விழிப்புணர்வு

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more

அதிரையில் கனமழையும் பணவேட்டையும்-உரையாடல்

பேய் மழை பெய்து ஓய்ந்திருக்கிறது அதிரையில். மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் ஊரில் நான்கைந்து நாட்களாக மின்சாரம் வினியோகம் தடைபட்டிருக்கின...

29 Nov 2008 | 0 comments | Read more
உள்ளூர் செய்திகள்

அதிரை எக்ஸ்பிரஸின் ரமழான் சிறப்பு பரிசுப்போட்டிக்கான அழைப்பு

இன்னும் ஓரிரு நாட்களில் புனித மிக்க ரமழான் மாதம் நம்மை வந்தடைய இருக்கிறது. அதனைப்போற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸின் வாசகர்கள் தங்களது கருத்...

30 Aug 2008 | 0 comments| Read more

அதிரை எக்ஸ்ப்ரஸ் எங்கே செல்கிறது?

அதிரை எக்ஸ்ப்ரஸில் சமீப நாட்களாக நடக்கும் கருத்துப்பரிமாற்றங்களால் இதை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிரை/அதிரைவாசிகள் குறித்தச...

20 Aug 2008 | 0 comments| Read more

குமுறும் குடும்பங்கள் ''பொய் வழக்கில் அல்லாடுறோம்.''

தமிழகமெங்கும் பயங்கரவாதிகள் குண்டு வைக்கவிருப்பதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து கோயில், குளம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று எல்லா இ...

17 Aug 2008 | 0 comments| Read more

கசக்கும் (அதிரை) உண்மைகள்

அதிரை ஆலிம்களைப் பற்றி கொஞ்சம் அரைகுறையாகவும் கொஞ்சம் அவதூறு கலந்தும் எழுதி இருந்தனர். பொத்தாம் பொதுவாக அதிரையில் நடக்கும் மார்க்கவிரோதச் ...

12 Aug 2008 | 0 comments| Read more

video


நிகழ்ச்சிகள்

உலகம்

அரேபியா முதல் அலாஸ்கா வரை,எட்டுத்திக்கும் பரவும் இஸ்லாம்!

1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்டது உண்மையாகிறது. இது அப்துல் ஹக்கீம் குயிக் அவர்கள் ஆற்றிய ஆங்கில உர...

25 Aug 2008 | 0 comments| Read more

அமெரிக்க முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?

அமெரிக்க தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாய கக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கவனம் செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி யின் ...

03 Aug 2008 | 0 comments| Read more

மோப்ப நாய்களுக்கு ஷூ கட்டாயம்

முஸ்லிம்களின் மத உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளில் சோதனைக்கு அழைத் துச் செல்லப்படும் மோப்ப நாய்க ளுக்கு இனி, ஷூ அணிவிக்க, பிரிட்...

11 Jul 2008 | 0 comments| Read more

GOD BLESS AMERICA!

கடந்த ஒரு வார காலமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 800இடங்களில் தீ பற்றி,அது பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை,வீடுகளை அழ...

28 Jun 2008 | 0 comments| Read more
BUSINESS

recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

AFRICA
ASIA
AMERICAS
EUROPE
RACING
FOOTBALL
BASKETBALL
SWIMMING

dailyvideo

நபி (ஸல்) இறுதி நாட்கள். உயர்ந்தோனை நோக்கி...

அழைப்புப் பணி நிறைவுற்று, இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி (ஸல்) அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன. ஹிஜ்ரி 10, ரமழான் மாதத்தில் நபி (ஸல்) இருபது நாட்கள் 'இஃதிகாஃப்| இருந்தார்கள். பொதுவாக 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பதுதான் நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இம்முறை வானவர் ஜிப்ரயீல் நபியவர்களிடம் வந்து இருமுறை குர்ஆனைப் பரிமாறிக் கொண்டார்கள். இறுதி ஹஜ்ஜில் 'இந்த ஆண்டிற்குப் பின் இந்த இடத்தில் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம்| என்று நபி (ஸல்) கூறியிருந்தார்கள். ஜம்ரத்துல் அகபாவில் நபி (ஸல்) நிற்கும் போது 'உங்களது வணக்க வழிபாடுகளை, ஹஜ் கடமைகளை என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். இந்த ஆண்டிற்குப் பிறகு நான் ஹஜ்ஜுக்கு வர முடியாமல் போகலாம்' என்றும் கூறியிருந்தார்கள். ஹஜ் பிறை 12ல் சூரத்துன் நஸ்ர் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இவற்றிலிருந்து நபி (ஸல்) இவ்வுலகை விட்டு விடைபெறப் போகிறார்கள், அவர்களது மரணச் செய்தி அவர்களுக்கு வந்துவிட்டது என்பதைத் தெளிவாக உணரலாம். துல்ஹஜ் முடிந்து முஹர்ரமும் முடிந்தது. ஸஃபர் மாதம் பிறந்தது. ஹிஜ்ரி 11, ஸஃபர் மாத தொடக்கத்தில் நபி (ஸல்) உஹுதுக்குச் சென்றார்கள். அங்கு ஷஹீதானவர்களுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சித் தொழுதார்கள். இருப்பவர்களுக்கும் இறந்தோருக்கும் விடை கூறுவது போல் நபி (ஸல்) அவர்களின் இச்செயல் அமைந்தது. பின்பு தங்களது பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி 'நான் உங்களுக்கு முன் செல்கிறேன். நான் உங்களுக்கு சாட்சியாளன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தற்போது எனது நீர் தடாகத்தைப் பார்க்கிறேன். எனக்கு பூமியிலுள்ள பொக்கிஷங்களின் சாவிகள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குப் பின் நீங்கள் இணை வைப்பவர்களாக மாறிவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை. இவ்வுலகத்திற்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) ஒரு நாள் நடுநிசியில் 'பகீஃ| மண்ணறைக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக பாவ மன்னிப்புத் தேடினார்கள். மேலும் 'மண்ணறைவாசிகளே! மக்கள் இருக்கும் நிலையைவிட உங்களது நிலை உங்களுக்கு இன்பம் பயக்கட்டும். இருள் சூழ்ந்த இரவுப் பகுதிகளைப் போன்று குழப்பங்கள் வரவிருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக தொடராக வந்து கொண்டிருக்கும். பிந்தியது முந்தியதைவிட மோசமானதாக இருக்கும்' எனக் கூறிவிட்டு 'நிச்சயமாக நாமும் உங்களிடம் வந்து சேருவோம்' என்ற நற்செய்தியையும் அவர்களுக்குக் கூறினார்கள். நோயின் ஆரம்பம் ஹிஜ்ரி 11, ஸஃபர் மாதம், திங்கட்கிழமை பிறை 28 அல்லது 29 ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்ள பகீஃ சென்றார்கள். நல்லடக்கம் செய்துவிட்டு திரும்பும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் தலைவலி ஏற்பட்டது. உடல் சூடு அதிகமானது. தலைமேல் கட்டியிருந்த துணிக்கு மேல் புறத்திலும் அனலை உடனிருப்போர் உணர்ந்தனர். பதினொரு நாட்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். 13 அல்லது 14 நாட்கள் கடினமான நோயில் கழித்தார்கள். இறுதி வாரம் நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகவே 'நாளை நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன்?' என துணைவியரிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியர் நபி (ஸல்) விரும்பிய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தனர். ஒருபுறம் ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி), மறுபுறம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) தாங்கலாக, கால்கள் தரையில் உரசிக் கோடு போட்ட நிலையில் ஆயிஷா (ரழி) வீட்டிற்குச் சென்றார்கள். அவர்களின் தலை துணியால் கட்டப்பட்டிருந்தது. ஆயிஷா (ரழி) வீட்டிலேயே தங்களது வாழ்வின் இறுதி வாரத்தை நபி (ஸல்) கழித்தார்கள். அன்னை ஆயிஷா (ரழி) சூரா ஃபலக், நாஸ் மற்றும் நபி (ஸல்) அவர்களிடம் தான் கற்ற துஆக்களை ஓதி ஊதி வந்தார்கள். பரக்கத்தை நாடி நபி (ஸல்) அவர்களின் கரத்தாலேயே அவர்களைத் தடவி விட்டார்கள். மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன்கிழமை உடல் நெருப்பாய் கொதித்தது. வலியும் அதிகமானது. அவ்வப்போது நபி (ஸல்) அவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது 'பல கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஏழு துருத்திகள் என் மீது ஊற்றுங்கள். நான் மக்களிடம் சென்று ஒப்பந்தம் வாங்கப் போகிறேன்' என்று கூறினார்கள். தோழர்கள் நபி (ஸல்) அவர்களை ஒரு பெரியபாத்திரத்தில் அமர வைத்து நீர் ஊற்றினார்கள். நபி (ஸல்) 'போதும்! போதும்!' என்று கூறினார்கள். அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் சூடு தணியக் கண்டார்கள். தலையில் தடிப்பான துணியைக் கட்டிக் கொண்டு போர்வையைப் போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள். அதுதான் நபி (ஸல்) அவர்களின் கடைசி சபையாகும். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு 'மக்களே! என்னிடம் வாருங்கள்' என்று கூறியபோது மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி (ஸல்) கூறியவற்றில் இதுவும் ஒன்று. 'யூத கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்! தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.' மற்றொரு அறிவிப்பில்: 'யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் அழிப்பானாக! தங்களது தூதர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை வணங்கும் இடங்களாக மாற்றி விட்டனர். எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முவத்தா மாலிக்) தன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம் தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன் வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக் கொள்ளட்டும். பின்பு மிம்பலிருந்து இறங்கி ளுஹ்ரைத் தொழ வைத்தார்கள். மீண்டும் மிம்பரில் ஏறி முன்னர் உரை நிகழ்த்தியவாறே பழி தீர்த்துக் கொள்ள வேண்டுவோர் பழி தீர்க்கக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து 'எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்' என்று கூறவே, 'ஃபழ்லே! நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்' என்று நபி (ஸல்) கூறினார்கள். பின்னர் அன்சாரிகளைப் பற்றி விசேஷமாக சிறப்பித்துக் கூறினார்கள்: 'அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.' மற்றொரு அறிவிப்பில், 'மக்கள் அதிகமாகினர். ஆனால் அன்சாரிகள் குறைகின்றனர். இறுதியில் அவர்கள் உணவில் உள்ள உப்பைப் போன்று குறைந்து விடுவார்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ, தீமையோ செய்யும் அளவு அதிகாரம் பெற்றால், அன்சாரிகளில் நல்லோன் சொல்லை ஏற்கட்டும். அவர்களில் தவறிழைப்போரை மன்னிக்கட்டும். (ஸஹீஹுல் புகாரி) இவ்வாறு உபதேசம் செய்த பின்பு 'ஓர் அடியாருக்கு இவ்வுலகில் உள்ளவற்றை உங்களுக்கு வழங்கட்டுமா? அல்லது மறுமையில் என்னிடமுள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா? என்று அல்லாஹ் வினவ, அதற்கு அந்த அடியாரின் அல்லாஹ்விடமுள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்' என்று நபி (ஸல்) கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூ சயீத் அல் குத் (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) அவர்களின் இப்பேச்சைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அழ ஆரம்பித்து 'எங்களது தந்தையரையும் தாய்மாரையும் உங்களுக்கு அர்ப்பணமாக்குகிறோம்' என்று கூறினார்கள். நாங்கள் அவரைக் கண்டு ஆச்சரியமுற்றோம். 'இம்முதியவரைப் பாருங்கள்! அல்லாஹ் ஓர் அடியாருக்கு உலக வசதிகளை வழங்கட்டுமா? அல்லது தன்னிடம் மறுமையில் உள்ளதை வழங்கட்டுமா என வினவினான் என்றுதான் நபி (ஸல்) கூறினார்கள். அதற்குத் தந்தையரும் தாய்மாரும் அர்ப்பணம் என்று கூறுகிறாரே?' என்று மக்கள் பேசினர். அபூபக்ர் (ரழி) எங்களில் மிகுந்த அறிஞராக இருந்தார். எனவேதான் இவ்வாறு கேட்கப்பட்ட அடியார் இந்தத் தூதர்தான் என்பதை புரிந்து கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: 'தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்ர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன். என்றாலும் அவருடன் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது. பள்ளியிலுள்ள எல்லா வீட்டினுடைய வாசல் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும் அபூபக்ருடைய வீட்டு வாசலைத் தவிர!' (ஸஹீஹுல் புகாரி) பக்கம் 109 நான்கு நாட்களுக்கு முன்பு மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி 'வாருங்கள்! நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்' என்று கூறினார்கள். அப்போது வீட்டில் இருந்த பலல் உமர் (ரழி) அவர்களும் ஒருவர். 'நபி (ரழி) அவர்களுக்கு வலி அதிகமாகிவிட்டது. உங்களிடம் குர்ஆன் இருக்கிறது. அல்லாஹ்வின் வேதமே உங்களுக்குப் போதுமானது' என்று உமர் (ரழி) மக்களிடம் கூறினார்கள். இதனால் அங்கிருந்தவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை நிலவியது. சிலர் 'நபி (ஸல்) நமக்கு எழுதித் தரட்டும்' என்று கூற, மற்றும் சிலர் உமர் (ரழி) கூறியது போல கூறினார்கள். இரு சாரார்களிடையே கருத்து வேற்றுமை விவாதமாக மாறவே 'நீங்கள் இப்போது என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்' என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) அன்றைய தினம் நபி (ஸல்) மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்: 1) யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். 2) இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும். 3) மூன்றாவது விஷயத்தை அறிவிப்பாளர் மறந்துவிட்டார். அது இம்மூன்றில் ஒன்றாக இருக்கலாம்: 1) அல்லாஹ்வின் வேதத்தையும் நபி வழியையும் நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். 2) உஸாமாவின் படையை அனுப்பி விடுங்கள். 3) தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் பேணுங்கள். தனக்கு நோய் கடினமாக இருந்தும் அன்றைய தினத்தின் (மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் வியாழக்கிழமை) தொழுகை அனைத்தையும் நபி (ஸல்) அவர்களே தொழ வைத்தார்கள். அன்றைய தினத்தின் மஃரிபு தொழுகையில் 'வல் முர்சலாத்தி உர்ஃபன்| என்ற சூராவை ஓதித் தொழ வைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி) அன்றைய தினம் இஷா நேரத்தில் மேலும் நோயின் வேகம் அதிகமானது. நபி (ஸல்) அவர்களால் பள்ளிக்கு வரமுடியவில்லை. இந்நிலையைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதைக் கேட்போம். 'மக்கள் தொழுதார்களா?' என நபி (ஸல்) கேட்டார்கள். 'இல்லை இறைத்தூதரே! தங்களை எதிர்பார்க்கிறார்கள்' என்றோம். எனக்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள் எனக் கூற, நாங்கள் தண்ணீர் வைத்தோம். நபி (ஸல்) குளித்து விட்டு செல்வதற்கு முனைந்தார்கள். ஆனால், அவர்களை மயக்கம் ஆட்கொண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து 'மக்கள் தொழுதார்களா?' என்றார்கள். நாங்கள் முதலில் கூறியது போல் இம்முறையும் பதில் கூறினோம். மீண்டும் தண்ணீர் வரவழைத்து முன்னர் போல குளித்தார்கள். பிறகு, நபி (ஸல்) அபூபக்ரை தொழ வைக்கும்படி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) அப்போதிலிருந்து பதினேழு நேர தொழுகைகளை நபி (ஸல்) நோயுடன் இருக்கும் போது அபூபக்ர் (ரழி) மக்களுக்குத் தொழ வைத்தார்கள். (வியாழன் இஷாவிலிருந்து திங்கட்கிழமை ஃபஜ்ரு தொழுகை வரை) 'இந்நாள்களில் அபூபக்ர் (ரழி) அவர்களைத் தொழ வைக்க சொல்ல வேண்டாம், காரணம், மக்கள் அதைத் துர்குறியாக எடுத்துக் கொள்வர்' என ஆயிஷா (ரழி) மூன்று அல்லது நான்கு முறை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அதனை மறுத்து விட்டார்கள். 'நீங்கள் தானே யூசுஃபுடைய அந்தத் தோழிகள். அபூபக்ரே மக்களுக்கு தொழ வைக்கட்டும்' என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) மூன்று நாட்களுக்கு முன்பு... நபி (ஸல்) இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.' (தபகாத் இப்னு ஸஅது, முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா) இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு... அது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை. நபி (ஸல்) உடல் நலனில் முன்னேற்றத்தை உணர்ந்தார்கள், இரண்டு பேர் உதவியுடன் தங்களது அறையிலிருந்து பள்ளிக்கு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) ளுஹ்ர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்களை அபூபக்ர் (ரழி) பார்த்தவுடன் நகர்ந்து கொள்ள முயன்றார்கள். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என சைகை செய்தார்கள். பிறகு, என்னை அபூபக்ர் அருகில் அமர வையுங்கள் என்று கூற, அவர்களை அபூபக்ரின் இடப்பக்கத்தில் உட்கார வைத்தார்கள். நபி (ஸல்) தொழ வைக்க அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூபக்ர் (ரழி) தொழது கொண்டு, நபியவர்களின் தக்பீரை மக்களுக்கு கேட்கும்படி சப்தமிட்டுக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) ஒரு நாள் முன்பு... நபி (ஸல்) மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும், தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத் தர்மம் செய்தார்கள். தங்களுடைய ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அன்றிரவு நபி (ஸல்) அவர்களின் வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு பெண்ணிடம் கொடுத்தனுப்பி அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி ஆயிஷா (ரழி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் கவச ஆடை முப்பது 'சாஃ| கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅது, முஸ்னது அஹ்மது) வாழ்வின் இறுதி நாள் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் 'உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்| என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி) இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது: இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தால் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சித்தேன்' என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) மேலும், 'அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா' என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்) நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) 'எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!' என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள். முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். 'ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி (ஸல்) தூக்கி எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப போர்த்தினால் முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள். இந்நிலையில் சிலவற்றை நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.' (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்) தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி) மரணத் தருவாயில்... இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது: 'நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். 'நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?' என்று கேட்டபோது, 'ஆம்!' என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. 'நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?' என்று கேட்டேன். தலை அசைத்து 'ஆம்!' என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.' இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: 'நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். 'லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி) பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள். நபி (ஸல்) அப்போது 'இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்... அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி) கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன். ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன. நன்றி tamilmuslim.com

Posted by Unknown on 7/13/2008 11:27:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for நபி (ஸல்) இறுதி நாட்கள். உயர்ந்தோனை நோக்கி...

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Photo Gallery

Designed by Solaranlagen | with the help of Bed In A Bag and Lawyers