எதுவும் நேரலாம் எந்நேரமும்
போகிறேன் அம்மா!
வீட்டைவிட்டு வெளியில் போகும் போது,
போய் வருகிறேன் என்ற காலம் போய் விட்டது!
இன்றோ ஒவ்வொரு கனமும்...
தினமும் கவலையாயும்,கலவரமாயும் கரைகின்றது.
அமைதிப்பூங்கா என்ற சொல்லே கண்பட்டு, இன்று யுத்த பூமியாய்,
காற்றிலெல்லாம் ரத்த வாடையும், செத்த வாடையும்.
அந்த ரத்த வாடை நெருங்கிய பந்தத்தின்(ரத்தத்தின்) ரத்த வாடைகள்.
எந் நேரத்திலும் ஏதும் நேரலாம், நானும் கொலைசெய்யப்படலாம்,
உருட்டு கட்டையெல்லாம் இப்போதில்லை!
சூலாயுதமும், ஆர்.டி.எக்ஸ்.குண்டுகளும்,
மதவெறிகளின் கையாயுதங்கள்.
மரணிக்கலாம், அல்லது சாட்சி என்றும் கைது செய்யப்படலாம்.
பொய் வழக்கு போடப்படலாம்.
எல்லா துயரங்களை எதிர் கொள்ள தயார் படுத்திக்கொள் !
நானும் தான் தயாராகிவிட்டேன் துயரங்களை எதிர்கொள்ள-
ஒருகாள் வெளியில் போய் வருவதற்குள்...
அம்மா! நினைத்துப்பார்க்கவே நெஞ்சை அடைக்கிறது-
ஒரு வேளை நம் வீட்டுக்கு தீவைத்தோ! குண்டுவைத்தோ,
வீடு புகுந்து கலவர காரர்களால் வெட்டியோ....
அம்மா! நெஞ்செல்லம் வலிக்கிறது.
இப்படி தானமா ஸ்டைன் பாதிரியையும், அவர் மகன் சின்ன பாலகனையும்...
இது போல் எத்தனை உயிர்கள்....
அன்றும், இன்றும், நாளையும்....?
--தஸ்தகீர்