருத்தை உயர்நீதிமன்றம் கேட்டது.

`ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.ஆனால், அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை, `ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

விரும்பிய ஓர் ஆணும் இன்னொரு ஆணும் குடும்ப வாழ்க்கை நடத்தினால் அவர்களுக்குத் தண்டனை தரக் கூடாது என்பதுதான் உயர்நீதி மன்றத்தை நாடிய ஓரினச் சேர்க்கையாளரின் கோரிக்கை. ஆஹா! அற்புதம்! அது வேதங்கள் கொள்கை கோட்பாடு என்று அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று உள்துறை தாக்கல் செய்த மனு கூறுகிறது. நல்லவேளை அந்தத் துறைக்கு சீழ்பிடித்த சிந்தனைகள் உதயமாகவில்லை.
`தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ரகசியமாக மறைமுகக் குடித்தனம் நடத்துகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் அளித்து விட்டால் பகிரங்கமாக வாழ்வார்கள். அப்படி வாழும் போது எய்ட்ஸ் நோய் வர வாய்ப்பில்லை. மறைமுக உறவுகள் அந்த நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்' என்பது மத்திய சுகாதாரத் துறையின் வாதம்.

ஓரினச் சேர்க்கை என்பது இந்திய கலாசாரச் சீரழிவின் உச்சகட்டம். அதனை அனுமதிப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டிற்கு விதிக்கப்படும் மரணதண்டனை. மேலைநாடுகளின் வக்கிர மனிதர்கள் வளர்க்கும் விபரீத உறவுகளுக்கு இங்கே அங்கீகாரம் தேடுகிறார்கள். வேரில் வெந்நீர் ஊற்றப் பார்க்கிறார்கள்.

லட்சம் பேருக்கு அதிகபட்சம் ஐம்பது பேர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். நாங்கள் இப்படித்தான் வாழ்வோம். எங்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தைத் திருத்துங்கள் என்று மேலைநாடுகளில் மைதானங்களிலும் பூங்காக்களிலும் அவர்கள் கட்டிப் புரள்கிறார்கள். அவர்களுக்காக வாதாட அடகுபோன சிலரும் இருக்கிறார்கள்.

மிருகங்களில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. பறவைகளில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. ஆனால் குப்பைமேட்டு மனிதர்கள் சிலர் அந்தக் கொடுமையான வாழ்க்கை நடத்துவோம் என்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கிருந்து எப்படிப் பணம் கொட்டுகிறது என்றே தெரியவில்லை. செல்வந்தர்களில் அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மேலைநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சிம்மாசனங்களையே வளைக்க முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள்.

நமது சட்டம் என்ன சொல்கிறது? ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 397வது சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று கூறுகிறது.ஆனால் அந்தத் தண்டனையை ரத்து செய்து அந்த அநாகரிக உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். அண்மையில் சென்னை வந்த அவர், ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பிரதமரைச் சந்திப்பேன். கோரிக்கை மனுக் கொடுப்பேன் என்றார்.

ஓரினச் சேர்க்கையை அனுமதித்த பின்னரும் எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் பரவாது என்பதற்கு அவர் என்ன உத்தரவாதம் தருகிறார்?பால்வினை நோய் பரவுவதற்கு ஓரினச் சேர்க்கை ஒரு காரணம் என்றால், அதனைத் தடுப்பதற்குத்தானே வழிவகை காண வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தக் கலாசாரச் சீரழிவை அங்கீகரித்தால் போதும் என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

ஒரு பக்கம் புகைபிடித்தால் 500 ரூபாய் வரை அபராதம் என்கிறார். இன்னொரு பக்கம் மானக்கேடான ஓரினச் சேர்க்கைக்கு விதிக்கும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இப்படி வேடிக்கை மனிதர்கள் விநோதத் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

சென்ற வாரம் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜை நிருபர்கள் சந்தித்தனர். `ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா' என்று கேட்டனர். `கர்மம் கர்மம்' என்றார் அவர். `பின்னர் ஏன் அதற்காக வாதாடுகிறார்கள்' என்று கேட்டனர்.`எனக்கு வயதாகிப் போய் விட்டது. அவர்களையே கேளுங்கள்' என்றார் பரத்வாஜ்.

ஒரு பக்கம் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் என்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் தாங்கள்தான் இன்றைய காவலர்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக நியாயங்களையே சவக்குழிக்கு அனுப்பும் வாதங்களை முன் வைக்கிறார்கள். அதிசய ராகம் பாடுகிறார்கள்.

SOLAI
*****************************************************
ஓரின சேர்க்கை பற்றிய எச்சரிக்கை,அதனால் கிடைத்த அல்லாஹ்வின் தண்டனை பற்றிய விவரங்கள் திருக்குர்ஆன் நெடுகிலும் காணலாம்.மேலும் 14:57 to 77 வரை உள்ள வசனங்களை பார்வை இடவும்.குர்ஆனில் எல்லா விஷயங்களுமே தெளிவு மற்றும் உண்மையை கொண்டு அல்லாஹ் இறக்கியுள்ளான்.முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத என் சகோதர,சகோதரிகளே குரானை படியுங்கள்,தெளியுங்கள்.சத்தியம் இஸ்லாம் மட்டுமே என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
----------------------------------------------------
குறிப்பு:அமைச்சர் அன்புமணிக்கு குரானில் கூறப்பட்டுள்ள ஓரினசேர்க்கை குறித்த எச்சரிக்கையை சகோதரர்கள் அனுப்பி வைத்து,மசோதா தாக்கல் ஆகாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டுமாய் வேண்டுகிறேன்.

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 11/22/2008 06:47:00 AM. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for என்ன கொடுமை சார்,இது?

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery