அஃமால்நாமாவும் ஹார்ட் டிஸ்க்கும்! (கற்றதும் பெற்றதும்)
சுமார் இருபது வருடங்களுக்கு முந்தையக் கணினிகளில் வன்தகடு (HARD DISK) அளவு 30-40 மெகாபைட்ஸ். இதில் இயங்குதளம் எனப்படும் OPERATING SYSTEM த்திற்குத் தேவையான கோப்புகளை வைத்திருப்பதால் கணினியில் செய்யப்படும் வேலைகள் ஐந்து அங்குலம் அளவுள்ள ஃப்ளாப்பி டிஸ்க்கில் சேமித்து வைப்பார்கள். பின்னர் ஃப்ளாப்பி அளவு மூன்றரை அங்குலமாகச் சுருங்கியதுடன் சேமிக்கப்படும் தகவல்களும் சற்று பாதுகாப்பாக இருந்தன.
குத்துமதிப்பாக இத்தகைய ப்ளாப்பித் தகடுகளில் A4 அளவுள்ள காகிதத்தில் பிரிண்ட் எடுக்கும் வகையில் 100-200 பக்கங்களுள்ள ஆவணங்கள் அல்லது டேட்டாபேஸ் எனப்படும் "தரவுத்தகவல்" சில ஆயிரங்களையோ சேமித்து வைக்கலாம்.

கணினி கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் மேலே சொன்னவற்றை யாரும் யூகித்திருக்க முடியாது. அவர்கள் அறிந்ததெல்லாம் மனிதனால் செய்ய முடிந்த கணக்கீடுகளை கணினியால் செய்யமுடியும் என்பது மனிதனின் செயல்வேகம் மற்றும் நினைவாற்றலைவிடச் சற்று அதிகமாகவும் கணினி உதவியால் செய்யமுடியும் என்பது மட்டுமே.கணினி உபயோகம் பரவலாகத் துவங்கிய காலத்தில், ஃப்ளாப்பிகள் இப்படி அசுர வளர்ச்சி அடைந்து டெரா பைட்ஸ் அளவுகளில் தகவல்களைச் சேமிக்க முடியும் என்று யாரேனும் அனுமானமாகச் சொல்லியிருந்தால் நகைப்புக்கு ஆளாகி இருப்பார்!
விஞ்ஞான ஆய்வுகளைச் சொன்ன எத்தனையோ அறிஞர்களின் கூற்றுகள் பைபிளில் சொல்லப்படாத ஒன்றென்று ஃபத்வா கொடுக்கப்பட்டு கழுவில் ஏற்றியும், விசக் கொடுத்தும் கொல்லப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் உண்டு. ஒலிபெருக்கியை சைத்தானின் குரலென்று தடுத்த உலமாக்களும் உண்டு! இப்படித்தான் பெரும்பாலான ஆய்வுகள் முதலில் எதிர்க்கப்பட்டும், பின்னர் நகைக்கப்பட்டும் இறுதியில் தவிர்க்கமுடியாது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்களுக்கும் கணினிக்கும் என்ன சம்பந்தம் என்று உங்கள் பகுத்தறிவு கேள்வி கேட்கலாம். அதில் சொல்லப்பட்டுள்ள 'பட்டோலை' குறித்து எவரும் கேள்வி கேட்கவில்லை. நம்பிக்கையாளர் என்று சொல்லப்பட்ட முஹம்மது நபியை நன்கு அறிந்து அவர் போதித்த இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர் சொன்ன அனைத்தையும் நம்பிக்கைக் கொண்டார்கள். மனிதனின் வாழ்நாளில் செய்த அனைத்துச் செயல்களும் பதிவு செய்யப்பட்டு, மறுமையில் பட்டோலையாக கரத்தில் வழங்கப்படும் என்பதை அக்கால மக்கள் சந்தேகித்திருந்தால் ஓரளவுக்கு நியாயமுண்டு. எனினும் அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டதைச் சொன்னபோது நம்பிக்கை கொண்டவர்கள் ஐயமின்றி ஏற்றார்கள்.

கையடக்க FLASH DRIVE வை அறிந்தபின்னரும் கையடக்க அஃமால்நாமா பட்டோலையை நம்ப மறுப்பது பகுத்தறிவின் பாரபட்சம்தானே!
பகுத்தறிவே இது நியாயமா?
<<<அபூஅஸீலா-துபாய்>>>

