முருங்கைக்கீரை - சமையல்
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் தாவர இலைகளை கீரைகள் என்கின்றோம். பொதுவாக கீரை வகைகளில் கால்சியம் (Calcium), இரும்பு (Iron), கரோட்டீன் (Carotene), வைட்டமின் C (Vitamin C) போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், நமது அன்றாட உணவில், ஏதேனும் ஒரு கீரையை கண்டிப்பாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். முளைக்கீரை, முருங்கைகீரை, பசலிக்கீரை, அகத்திக்கீரை முதலானவை அதிக அளவில் உணவாய் உட்கொள்ளப்படுகின்றது.
கீரை வகைகளை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. இதன்மூலம் அதிகப்படியானச் சத்துக்கள் விரயமாவதை தடுக்கலாம். சத்துக்கள் எல்லா உணவுப் பொருட்களிலும் இருக்கின்றன. காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றில் உள்ள சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கின்ற காரணத்தினால், இந்த உணவுப்பொருட்களுக்கு அனைவரும் முக்கியத்துவம் தருகின்றனர்.
| |
முருங்கைக்கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். | |
பாசிப் பருப்பை லேசாக வறுத்து ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.. | |
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், சீரகம், உளுந்து போட்டு தாளித்து விட்டு பூண்டை தட்டி அதனுடன் சேர்த்து வதக்கவும். . | |
அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். | |
அதனுடன் கழுவி தண்ணீர் வடித்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை போட்டு உப்பு சேர்த்து கிளறி விடவும். கீரை நன்கு வதங்கி சுருங்கி விடும். | |
கீரையுடன் தேங்காய் துருவலை சேர்த்து ஒன்றாகும்படி கிளறி விடவும். | |
பின்னர் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாசி பருப்பை சேர்த்து நன்கு கிளறவும். | |
கிளறிய பின்னர் 5 நிமிடங்கள் தீயை மிதமாக வைத்து வேக விடவும். கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடவும். முருங்கைக்கீரை பிரட்டல் தயார். இந்த முருங்கைக்கீரைக்கு துவரம் பருப்பை வேக வைத்து செய்தால் சுவை இன்னும் அபாரமாக இருக்கும். இதை ப்ளைன் தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். முருங்கைக்கீரை செய்யும் போது நிறைய வெங்காயம், தேங்காய் சேர்த்து பிரட்டினால் நன்றாக இருக்கும். தேங்காய் அதிகம் சேர்ப்பதற்கு பதில் பாசி பருப்பு அல்லது துவரம் பருப்பை வேக வைத்தும் சேர்க்கலாம் தொகுப்பு : உம்முஅப்துற்றஹ்மான் |

