அதிரையில் ம.ம.க வின் மதுக்கடை மறியல் போர்.
"குடியும் போதையும் குடும்பத்திற்கு இழுக்கு
டாஸ்மார்க் கடைகள் தமிழ்நாட்டிற்கு அழுக்கு"
என்ற முழ்க்கத்தோடு 07032010 அன்று மாலை சுமார் 4:30 மணியளவில் அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் முக்கத்திலிருந்து துவங்கிய மனித நேய மக்கள் கட்சியின் மதுக்கடை மறியல் போரை ம.ம.க வின் மாவட்டப் பொருளாளர் உ.செய்யது அவர்கள் தலைமையேற்று நடத்தினார். அதிரை தொண்டரணி பொருப்பாளர் முக்தார் வரவேற்றார், நகர த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். துவக்கவுரையாற்றிய நகர பிரமுகர் அதிரை அன்வர் அவர்கள் எல்லா தீமைகளுக்கும் அடிப்படையானது மது அருந்தலே என்றும் மதுவிலக்கை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள் என்றும் நபிகளாரின் பொன்மொழிகளை நினைவுப்படுத்தினார். குரளோவியம் எழுதி திருவள்ளுவர் பெயரால் விருதுகளை பெறும் கலைருக்கு, திருக்குறளிள் "கல் உண்ணாமை" என்ற அதிகாரம் மறந்து விட்டதா என கேள்வி எழுப்பினர்ர். கொலை, கற்பழிப்பு மற்றும் சமூக தீமைகளுக்கு அடிப்படையானது மது அருந்துதலே என்பதை விளக்கிய அவர், இந்த சமூக தீமைகளுக்கு எதிராக போராடுவது நம் அனைவரின் மீதும் கடமை என்று கூறி தனது துவக்கவுரையை நிறைவு செய்தார்.
அதைத்தொடர்ந்து மதுக்கடைக்களுக்கு எதிரான கோசங்களுடன் ம.ம.க. வினர் பேரணியாக சென்றனர். பேருந்து நிலையம் அருகே மமக வின் செயற்குழு உறுப்பினர் யாசின் அவர்கள் கண்டன் உரையாற்றினார். முன்பெல்லாம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளை அரசு ஏற்று நடத்தியது, ஆனால் இப்போது கல்வி நிறுவங்கள், மருத்துவமனைகள் தனியார்
மயமாகிக்கொண்டிருக்கின்றன. சாராயக்கடைகளை அரசு ஏற்று நடத்திக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர் மக்கள் கூடும் இடங்களான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் உள்ள இடங்களில் டாஸ்மார்க் கடைகளை திறந்து
மக்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.
டாஸ்மார்க் கடைகளை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியவர் செல்வி. ஜெயலலிதா என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா ஆட்சியின்போது, டாஸ்மார் கடைகளுக்கு எதிராக திமுக வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களையும், சட்டமன்றத்தில் பேசியதையும் நினைவுபடுத்தி திமுக வின் முரண்பட்ட நிலைப்பாட்டை சுட்டிக்காட்டினார். மமக வின் சார்பில் முதல்வர் கலைர் அவர்களிடம் மனு கொடுத்தபோது அரசின் வருமானங்களில் (1/4) நான்கில் ஒரு பங்கு டாஸ்மார்க்கிலிருந்துதான் வருகின்றது என்று சொன்ன கலைரின் அக்கரையற்ற பதிலை குறிப்பிட்டார். தமிழகத்தின் 64 மையங்களில நடைபெறும் இந்த மறியல் போர், முதல்
கட்ட அறப்போட்டமே, பூரண மதுவிலக்கு அமலாகும் வரை மமக வின் தொடர் போராட்டம் ஓயாது என்று கூறி தனது கண்டன் உரையை நிறைவு செய்தார்.
மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படாமல் விடுக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மமக வினர் அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரையில் குப்பைகளை அகற்றாமல்
பன்றிகள், கொசுக்களை கட்டுப்படுத்தாமல் அவற்றின் மூலம் பரவும் நோய்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் மக்களை பாதுக்காக்கத்தவறிய அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு தொடராமல், சுகாதார பணிகளை விரைவுப்படுத்தக்கோரி எச்சரிக்கும் வண்ணம் நடந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக ஓரளவேனும் சுகாதார பணிகள் துரிதமாக நடைப்பெற்றன(இதனால் மமக விற்கு மக்கள் மத்தியில் பாரட்டுக்கள் கிடைத்தன) என்றாலும் கூட இப்போது நிகழ்ந்த மதுக்கடை
மறியல் போரால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் நம்மை ஆளுகின்ற திமுகவானது முன்பு மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவானது, மதுவிலக்குக்காக அரும்பெரும் தியாகங்கள் செய்த தந்தை பெரியார் வழிவந்து, பூரண மதுவிலக்கை விரும்பிய
அறிர் அண்ணா அவர்களை தலைவராக பெற்றிருந்த கட்சிதான். என்றாலும் அன்று கொள்கை நம்மை ஆள முற்பட்டன ஆனால் இன்று குடும்பம் நம்மை ஆள முற்படுகிறது என்கின்றனர் மக்களில் சிலர். இன்னும் சிலரோ, திமுக அல்லி வீசும் கவர்ச்சித்திட்டங்களுக்கு காசு
பார்க்கத்தான் மதுவிலக்கு கொள்கைக்கு முரணாக மதுக்கடைகளை நடத்துகிறார்கள் என்கின்றனர்.
எது எப்படியாயினும் தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்கான வருவாயை நல்ல வழியில் பெருக்குவதற்கு அரசு முனைப்பு காட்ட வேண்டும். பல பேர் தாலியை அறுத்து, சில பேர்
பகட்டாக வாழ்வது நம் தமிழ் பண்பாட்டிற்கு இழுக்கானது இதை உணர்ந்து நம் அரசு தம் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வராததை மமக வின் மதுவிலக்கு போராட்டமெல்லாம்
செவிடன் காதில் ஊதிய சங்குகளாய்த்தான் ஒலித்துக்கொண்டிருக்கும்.
அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் "உள்ளூர் நிழ்வுகள்" பகுதிக்காக
போராட்டக்களத்திலிருந்து அதிரை எம்.ஆர்(முஜிபுர் ரகுமான்)