video


recent scroll

news

blowup

carousel

top bar content

+++Your Text Here...+++
(X)  

Recent Posts

dailyvideo

அல்லாஹ்வே! உன்னிடமே மன்றாடுகிறோம்,கெஞ்சுகிறோம்,எங்கள் மக்களை காப்பாயாக!உதவி புரிவாயாக!!

அஸ்ஸலாமு அலைகும்!

இன்று நம் சமுதாயத்தில் நடைபெறும் தேவையற்ற விஷயங்களினால் ஈமானே பரிபோகிவிடும் என்பதை மனதிற்கொண்டு அவற்றை தவிர்ந்துகொள்ளும் விதத்தை குரான் ஹதீதை அடிப்படையாக வைத்து நானும் தெளிவுபெறலாம் என்று தமாமில் நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது சுபுஹு தொழ சென்றேன்,

ஆனால் அந்த தொழுகையில் குனூத்து ஓதுவதை கேட்டபின் உள்ளம் உறுகுளைந்து ஏன் அனீதமிழைக்கப்படும் பாலஸ்தீனை பற்றி எழுதி இஸ்லாமிய சகோதரர்க்ளின் உள்ளக்குமுறல்களை ஏகோபித்தவகையில் வல்லோன் அல்லாஹ்விடம் அரபு நாடுகள் என்றில்லாது உலக முஸ்லிம்கள் அனைவரின் இருகறங்களும் எல்லா நேர தொழுகையிலும் ஏந்தப்படவேண்டும் என்று உந்தப்பட்டேன்.

ஆமாம் சகோதரர்களே, சில இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அது சரியோ தவரோ நொண்டி குதிரைக்கு சருக்கியது ஒரு சாக்கு என்பதைபோல் எதையாவது கூறி ஒரு சில நாட்களில் தீர்வு செய்கின்றனர்.

ஆனால் எவ்வித காரணமும் இன்றி அனீதமிழைக்கப்பட்டு எங்கே தீர்வு என்று எங்கள் பாலஸ்த்தீன இஸ்லாமிய உயிர்கள் சேதப்படுத்தப்படுவது ஏன் என்பதை என்னும்போது ஏதோ ஒருகொள்கையில் இருந்துகொண்டு {த.மு.மு.க-த.த.ஜ-தப்லீக் போன்றோர்} தாவா பனியை செய்யக்கூடிய சிலர் இங்கு தவ் அத் செய்தால் அல்லாஹ் எங்காவது ஒரு மூலையில் யாருக்காவது ஹிதாயத்தை கொடுப்பான் என்று சொன்ன கூற்று உண்மையென்றால் - யா அல்லாஹ் பாலஸ்த்தீனத்தில் இஸ்லாமிய உயிர்கள் கோரமாக கொள்ளப்படுவதற்க்கு இங்கு இருந்து கொண்டு என்போன்றோர் செய்யும் தவறுகள்தான் காரனம் என்று உள்ளம் நடுங்குகிறது.


யாஅல்லாஹ் இத்தனை அவகாசங்கள் தந்தாய் இதுவே போதும் ரஹ்மானே.இனிமேல் எவ்விதத்திலும் உனக்கு புற்ம்பாக எதையும் செய்ய்மாட்டோம் என்று உன்னையே சாட்ச்சியாக்கி சபதமெடிக்கிறோம்.


யாஅல்லாஹ் காஜாவில் பிறக்கும் பச்சிலம் குழந்தையின் இரத்தவாசனை மாருவதற்க்குமுன்னால் அடங்காபிடாரி இஸ்ரவேலனால் அனீதமாக கொல்லப்படுவதை இனியும் பொறுக்க முடியாது

ஒரு தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பிஞ்சு குழந்தை பசியால்- அருந்தாயின் அமுதுக்காக ஏங்கி கேட்பதைபோல் நாங்களும் கேட்கிறோம்


இனியாவது பாதிக்கும் மக்களை பற்றி கவலைப்படாமலும், ஆடம்பரமாகவும்,திமிராகவும், சுற்றிதிரியும் அரேபிய மன்னர்களின் உள்ளங்களில் ஒரு திருப்பத்தை தந்தருள்வாயா ரஹ்மானே! என்று தவிப்புடன்...........!


A.H.அப்துர் ரஷீத் ரஹ்மானி
-------------------------------------------------

சகோதரர்களே,ஒவ்வொரு தொழுகையிலும் குனூத்து ஓதி துவா செய்யுங்கள், உங்கள் முஹல்லா பள்ளியிலும் சொல்லி துவா செய்ய சொல்லுங்கள்.இது போன்ற கடினமான சூழ்நிலையில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காட்டித்தந்த வழி முறை இது.

Posted by இப்னு அப்துல் ரஜாக் on 1/05/2009 01:13:00 AM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for அல்லாஹ்வே! உன்னிடமே மன்றாடுகிறோம்,கெஞ்சுகிறோம்,எங்கள் மக்களை காப்பாயாக!உதவி புரிவாயாக!!

Leave comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

Recent Entries

Recent Comments

Photo Gallery